India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஜூன் மாதத்திற்கான ரேஷன் பொருள்களை மக்கள் இந்த மாதமும் பெறலாம் என உணவு வழங்கல் துறை ஏற்கெனவே அறிவித்திருந்தது. இந்நிலையில், ஜூன், ஜூலையில் அரிசி, பருப்பு, பாமாயில் போன்றவற்றை வாங்காதவர்கள் நாளைக்குள் வாங்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மக்களுக்கு தடையின்றி வழங்கும் வகையில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதால், அனைவருக்கும் அனைத்து பொருள்களையும் வழங்க ரேஷன் கடை ஊழியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கைக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி மிக குறைவான ரன்னை இலக்காக நிர்ணயித்துள்ளது. இலங்கையின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் தடுமாறிய நிலையில், கில் (39), பராக் (26), வாஷிங்டன் சுந்தர் (25) மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்தனர். இதையடுத்து இந்தியா 20 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் மட்டுமே எடுத்து. இன்று இந்திய அணி வெற்றிபெறுமா?.
கேரளாவின் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 123 ஆக உயர்ந்துள்ளது. நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதையுண்ட 125 பேரை காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாகவும், 98 பேரை காணவில்லை என்றும் கேரள அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதால் கடவுளின் தேசம் கண்ணீரில் உள்ளது.
இந்தியாவின் முன்னணி பொதுத்துறை ஆயில் நிறுவனங்களில் ஒன்றான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் முதல் காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, அந்நிறுவனத்தின் நிகர லாபம் 81% சரிந்து, ₹2,643 கோடியாக குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டு ₹13,750 கோடியாக இருந்தது. வருவாய் 2% சரிந்து ₹2.15 லட்சம் கோடியாக உள்ளது. செலவினங்களை பொறுத்தவரையில், ₹2.03 லட்சம் கோடியில் இருந்து ₹2.13 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.
கோவை அணிக்கு எதிரான குவாலிஃபையர் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த திருப்பூர் அணி 20 ஓவரில் 200/3 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களான சாத்விக் 67, துஷார் 55 ரன்கள் எடுத்தனர். கடைசியில் அதிரடியாக ஆடிய முகமது அலி 45*, சாய் கிஷோர் 8* ரன்கள் எடுத்தனர். இதையடுத்து கோவை அணிக்கு 201 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.
தமிழகத்தில் சிக்கன்குனியா காய்ச்சலால் 331 பேர் பாதித்துள்ளதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஜூன் மாதம் வரை 1451 பேருக்கு காய்ச்சல் அறிகுறி இருந்ததாகவும், அவர்களை பரிசோதித்ததில் 331 பேருக்கு சிக்கன்குனியா காய்ச்சல் இருப்பதாகவும் கூறியுள்ள சுகாதாரத்துறை, பாதிக்கப்பட்ட அனைவரும் நலமுடன் உள்ளதால், மக்கள் அச்சப்பட தேவையில்லை என அறிவுறுத்தியுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் நாட்டில் மருத்துவக்கல்லூரிகளின் எண்ணிக்கை 88% அதிகரித்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மாநிலங்களவையில் பேசிய சுகாதாரத்துறை இணையமைச்சர் அனுபிரியா பட்டேல், “2014ஆம் ஆண்டு 387ஆக இருந்த மருத்துவக்கல்லூரிகளின் எண்ணிக்கை தற்போது 731ஆக அதிகரித்துள்ளது. மருத்துவப்படிப்புகளுக்கான இடங்கள் 118% அதிகரித்துள்ளது” என்று கூறினார்.
இலங்கைக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான கில் (39), ஜெய்ஸ்வால் (10), சாம்சன் (0), ரிங்கு சிங் (1), சூர்யகுமார் (8) டூபே (13) அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். இந்திய அணி தற்போது வரை 15.2 ஓவரில் 102 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்துள்ளது. ரியன் பராக் 26 ரன்களுடன் ஆடி வருகிறார்.
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும், ஆகஸ்ட் 2ஆம் தேதி பள்ளி மேலாண்மைக் குழு சார்ந்த பெற்றோர் விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் நலனுக்காக நடைபெறும் இந்தக் கூட்டத்தில், பெற்றோர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அழைப்பு விடுத்துள்ளது. அனைத்து அரசுப் பள்ளிகளிலும் காலை 10 மணி முதல் 1 மணி வரை கூட்டம் நடைபெற உள்ளது.
இலங்கைக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய வீரர் சஞ்சு சாம்சன் டக் அவுட்டாகி ஏமாற்றமளித்துள்ளார். முதல் டி20 போட்டியில் சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்காத நிலையில், இரண்டாவது டி20 போட்டியில் முதல் பந்தில் டக் அவுட் ஆனார். விளையாடிய இரண்டு போட்டியிலும் டக் அவுட் ஆனதால் அவர் கடும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார். இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
Sorry, no posts matched your criteria.