news

News July 30, 2024

ஏற்றுமதியில் சாதனை செய்த தொலைத்தொடர்பு துறை

image

இந்தியாவில் வடிவமைக்கப்பட்டு, தயாரிக்கப்பட்ட தொலைத்தொடர்பு சாதனங்கள் 100 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடுமையான போட்டிகளுக்கு மத்தியில், கடந்தாண்டு ₹1.50 லட்சம் கோடி மதிப்பிலான தொலைத்தொடர்பு சாதனங்கள் மற்றும் சேவைகளை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது. AI மற்றும் blockchain போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 30, 2024

12 ராசிகளுக்கான பலன்கள் (31.07.2024)

image

*மேஷம் – பொறுமை அவசியம்
*ரிஷபம் – ஆக்கப்பூர்வமான நாள்
*மிதுனம் – ஆதாயம் கிடைக்கும்
*கடகம் – நலம் உண்டாகும்
*சிம்மம் – பக்திகரமான நாள்
*கன்னி – தாமதம் ஏற்படும்
*துலாம் – போட்டியை தவிர்க்கவும்
*விருச்சிகம் – சிறப்பான நாள்
*தனுசு – மகிழ்ச்சி அதிகரிக்கும்
*மகரம் – வெற்றி கிடைக்கும் *கும்பம் – பயம் தவிர்க்கவும் *மீனம் – ஏமாற்றம் ஏற்படும்

News July 30, 2024

TNPL: இறுதிப் போட்டிக்கு சென்றது கோவை

image

TNPLஇல் இன்று நடைபெற்ற குவாலிஃபையர் போட்டியில் திருப்பூர் அணியை வீழ்த்தி கோவை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது . திருப்பூர் அணி நிர்ணயித்த 201 ரன்கள் இலக்கை துரத்திய கோவை அணியில் அதிரடியாக ஆடிய சாய் சுதர்சன் (123*), முகிலேஷ் (48*) ரன்கள் அடித்தனர். இதையடுத்து 18.5 ஓவரில் இலக்கை எட்டி கோவை அணி அபார வெற்றிபெற்றது. இறுதிப் போட்டி ஆக.4 ஆம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.

News July 30, 2024

டெஸ்லா முதலீட்டை ஈர்க்கும் ரேஸில் தமிழ்நாடு

image

மின்சார வாகனங்களை இந்தியாவில் தயாரிக்க டெஸ்லா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், டெஸ்லாவின் முதலீடுகளை ஈர்க்க தமிழ்நாடு, மகாராஷ்டிரா மற்றும் குஜராத் இடையே கடும் போட்டி நிலவுவதாக தகவல் வெளியாகியுள்ளது. குறைந்த விலை மாடலை உருவாக்க நினைத்தால் மகாராஷ்டிராவிலும், ஏற்றுமதிக்கு முன்னுரிமை அளித்தால் தமிழ்நாட்டிலும், மானியங்களை எதிர்பார்த்தால் குஜராத்திலும் ஆலை அமைவதற்கான வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

News July 30, 2024

சதமடித்தார் சாய் சுதர்சன்

image

TNPLஇல் திருப்பூர் அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக ஆடிய கோவை அணி வீரர் சாய் சுதர்சன் 49 பந்துகளில் சதம் அடித்துள்ளார். ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிவரும் இவர் 7 பவுண்டரி, 7 சிக்ஸர்கள் விளாசி 105* ரன்களுடன் கோவை அணிக்கு நம்பிக்கை அளித்துவருகிறார். இவரது அதிரடியால் கோவை அணி 18 ஓவரில் 184/3 ரன்கள் எடுத்து ஆடிவருகிறது.

News July 30, 2024

விவசாயிகளுக்கு நாளை வரை கெடு

image

நாளைக்குள் (ஜூலை 31) விவரங்களை பதிவு செய்யாத விவசாயிகளுக்கு PM கிஷான் நிதி கிடைக்காது என மத்திய அரசு கூறியுள்ளது. இத்திட்டத்தில் ஆண்டுதோறும் ₹6000ஐ, 3 தவணைகளாக மத்திய அரசு வழங்கி வருகிறது. இந்நிலையில் அக்ரிஸ்டாக் திட்டத்தின் கீழ், பட்டா உள்ளிட்ட விவரங்கள், e-KYC பதிவு செய்யவேண்டும் என வலியுறுத்தியுள்ள மத்திய அரசு, விவரங்களை பதிவு செய்யாதவர்களுக்கு 18ஆவது தவணை ₹2000 கிடைக்காது என எச்சரித்துள்ளது.

News July 30, 2024

ITRஇல் சிலருக்கு மட்டும் காலக்கெடு நீட்டிப்பு

image

குறிப்பிட்ட தனி நபர்கள் அல்லது தொழில் நிறுவனங்களுக்கு வருமான வரித் தாக்கல் செய்ய வருமான வரித்துறை கூடுதல் கால அவகாசம் வழங்குகிறது. அதன்படி, சர்வதேச பரிவர்த்தனைகளில் ஈடுபடும் தொழில் நிறுவனங்களுக்கு விரிவான தணிக்கை தேவை என்பதால், நவம்பர் 30ஆம் தேதி வரை வருமான வரித் தாக்கல் செய்யலாம். உள்நாட்டு நிறுவனங்களிலும் கூடுதல் விவரங்கள் தேவைப்படும் நிறுவனங்களுக்கு காலக்கெடு நீட்டிக்கப்படுகிறது.

News July 30, 2024

இந்த உணவுகளை சேர்த்து சாப்பிடாதீர்கள்..!

image

சில உணவுகளை சேர்த்து சாப்பிடக் கூடாது என ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். காலை உணவாக பால் மற்றும் வாழைப்பழங்களை சிலர் சேர்த்து உட்கொள்கின்றனர். இது செரிமான பிரச்னையை ஏற்படுத்தும் என்கிறார்கள். அதேபோல, உணவையும், பழங்களையும் சேர்த்து சாப்பிடும் போது வாயு பிரச்னையை உண்டாக்கலாம் எனக் கூறப்படுகிறது. தயிர் மற்றும் மீனை சேர்த்து சாப்பிடும் போதும், அஜீரண பிரச்னையை எதிர்கொள்ள நேரிடலாம்.

News July 30, 2024

கோவை-பெங்களூரு செல்வோருக்கு GOOD NEWS

image

எர்ணாகுளம்-பெங்களூரு இடையிலான வந்தே பாரத் ரயில் சேவை நாளை தொடங்குகிறது. இந்த ரயிலானது தமிழகத்தில் உள்ள 4 முக்கிய ரயில் நிலையங்களில் நின்று செல்கிறது. அதன்படி, போத்தனூர் (கோவை மாவட்டம்), திருப்பூர், ஈரோடு, சேலம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். பயண விவரம் எர்ணாகுளம்-பெங்களூரு (புதன், வெள்ளி, ஞாயிறு) மற்றும் பெங்களூரு-எர்ணாகுளம் (வியாழன், சனி, திங்கள்). செவ்வாய்கிழமை சேவை கிடையாது.

News July 30, 2024

இரவில் மழை பெய்யவிருக்கும் மாவட்டங்கள்

image

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (இரவு 1 மணி வரை) மழை பெய்யக்கூடிய மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, கன்னியாகுமரி, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

error: Content is protected !!