India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வயநாட்டில் நிகழ்ந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 45 பேர் உயிரிழந்த நிலையில், மண்ணில் புதையுண்டவர்களை மீட்பதில் பல்வேறு சிக்கல் எழுந்துள்ளது. பாலம் உடைந்துள்ளதாலும், மழை தொடர்வதாலும் மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. விமானப்படை ஹெலிகாப்டர்கள் அங்கு சென்றடைந்தபோதும் மோசமான வானிலையால் தரையிறங்க முடியாமல், அங்கிருந்து ஹெலிகாப்டர்கள் மீண்டும் கோழிக்கோட்டிற்கு திருப்பிவிடப்பட்டுள்ளன.
டெல்லியில் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் 100ஆவது கூட்டம் அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் தொடங்கியுள்ளது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரியை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். இதில் தமிழகத்திற்கு ஆகஸ்ட் மாதம் கர்நாடகா திறந்துவிட வேண்டிய நீரை தடையின்றி முறையாக திறந்துவிடக் கோரி தமிழக அதிகாரிகள் வலியுறுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை அண்மையில் கட்டணங்களை உயர்த்தின. இந்நிலையில், ₹123 கட்டணத்தில் 28 நாள்கள் வேலிடிட்டி கொண்ட புதிய ப்ரீபெய்டு திட்டத்தை ஜியோ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு, 14 ஜிபி 4ஜி டேட்டாவை ஜியோ வழங்குகிறது. இந்தத் திட்டம், அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தாது. புதிதாக வெளியான Jio Bharat J1 போனுக்கானது என ஜியோ அறிவித்துள்ளது.
மாதம் ரூ.20,000 திட்டத்தில் சேர விரும்புகிறீர்கள் எனில், முதலில் 3 முதல் 6 மாதம் வரை மொத்தமாக பணம் கட்டலாம். 6 மாதங்கள் எனில் ரூ.1,20,000 கட்ட வேண்டும். அப்போது பணத்திற்கு ஏற்ப அன்றைய விலை அடிப்படையில் தங்கம் பதிவு செய்யப்படும். பிறகு 7 முதல் 11ஆவது மாதம் வரை பணத்தை செலுத்தி, 12ஆவது மாதம் செய்கூலி, சேதாரமின்றி பிடித்த நகையை வாங்கலாம். இதனால் பணமும் மிச்சமாகும், நகையும் கூடுதலாக வாங்கலாம்.
தங்க நகையை வாங்கும் போது, செய்கூலி, சேதாரம் என மிகப்பெரிய தொகையை மக்கள் செலுத்த வேண்டியிருக்கும். இந்த கட்டணம் எதையும் செலுத்தாமலேயே நகையை அதிகம் வாங்கி பணத்தை மிச்சப்படுத்த முடியும். நகைக்கடைகளில் இதற்கான பிரத்யேக திட்டங்கள் உள்ளன. இதில் தொடர்ந்து 11 மாதங்கள் பணம் செலுத்தி, 12ஆவது மாதத்தில் செய்கூலி, சேதாரமில்லாமல் ஜிஎஸ்டி மட்டும் கட்டிவிட்டு நகையை வாங்கும் திட்டமும் ஒன்று.
நிலச்சரிவு நிகழ்ந்துள்ள வயநாட்டுக்கு ராகுல், பிரியங்கா விரைகின்றனர். மத்திய அரசிடம் பேசி, மீட்பு, நிவாரண உதவிகளை பெற்றுத் தருவதாக உறுதியளித்த ராகுல், அனைத்து அமைப்புகளுடன் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி மீட்புப் பணிகளை மேற்கொள்ள அம்மாநில முதல்வரிடம் வலியுறுத்தினார். மக்களவைத் தேர்தலில் வயநாடு தொகுதியில் வெற்றி பெற்ற ராகுல், தனது எம்.பி பதவியை ராஜினாமா செய்த நிலையில், அங்கு பிரியங்கா போட்டியிட உள்ளார்.
பாரிஸ் ஒலிம்பிக்ஸில் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் மணிகா பத்ரா அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இவர், பிரான்ஸின் பிரிதிகா பாவடேவை 4-0 என்ற புள்ளி கணக்கில் (11-9, 11-6, 11-9, 11-7) வீழ்த்தினார். இதன் மூலம் ஒலிம்பிக்ஸ் டேபிள் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவில், காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
பிஎஸ்பி புதிய தலைவராக பதவியேற்றுள்ள ஆனந்தனிடம், ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவாரா என கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு அவர், 2026 தேர்தலில் நிச்சயம் பொற்கொடி போட்டியிடுவார். ஆனால், கொளத்தூர் தொகுதியில் பொற்கொடி போட்டியிடுவாரா அல்லது பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவாரா என்பது தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும் என்று பதிலளித்தார்.
இந்தியாவில் ₹1,000 கோடிக்கு மேல் வசூலில் சாதனை புரிந்த படங்கள் தொடர்பான சுவாரசிய தகவல்களை பார்க்கலாம். இந்திய சினிமாவில் இதுவரை 7 படங்கள் மட்டுமே ₹1,000 கோடிக்கு மேல் வசூலித்துள்ளன. தங்கல், பாகுபலி 2, ஆர்.ஆர்.ஆர், கேஜிஎப் 2, தவான், பதான் கல்கி 2898 ஏடி ஆகிய படங்களே வசூலில் உச்சம் தொட்டுள்ளன. இந்த பட்டியலில் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கிய 2 (பாகுபலி 2, ஆர்.ஆர்.ஆர்) படங்கள் இடம்பெற்றுள்ளன.
வயநாட்டில் நிகழ்ந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களுக்கு இபிஎஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். நிலச்சரிவில் சிக்கிய அனைவரையும் பாதுகாப்பாக மீட்க அனைத்து முயற்சிகளையும் எடுக்க கோரிய அவர், மீட்பு பணிகளில் கேரளாவுக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு செய்து தரவும், அண்டை மாநில சகோதரர்களுக்கு துயர்மிகு நேரத்தில் திமுக அரசு உறுதுணையாக இருக்கவும் வலியுறுத்தியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.