India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பாரிஸ் ஒலிம்பிக்ஸில் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் மணிகா பத்ரா அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இவர், பிரான்ஸின் பிரிதிகா பாவடேவை 4-0 என்ற புள்ளி கணக்கில் (11-9, 11-6, 11-9, 11-7) வீழ்த்தினார். இதன் மூலம் ஒலிம்பிக்ஸ் டேபிள் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவில், காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
பிஎஸ்பி புதிய தலைவராக பதவியேற்றுள்ள ஆனந்தனிடம், ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவாரா என கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு அவர், 2026 தேர்தலில் நிச்சயம் பொற்கொடி போட்டியிடுவார். ஆனால், கொளத்தூர் தொகுதியில் பொற்கொடி போட்டியிடுவாரா அல்லது பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவாரா என்பது தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும் என்று பதிலளித்தார்.
இந்தியாவில் ₹1,000 கோடிக்கு மேல் வசூலில் சாதனை புரிந்த படங்கள் தொடர்பான சுவாரசிய தகவல்களை பார்க்கலாம். இந்திய சினிமாவில் இதுவரை 7 படங்கள் மட்டுமே ₹1,000 கோடிக்கு மேல் வசூலித்துள்ளன. தங்கல், பாகுபலி 2, ஆர்.ஆர்.ஆர், கேஜிஎப் 2, தவான், பதான் கல்கி 2898 ஏடி ஆகிய படங்களே வசூலில் உச்சம் தொட்டுள்ளன. இந்த பட்டியலில் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கிய 2 (பாகுபலி 2, ஆர்.ஆர்.ஆர்) படங்கள் இடம்பெற்றுள்ளன.
வயநாட்டில் நிகழ்ந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களுக்கு இபிஎஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். நிலச்சரிவில் சிக்கிய அனைவரையும் பாதுகாப்பாக மீட்க அனைத்து முயற்சிகளையும் எடுக்க கோரிய அவர், மீட்பு பணிகளில் கேரளாவுக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு செய்து தரவும், அண்டை மாநில சகோதரர்களுக்கு துயர்மிகு நேரத்தில் திமுக அரசு உறுதுணையாக இருக்கவும் வலியுறுத்தியுள்ளார்.
சமாஜ்வாதி எம்பி ஜெயா பச்சனை, மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் ‘ஜெயா அமிதாப் பச்சன்’ என்று அழைத்ததற்கு அதிருப்தி தெரிவித்துள்ளார். கணவரின் பெயரை கூறி அழைக்கும் முறை புதிதாக இருப்பதாகக் கூறிய அவர், இது பெண்களுக்கு எந்த ஒரு சுயமான சாதனையும் இல்லாதது போன்ற தோற்றத்தை இது ஏற்படுத்துவதாகக் கூறினார். அதற்கு ஆவணங்களில் உள்ளபடியே தான் அழைத்ததாக துணைத் தலைவர் தெரிவித்தார்.
பான் கார்டு எந்தெந்த சேவைக்கு கட்டாயம் எனப் பார்க்கலாம். 1) வங்கிக் கணக்கு தொடங்கக் கட்டாயம் 2) பங்குச் சந்தையில் முதலீடு செய்ய பயன்படும் டிமேட் கணக்கை துவங்க அவசியம் 3) வங்கியில் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் டெபாசிட் செய்ய கட்டாயம் 4) கிரெடிட் கார்டு, டெபிட் கார்டுக்கு விண்ணப்பிக்க பான் கார்டு கட்டாயம் 5) வீட்டுக்கடன், வாகனக் கடன், தனிநபர் கடன் உள்ளிட்ட கடன்களை பெற பான் கார்டு கட்டாயம்.
மத்திய அரசின் அலட்சியமே தொடர் ரயில் விபத்துகளுக்கு காரணம் என மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார். இந்தியாவில் ஒவ்வொரு வாரமும் ரயில் விபத்துக்கள் நடப்பது தொடர்கதையாகி வருவதாக சாடிய அவர், இன்னும் எத்தனை காலத்துக்கு மக்கள் இதனை பொறுத்துக்கொள்ள வேண்டும்? எனவும் வினவியுள்ளார். முன்னதாக, இன்று ஹவுராவில் இருந்து மும்பை சென்ற ரயில், ஜார்கண்டில் தடம்புரண்டு 2 பேர் உயிரிழந்தனர்.
தமிழகத்தில் கடந்த ஆண்டு 4.49 லட்சம் ரேஷன் அட்டைகள், இடம்பெயர்தல், இறப்பு காரணமாக ரத்து செய்யப்பட்டிருப்பதாக கூட்டுறவு மற்றும் உணவுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், 2023இல் 4.54 லட்சம் குடும்ப அட்டைதாரருக்கு நகல் ஸ்மார்ட் அட்டை வழங்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். 36,954 ரேஷன் கடைகளில் அரிசி, சர்க்கரை, உப்பு போதுமான இருப்பு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து மிஸ்ட் கால் கொடுத்து, வங்கி கணக்கில் உள்ள பேலன்ஸை அறிய முடியும். இதற்கு தனித்தனி எண்கள் உள்ளன. அவற்றை காணலாம். *SBI – 09223766666 *Indian Bank – 09289592895 *IOB – 84240 22122 *PNB – 1800 180 2223 * Canara- 09015483483 *Axis – 1800-419-5959 * City Union- 9278177444 * HDFC- 1800 270 333 *ICICI – 9594 612 612 *Karur Vysya- 09266292666.
கேரளாவில் கனமழையால் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடும் பாதிப்புக்குள்ளான வயநாடு சூரல்மலையில் முகாம்களில் மக்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனர். முகாமாக செயல்பட்ட பள்ளி ஒன்றின் மீது அதிகாலையில் நிலச்சரிவு நேரிட்டதால், அங்கிருந்த 100க்கும் மேற்பட்டோரின் கதி என்னவென்று தெரியவில்லை. மழை அதிகமானதால் அங்கிருந்த சிலர், முன்கூட்டியே வேறு முகாமிற்கு மாற்றப்பட்டதால் அவர்கள் உயிர்தப்பினர்.
Sorry, no posts matched your criteria.