news

News July 30, 2024

கடவுளின் தேசத்தை உலுக்கும் இயற்கை பேரிடர்

image

கண்கவர் இயற்கை பேரழகை கொண்ட கேரளா, ஆண்டுதோறும் ஓர் பேரிடரை சந்திக்க நேரிடுகிறது. கடவுளின் தேசம் என அழைக்கப்படும் இம்மாநிலம், மலைகள், ஆறுகள் என இயற்கை வளங்களை அழியாமல் பாதுகாத்து வருகிறது. இந்த சூழலில், இயற்கை பேரிடர் மற்றும் சுகாதார பேரிடரை ஒவ்வொரு ஆண்டு எதிர்கொள்கிறது. 2018இல் கனமழையில் சிக்கி 483 பேர், 2019இல் பருவ மழையில் 470 பேர், 2020இல் நிலச்சரிவில் சிக்கி 66 பேர் உயிரிழந்தனர்.

News July 30, 2024

வளர்ச்சிப்பாதையை நோக்கி இந்தியா: பிரதமர் மோடி

image

பொருளாதாரத்தில் இந்தியா வேகமாக வளர்ந்து வருவதாக, பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். இந்திய தொழில் கூட்டமைப்பு கூட்டத்தில் பேசிய அவர், வளர்ச்சிப்பாதையை நோக்கி இந்தியா பயணித்து கொண்டிருப்பதாக தெரிவித்தார். உலகின் 5ஆவது பொருளாதார நாடாக இருக்கும் இந்தியா, விரைவில் 3ஆவது இடத்தை பிடிக்கும் என்ற அவர், கடந்த 10 ஆண்டுகளில் பட்ஜெட் அளவு 3 மடங்கு அதிகரித்து ரூ.48 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது என்றார்.

News July 30, 2024

தமிழக மீனவர்கள் 23 பேர் விடுதலை

image

இலங்கை சிறையில் வாடிய தமிழக மீனவர்கள் 23 பேரை விடுதலை செய்து, ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கைதான 26 மீனவர்களில் 23 பேர் விடுவிக்கப்பட்ட நிலையில், 3 மீனவர்களுக்கு 18 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவை அடுத்து, 3 மீனவர்களும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

News July 30, 2024

மருத்துவ காப்பீடு பிரீமியத்தை உயர்த்தியது NIACL

image

நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் மருத்துவ காப்பீடு கட்டணத்தை 10% உயர்த்தியுள்ளது. பொதுமக்கள் மத்தியில் காப்பீடு குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், காப்பீட்டுக்கான பிரீமியம் தொகையை, காப்பீடு நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன. அந்த வரிசையில், நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் மருத்துவ காப்பீட்டுக்கான பிரீமியம் நவம்பர் 1ஆம் தேதி முதல் 10% அதிகரிக்கிறது.

News July 30, 2024

இன்றும், நாளையும் துக்கம் அனுசரிப்பு

image

வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கி 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலர் காணாமல் போயுள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. இந்நிலையில், பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, இன்றும், நாளையும் துக்கம் அனுசரிக்கப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது.

News July 30, 2024

தமிழக அரசின் உதவி எண் அறிவிப்பு

image

கேரளாவில் பெய்துவரும் கனமழையால், வயநாடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பயங்கர நிலச்சரிவுகள் நிகழ்ந்துள்ளன. இந்நிலையில், வயநாடு பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ள தமிழர்களுக்கு உதவும் வகையில், தமிழக அரசு சார்பில் இலவச தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. உதவி தேவைப்படுவோர், 1070 என்ற எண்ணில் மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொண்டு தகவல்களை தெரிவிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News July 30, 2024

வயநாடு நிலச்சரிவில் 84 பேர் பலி

image

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதையுண்டு இதுவரை 84 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. குழந்தைகள் உட்பட 84 பேரின் சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளது. நிலச்சரிவில் சிக்கிய 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 600க்கும் மேற்பட்டோரின் நிலை என்ன ஆனதென்று தெரியவில்லை. அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

News July 30, 2024

கேரளாவுக்கு தமிழகம் சார்பில் ₹5 கோடி நிதி

image

வயநாடு பகுதியில் நேரிட்ட பயங்கர நிலச்சரிவு பாதிப்பு குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயனுடன், முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார். இதன்பின் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.5 கோடி நிவாரணத்தை அறிவித்த ஸ்டாலின், மீட்பு-நிவாரணப் பணிகளை மேற்கொள்வதில் கேரள அரசுக்கு துணையாக பணியாற்றிட, 2 ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் குழுவையும் உடனே அனுப்ப உத்தரவிட்டார்.

News July 30, 2024

மேட்டூர் அணையிலிருந்து கால்வாய்களில் நீர் திறப்பு

image

மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு, மேற்கு கரை கால்வாய்களில் பாசனத்துக்காக இன்று முதல் டிச.13ஆம் தேதி வரை தண்ணீர் திறக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். விவசாய சங்க பிரதிநிதிகளின் கோரிக்கையை ஏற்று, 137 நாள்களுக்கு கால்வாய்களில் தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளதால், மேட்டூர் கிழக்கு, மேற்கு கரை கால்வாய்கள் மூலம் மொத்தம் 45,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 30, 2024

₹8,500 கோடி மினிமம் பேலன்ஸ் அபராதம் வசூல்

image

கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகள் மினிமம் பேலன்ஸ் அபராதமாக ₹8,500 கோடி வசூலித்துள்ளன. கடந்த ஆண்டு அதிகபட்சமாக ₹2,331 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக PNB வங்கி ₹1,538 கோடி, இந்தியன் வங்கி ₹1,466 கோடி, பேங்க் ஆஃப் பரோடா ₹1,250 கோடி, பேங்க் ஆஃப் இந்தியா ₹827 கோடி, எஸ்பிஐ ₹640 கோடி வசூல் செய்துள்ளன. 2020ஆம் ஆண்டு மினிமம் பேலன்ஸ் அபராதத்தை எஸ்பிஐ நிறுத்தியது.

error: Content is protected !!