news

News July 30, 2024

சர்ச்சையில் சிக்கும் நடிகைகள் (2/3)

image

வைரஸ் தொற்று நோய்களை போக்க ஹைட்ரஜன் பெராக்ஸைடை நெபுலைசரில் ஊற்றி பயன்படுத்துமாறு சமந்தா பதிவிட்டிருந்தார். இதற்கு மருத்துவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். குறிப்பாக The Liver Doc என்ற மருத்துவர், சமந்தா தொடர்ச்சியாக தவறான மருத்துவ ஆலோசனைகளை வழங்குபவர் என்று சாடியிருந்தார். அதன்பின்னரும் சமந்தா தொடர்ந்து தனது செயலை நியாயப்படுத்தினார்.

News July 30, 2024

சர்ச்சையில் சிக்கும் நடிகைகள் (3/3)

image

அந்த வரிசையில் தற்போது செம்பருத்தி டீ குடிக்க சொல்லி சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் நயன்தாரா. இது தவறான முன்னுதாரணம் என்று மருத்துவர்கள் சுட்டிக் காட்டியதும் பதிவை நீக்கிய நயன்தாரா “முட்டாள்களுடன் வாதம் செய்ய முடியாது” என கூறியது மருத்துவர்களை ஆத்திரமடையச்செய்துள்ளது. நடிகைகளை, மாற்று மருத்துவர்கள் தங்களது சுயநலத்துக்காக பயன்படுத்துகின்றனர் எனவும் சாடியுள்ளார்.

News July 30, 2024

கேரளா நிலச்சரிவில் 116 பேர் பலி

image

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களில், இதுவரை 116 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கனமழை காரணமாக வயநாடு மாவட்டத்தில் உள்ள முண்டக்கல் உள்பட 3 கிராமங்களில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால், குடியிருப்புப் பகுதிகள் மண்ணில் புதையுண்ட நிலையில் பலர் மண்ணில் புதைந்துள்ளதாக கூறப்படுகிறது. சம்பவம் நிகழ்ந்த பகுதியில் மீட்புப் பணிகள் வேகமாக நடந்து வருகிறது.

News July 30, 2024

தேசியப் பேரிடராக அறிவிக்கக்கோருவது ஏன்?

image

நிலநடுக்கம், நிலச்சரிவு, புயல், வெள்ளம், சுனாமி, வெப்பம் போன்ற இயற்கையான பேரிடர்களும், பயங்கரவாதத் தாக்குதல், அணுகுண்டு வெடிப்பு போன்ற செயற்கை பேரிடர்களும் தேசியப் பேரிடர்களாக மத்திய அரசால் அறிவிக்கப்படும். அவ்வாறு அறிவிக்கப்படும் பட்சத்தில், பாதிக்கப்பட்ட மாநில அரசு கேட்கும் முழு நிவாரணத்தொகையை மத்திய அரசு கொடுக்க வேண்டும். ஆனால், தேசியப் பேரிடர் என்பதை மத்திய அரசுதான் முடிவு செய்யும்.

News July 30, 2024

கேரளாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

image

கனமழை காரணமாக கேரளத்தில் 5 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு நாளை (31.07.2024) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பத்தனம்திட்டா, காசர்கோடு, திருச்சூர், மலப்புரம், கண்ணூர் ஆகிய மாவட்டங்களில் நாளை கல்வி நிலையங்கள் இயங்காது. தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளாவில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. வயநாட்டில் கடந்த 48 மணி நேரத்தில் 57 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

News July 30, 2024

இந்திய அணி பேட்டிங்

image

இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது. இதையடுத்து இந்திய அணி இன்னும் சற்று நேரத்தில் பேட்டிங் செய்ய உள்ளது. முன்னதாக நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்ற இந்திய அணி தொடரைக் கைப்பற்றியுள்ளதால் இன்றைய போட்டி சம்பிரதாய ஆட்டமாகவே பார்க்கப்படுகிறது. இன்று எந்த அணி வெற்றிபெறும் என கமெண்ட் பண்ணுங்க.

News July 30, 2024

நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்க அவகாசம்

image

டாக்டர் இராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்கும் அவகாசத்தை, தமிழக அரசு நாளை வரை நீட்டித்துள்ளது. தமிழக அரசுப் பள்ளிகளில் 5 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க நேற்றுடன் அவகாசம் முடிந்த நிலையில், தற்போது மேலும் ஒருநாள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு, தலைமை ஆசிரியரை அணுகவும்.

News July 30, 2024

தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்: அன்பில் மகேஷ்

image

வயநாடு பகுதியில் ஏற்பட்ட பேரிடர் தமிழர்களின் மனங்களை உலுக்கியுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் வேதனை தெரிவித்துள்ளார். இது குறித்து தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், பேரிடரில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஆறுதல் கூறியுள்ளார். மேலும், கேரள மக்களின் வேண்டுகோளை ஏற்று, தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவிக்க வேண்டுமெனவும், கேரள சகோதரர்களுக்கு திமுக அரசு துணை நிற்கும் என்றும் பதிவிட்டுள்ளார்.

News July 30, 2024

அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

image

தமிழகத்தில் இரவு 10 மணி வரை நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, குமரி, திருவள்ளூர், காஞ்சி, சென்னை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், தர்மபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, ஈரோடு, கரூர், சேலம், நாமக்கல், விழுப்புரம், கடலூர், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, புதுக்கோட்டை, தஞ்சாவூர் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News July 30, 2024

இங்கிலாந்து பயிற்சியாளர் விலகல்

image

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வெள்ளைப்பந்து பயிற்சியாளர் மேத்யூ மோட் (Matthew Mott), அப்பதவியில் இருந்து விலகியதாக, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ஆஸ்திரேலிய முன்னாள் வீரரான அவர், 2022 முதல் நான்கு ஆண்டுகளுக்கு இங்கிலாந்து பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால், 2024 டி20 உலகக்கோப்பை தோல்வி காரணமாக, அவர் இடையிலேயே விலகிவிட்டதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!