India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாடாளுமன்றத்தில் வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவித்து, மீட்புப் பணிகளுக்கு உடனே ₹5,000 கோடியை நிவாரண நிதியாக ஒதுக்கீடு செய்ய, கேரள எம்பிக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் நட்டா, நிலச்சரிவு விவகாரத்தில் வேற்றுமைகளை மறந்து அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். தற்போது அங்கு சிக்கியுள்ளவர்களை மீட்டு தேவையான சிகிச்சை அளிப்பதே முக்கியம் எனத் தெரிவித்தார்.
கடினமான நேரங்களில் கூட இந்தியாவுக்கு சென்று பாக்.,அணி விளையாடியதாக அந்த அணியின் முன்னாள் வீரர் அப்ரிடி தெரிவித்துள்ளார். இந்திய அணி, பாகிஸ்தான் வந்து விளையாடுவதில் எந்த சிக்கலும் இல்லை என கூறிய அவர், பாதுகாப்பை காரணம் காட்டி இந்தியா வர மறுப்பதை ஏற்க முடியாது என்றார். 2025இல் சாம்பியன்ஸ் டிராபி போட்டி பாக்.,கில் நடைபெறும் நிலையில், அந்த போட்டிகளில் பங்கேற்க இந்தியா மறுத்துவிட்டது.
தமிழகத்தில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று அதி கனமழை பெய்யக்கூடும் என ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தேனி, தென்காசி மாவட்டங்களில் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், நெல்லை, குமரியில் கனமழையும் பெய்யலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது. நாளையும் நீலகிரி, கோவையில் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும் எனவும் கணித்துள்ளது.
ஜனநாயகத்துக்கு எதிரான 3 புதிய குற்றவியல் சட்டங்கள் அகற்றப்பட வேண்டும் என துரை வைகோ வலியுறுத்தியுள்ளார். வழக்கறிஞர்கள் சங்கத்தின் போராட்டத்தில் பேசிய அவர், சமத்துவத்திற்கும், சமூக நீதிக்கும் எதிராக உள்ள புதிய குற்றவியல் சட்டங்கள் மக்களுக்கு எதிராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். புதிய சட்டங்களில் காவல்துறைக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், இது விபரீதங்களுக்கு வழிவகுக்கும் என்றார்.
வயநாட்டில் நிகழ்ந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 45 பேர் உயிரிழந்த நிலையில், மண்ணில் புதையுண்டவர்களை மீட்பதில் பல்வேறு சிக்கல் எழுந்துள்ளது. பாலம் உடைந்துள்ளதாலும், மழை தொடர்வதாலும் மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. விமானப்படை ஹெலிகாப்டர்கள் அங்கு சென்றடைந்தபோதும் மோசமான வானிலையால் தரையிறங்க முடியாமல், அங்கிருந்து ஹெலிகாப்டர்கள் மீண்டும் கோழிக்கோட்டிற்கு திருப்பிவிடப்பட்டுள்ளன.
டெல்லியில் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் 100ஆவது கூட்டம் அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் தொடங்கியுள்ளது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரியை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். இதில் தமிழகத்திற்கு ஆகஸ்ட் மாதம் கர்நாடகா திறந்துவிட வேண்டிய நீரை தடையின்றி முறையாக திறந்துவிடக் கோரி தமிழக அதிகாரிகள் வலியுறுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை அண்மையில் கட்டணங்களை உயர்த்தின. இந்நிலையில், ₹123 கட்டணத்தில் 28 நாள்கள் வேலிடிட்டி கொண்ட புதிய ப்ரீபெய்டு திட்டத்தை ஜியோ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு, 14 ஜிபி 4ஜி டேட்டாவை ஜியோ வழங்குகிறது. இந்தத் திட்டம், அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தாது. புதிதாக வெளியான Jio Bharat J1 போனுக்கானது என ஜியோ அறிவித்துள்ளது.
மாதம் ரூ.20,000 திட்டத்தில் சேர விரும்புகிறீர்கள் எனில், முதலில் 3 முதல் 6 மாதம் வரை மொத்தமாக பணம் கட்டலாம். 6 மாதங்கள் எனில் ரூ.1,20,000 கட்ட வேண்டும். அப்போது பணத்திற்கு ஏற்ப அன்றைய விலை அடிப்படையில் தங்கம் பதிவு செய்யப்படும். பிறகு 7 முதல் 11ஆவது மாதம் வரை பணத்தை செலுத்தி, 12ஆவது மாதம் செய்கூலி, சேதாரமின்றி பிடித்த நகையை வாங்கலாம். இதனால் பணமும் மிச்சமாகும், நகையும் கூடுதலாக வாங்கலாம்.
தங்க நகையை வாங்கும் போது, செய்கூலி, சேதாரம் என மிகப்பெரிய தொகையை மக்கள் செலுத்த வேண்டியிருக்கும். இந்த கட்டணம் எதையும் செலுத்தாமலேயே நகையை அதிகம் வாங்கி பணத்தை மிச்சப்படுத்த முடியும். நகைக்கடைகளில் இதற்கான பிரத்யேக திட்டங்கள் உள்ளன. இதில் தொடர்ந்து 11 மாதங்கள் பணம் செலுத்தி, 12ஆவது மாதத்தில் செய்கூலி, சேதாரமில்லாமல் ஜிஎஸ்டி மட்டும் கட்டிவிட்டு நகையை வாங்கும் திட்டமும் ஒன்று.
நிலச்சரிவு நிகழ்ந்துள்ள வயநாட்டுக்கு ராகுல், பிரியங்கா விரைகின்றனர். மத்திய அரசிடம் பேசி, மீட்பு, நிவாரண உதவிகளை பெற்றுத் தருவதாக உறுதியளித்த ராகுல், அனைத்து அமைப்புகளுடன் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி மீட்புப் பணிகளை மேற்கொள்ள அம்மாநில முதல்வரிடம் வலியுறுத்தினார். மக்களவைத் தேர்தலில் வயநாடு தொகுதியில் வெற்றி பெற்ற ராகுல், தனது எம்.பி பதவியை ராஜினாமா செய்த நிலையில், அங்கு பிரியங்கா போட்டியிட உள்ளார்.
Sorry, no posts matched your criteria.