India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மின்சார வாகனங்களை இந்தியாவில் தயாரிக்க டெஸ்லா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், டெஸ்லாவின் முதலீடுகளை ஈர்க்க தமிழ்நாடு, மகாராஷ்டிரா மற்றும் குஜராத் இடையே கடும் போட்டி நிலவுவதாக தகவல் வெளியாகியுள்ளது. குறைந்த விலை மாடலை உருவாக்க நினைத்தால் மகாராஷ்டிராவிலும், ஏற்றுமதிக்கு முன்னுரிமை அளித்தால் தமிழ்நாட்டிலும், மானியங்களை எதிர்பார்த்தால் குஜராத்திலும் ஆலை அமைவதற்கான வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
TNPLஇல் திருப்பூர் அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக ஆடிய கோவை அணி வீரர் சாய் சுதர்சன் 49 பந்துகளில் சதம் அடித்துள்ளார். ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிவரும் இவர் 7 பவுண்டரி, 7 சிக்ஸர்கள் விளாசி 105* ரன்களுடன் கோவை அணிக்கு நம்பிக்கை அளித்துவருகிறார். இவரது அதிரடியால் கோவை அணி 18 ஓவரில் 184/3 ரன்கள் எடுத்து ஆடிவருகிறது.
நாளைக்குள் (ஜூலை 31) விவரங்களை பதிவு செய்யாத விவசாயிகளுக்கு PM கிஷான் நிதி கிடைக்காது என மத்திய அரசு கூறியுள்ளது. இத்திட்டத்தில் ஆண்டுதோறும் ₹6000ஐ, 3 தவணைகளாக மத்திய அரசு வழங்கி வருகிறது. இந்நிலையில் அக்ரிஸ்டாக் திட்டத்தின் கீழ், பட்டா உள்ளிட்ட விவரங்கள், e-KYC பதிவு செய்யவேண்டும் என வலியுறுத்தியுள்ள மத்திய அரசு, விவரங்களை பதிவு செய்யாதவர்களுக்கு 18ஆவது தவணை ₹2000 கிடைக்காது என எச்சரித்துள்ளது.
குறிப்பிட்ட தனி நபர்கள் அல்லது தொழில் நிறுவனங்களுக்கு வருமான வரித் தாக்கல் செய்ய வருமான வரித்துறை கூடுதல் கால அவகாசம் வழங்குகிறது. அதன்படி, சர்வதேச பரிவர்த்தனைகளில் ஈடுபடும் தொழில் நிறுவனங்களுக்கு விரிவான தணிக்கை தேவை என்பதால், நவம்பர் 30ஆம் தேதி வரை வருமான வரித் தாக்கல் செய்யலாம். உள்நாட்டு நிறுவனங்களிலும் கூடுதல் விவரங்கள் தேவைப்படும் நிறுவனங்களுக்கு காலக்கெடு நீட்டிக்கப்படுகிறது.
சில உணவுகளை சேர்த்து சாப்பிடக் கூடாது என ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். காலை உணவாக பால் மற்றும் வாழைப்பழங்களை சிலர் சேர்த்து உட்கொள்கின்றனர். இது செரிமான பிரச்னையை ஏற்படுத்தும் என்கிறார்கள். அதேபோல, உணவையும், பழங்களையும் சேர்த்து சாப்பிடும் போது வாயு பிரச்னையை உண்டாக்கலாம் எனக் கூறப்படுகிறது. தயிர் மற்றும் மீனை சேர்த்து சாப்பிடும் போதும், அஜீரண பிரச்னையை எதிர்கொள்ள நேரிடலாம்.
எர்ணாகுளம்-பெங்களூரு இடையிலான வந்தே பாரத் ரயில் சேவை நாளை தொடங்குகிறது. இந்த ரயிலானது தமிழகத்தில் உள்ள 4 முக்கிய ரயில் நிலையங்களில் நின்று செல்கிறது. அதன்படி, போத்தனூர் (கோவை மாவட்டம்), திருப்பூர், ஈரோடு, சேலம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். பயண விவரம் எர்ணாகுளம்-பெங்களூரு (புதன், வெள்ளி, ஞாயிறு) மற்றும் பெங்களூரு-எர்ணாகுளம் (வியாழன், சனி, திங்கள்). செவ்வாய்கிழமை சேவை கிடையாது.
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (இரவு 1 மணி வரை) மழை பெய்யக்கூடிய மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, கன்னியாகுமரி, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
வெற்றிலை போடுவதால் சில நன்மைகள் இருந்தாலும், அதனால் வரும் தீமைகள் அதிகம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். அதில் உள்ள ‘அர்கோலைன்’ என்ற வேதிப்பொருள் வாய், தொண்டை, உணவுக்குழல் புற்றுநோயை ஏற்படுத்தும் எனவும், ரத்த அழுத்தம் மற்றும் இதய துடிப்பை அதிகரிக்கும் என்றும் எச்சரிக்கின்றனர். மேலும், பற்களை கறைபடுத்தும், ஈறுகளை பாதிக்கும், தூக்கமின்மை, பசியின்மை போன்ற பிரச்னையை உண்டாக்கும் எனக் கூறப்படுகிறது.
வெங்கட்பிரபு இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘G.O.A.T’. பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், யோகி பாபு, சினேகா, லைலா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள இப்படம், செப்டம்பர் 5ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில், ‘G.O.A.T’ படத்தின் அடுத்த அப்டேட் 3ஆவது பாடல் என வெங்கட்பிரபு தனது x தளத்தில் பதிவிட்டுள்ளார். விரைவில் அடுத்த பாடல் வெளியாகும் தேதி அறிவிக்கப்படவுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 466 பொறியியல் கல்லூரிகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஒரே மாதிரியான பெயர்களை கொண்ட கல்லூரிகள் நிறைய இருப்பதால், ஸ்பெல்லிங் மற்றும் கல்லூரி Codeஐ சரியாக தேர்ந்தெடுக்க வேண்டுமென கல்வியாளர்கள் அறிவுறுத்துகின்றனர். அதேபோல கல்லூரியின் 100% தேர்ச்சி தவிர கட்டமைப்பு, வேலைவாய்ப்பு ஆகியவற்றை கவனிக்க வேண்டும் என்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.