news

News July 31, 2024

ஜூலை 31: வரலாற்றில் இன்று!

image

*1658 – ஔரங்கசீப் இந்தியாவின் முகலாயப் பேரரசராக முடிசூடினார். *1805 – விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்டார். *1932 – ஜெர்மனியில் பொதுத்தேர்தலில் நாசி கட்சி வெற்றி பெற்றது. *1971 – அப்பல்லோ 15 விண்வெளி வீரர்கள் லூனார் ரோவரை நிலவில் செலுத்தி சாதனை புரிந்தனர். *2006 – பிடெல் காஸ்ட்ரோ தனது அதிகாரத்தைத் தனது சகோதரர் ராவுல் காஸ்ட்ரோவிடம் ஒப்படைத்தார்.

News July 31, 2024

விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடிக்கும் மமிதா?

image

முண்டாசுபட்டி, ராட்சசன் படங்களைத் தொடர்ந்து இயக்குநர் ராம்குமார்-நடிகர் விஷ்ணுவிஷால் கூட்டணி 3ஆவது முறையாக இணைந்துள்ளது. இந்த புதிய படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு கொடைக்கானலில் நடந்து வருவதாக கூறப்படும் நிலையில், முன்னணி கதாபாத்திரத்தில் மலையாள நடிகை மமிதா பைஜு நடித்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது. அடுத்ததாக அதர்வா, பிரதீப் ரங்கநாதன் படங்கள் உள்பட 3 தமிழ் படங்களில் மமிதா நடிக்க உள்ளார்.

News July 31, 2024

அல்வா குறித்த பேச்சு வலியை தருகிறது: FM

image

பட்ஜெட் தாக்கலுக்கு முன்னான அல்வா கிண்டுவது குறித்த ராகுல் காந்தியின் பேச்சு வலியைத் தருவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். எந்த ஒரு நல்ல காரியம் செய்வதற்கு முன்பும் இனிப்பு வழங்குவது நமது பாரம்பரியம் எனவும், 2013-2014ல் SC, ST பிரிவைச் சேர்ந்த எத்தனை பேர் நிதியமைச்சகத்தில் இருந்தார்கள் என ராகுல் கேள்வி எழுப்பாதது ஏன் எனவும் அவர் வினவியுள்ளார்.

News July 31, 2024

வியட்நாம் பிரதமர் இந்தியா வந்தார்

image

வியட்நாம் பிரதமர் பாம் மின் சின், 3 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்தடைந்ததாக வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ள அவர், இன்று பிரதமர் மோடியை சந்தித்து இரு நாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ராணுவ ஒத்துழைப்பு தொடர்பாக முக்கிய பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

News July 31, 2024

தினம் ஒரு திருக்குறள்!

image

▶குறள் பால்: அறத்துப்பால் ▶இயல்: பாயிரவியல் ▶அதிகாரம்: கடவுள் வாழ்த்து ▶குறள் எண்: 8 ▶குறள்: அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால் பிறவாழி நீந்தல் அரிது. ▶பொருள்: அறக்கடலாக விளங்கும் சான்றோரின் அடியொற்றி நடப்பவர்க்கேயன்றி, மற்றவர்களுக்குப் பிற துன்பக் கடல்களைக் கடப்பது என்பது எளிதான காரியமல்ல.

News July 31, 2024

அட்லி இயக்கத்தில் நடிக்கும் சூர்யா?

image

‘கங்குவா’ படத்தைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் நிலையில், அடுத்ததாக இயக்குநர் அட்லியுடன் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும், அனிருத் இசையமைக்க போவதாகவும் கூறப்படுகிறது. அல்லு அர்ஜுனை வைத்து அட்லி இயக்க இருந்த படம் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் ம்ம்ம்ம்ம்

News July 31, 2024

ஓடும் பேருந்தில் பெண் பாலியல் வன்கொடுமை

image

ஹைதராபாத் அருகே ஓடும் பேருந்தில் 26 வயது இளம்பெண்ணை 2 ஓட்டுநர்கள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. சித்தையா என்பவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவான கிருஷ்ணாவை தேடி வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் ஹைதராபாத்தில் நடந்த 2ஆவது சம்பவமாகும். முந்தைய சம்பவத்தில், புது வேலை கிடைத்ததற்காக இளம்பெண் பார்ட்டி வைத்தபோது, நண்பர் மற்றும் அவரது உறவினரால் பலாத்காரம் செய்யப்பட்டார்.

News July 31, 2024

ராகுல் காந்தியின் வயநாடு பயணம் ரத்து

image

ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களை இன்று நேரில் சந்திக்க இருந்தனர். ஆனால் மோசமான வானிலை காரணமாக, அங்கு விமான தரையிறங்குவதில் சிக்கல் இருப்பதால் அவர்களது பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ராகுல் தனது எக்ஸ் பக்கத்தில், விரைவில் வயநாடு வருகை தருவதாகவும், நிலமையை தொடர்ந்து கண்காணித்து தேவையான உதவிகளை செய்வதாகவும் உறுதியளித்துள்ளார்.

News July 31, 2024

பதக்கம் வென்றவர்களை பாராட்டிய கமல்

image

பாரிஸ் ஒலிம்பிக்கில் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற மனு பாக்கர் மற்றும் சரப்ஜோத் சிங்கை கமல்ஹாசன் வெகுவாக பாராட்டியுள்ளார். இந்தியர்களை பெருமையடையச் செய்ததாகவும், பிடி உஷா, கர்ணம் மல்லேஸ்வரி, மேரி கோம் உள்ளிட்ட ஜாம்பவான்களின் வரிசையில் இருவரும் இணைந்துள்ளதாகவும் வாழ்த்தியுள்ளார். மேலும், இருவரின் வெற்றியும் அடுத்த தலைமுறையினருக்கு உத்வேகமாக அமையும் என கூறியுள்ளார்.

News July 31, 2024

ராகுல் மீது சாதி ரீதியாக விமர்சனம்?

image

நேற்று நாடாளுமன்றத்தில் பேசிய ராகுல் காந்தி, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என கூறினார். அப்போது பாஜக எம்பி அனுராக் தாக்கூர், சாதி என்னவென்று தெரியாதவர்கள், கணக்கெடுப்பு பற்றி பேசுவதாக கூறவே, எதிர்கட்சி எம்பிக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் பேசிய ராகுல், தன்னை எத்தனை முறை இழிவுபடுத்தினாலும், நாடாளுமன்றத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு மசோதா நிறைவேற்றப்படும் என உறுதியுடன் கூறினார்.

error: Content is protected !!