India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் 2022இல் வெளியான சர்தார் படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து, அதன் 2ஆவது பாகம் சர்தார் 2 என்ற பெயரில் உருவாகிறது. இதில் எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்நிலையில், இப்படத்தில் மாளவிகா மோகனன், பிரியங்கா மோகனன், ஆஷிகா ரங்கநாத் ஆகிய 3 ஹீரோயின்கள் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
டிஎன்பிஎல் முதலாவது தகுதி சுற்றில், புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் உள்ள நடப்பு சாம்பியன் கோவை கிங்சும், திருப்பூர் அணியும் இன்று மோதவுள்ளன. இதில் வெற்றி பெறும் அணி, இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். தோற்கும் அணிக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கப்படும். அதாவது, வெளியேற்றுதல் சுற்றில் வெற்றி பெறும் அணியுடன் (சேப்பாக் அல்லது திண்டுக்கல் அணி) 2ஆவது தகுதி சுற்றில் மோதும்.
பிரபல யூடியூபர் பிரியாணி மேன் அபிஷேக் ரவியை சென்னை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். இர்பான் உள்ளிட்ட யூடியூபர்களை கடுமையாக விமர்சித்து வீடியோ வெளியிட்டிருந்தார். இதனால், இணையத்தில் கடுமையான விமர்சனத்திற்கு ஆளானார். தொடர்ந்து, யூடியூப் நேரலையில் தற்கொலைக்கு முயன்ற அவரை அவரது தாயார் தடுத்து நிறுத்தினார். இந்நிலையில், பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில், அவர் கைதாகியுள்ளார்.
அமமுகவை தொடங்கியபோது அசோக்நகரில் கட்சி அலுவலகத்தை டிடிவி திறந்தார். அந்த இடத்தின் சொந்தகாரரான இசக்கி சுப்பையா, அதிமுகவுக்கு திரும்பிய பிறகு, ராயப்பேட்டைக்கு அலுவலகத்தை மாற்றினார். தற்போது அக்கட்டிடத்துக்கு சரிவர வாடகை கொடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் கட்டிடத்தை காலி செய்யும்படி உரிமையாளர் வலியுறுத்துவதாகவும், எனவே புதிய இடத்தை டிடிவி தேடுவதாகவும் கூறப்படுகிறது.
காசோலை என்பது ஒருவருக்கு கொடுக்க வேண்டிய பணத்தை ரொக்கமாக கொடுக்காமல், வங்கி மூலம் கொடுக்க பயன்படுத்தும் படிவம் ஆகும். அது எத்தனை நாட்கள் செல்லும் என அனைவருக்கும் கேள்வி எழக்கூடும். RBI வழிகாட்டுதலின்படி, காசோலை தேதி குறிப்பிடப்பட்டு அளிக்கப்பட்டிருந்தால், அந்த தேதியில் இருந்து 3 மாதங்கள் செல்லும். தேதி குறிப்பிடாத காசோலை எனில், அதற்கு கால வரம்பு கிடையாது.
ஆம்ஸ்ட்ராங் கொலையைக் கண்டித்து அண்மையில் சென்னையில் பேரணி நடைபெற்றது. இதில் பேசிய பா. ரஞ்சித், திமுக தரப்பை கடுமையாக விமர்சித்தார். இதையடுத்து, அவருக்கு எதிராக திமுக ஐ.டி. விங்க் பிரிவினர் கடும் விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர். திருமாவளவனுடன் இணைந்து செயல்பட்டுவிட்டு தற்போது அவரை எதிர்ப்பது, ஆம்ஸ்ட்ராங் குடும்பமே பா.ரஞ்சித்தை நம்பவில்லை என குற்றம்சாட்டி பதிவிடுகின்றனர்.
30ஆம் தேதியில் பிறந்தவருக்கான பலன் குறித்து எண் கணிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை இங்கு காணலாம். *தொழில் சார்ந்த விஷயங்களில் வெற்றி பெறுவார்கள் * முன்னெச்சரிக்கையுடன் எதையும் செய்வார்கள் * கல்விக்கு ஏற்ற வேலை வாய்ப்புகளை பெறுவர் * அரசுப்பணி தேடிவரும் *நிர்வாகத் திறன் மிக்கவர்களாகத் திகழ்வர் *குடும்ப வாழ்க்கை நன்றாக அமையும் *நீதித்துறை முதல் நிதித்துறை வரை உயர்பதவிகளில் பணியாற்றுவர்.
OLYMPICS பதக்கப் பட்டியலில் முதலிடத்தில் உள்ள ஜப்பான், 6 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலத்துடன் 12 பதக்கங்கள் வென்றுள்ளது. 2ஆவது இடத்தில் உள்ள பிரான்ஸ் 5 தங்கம், 8 வெள்ளி, 3 வெண்கலம் என 16 பதக்கங்களை கைப்பற்றியுள்ளது. 3ஆவது இடத்தில் உள்ள சீனா தலா 5 தங்கம், 5 வெள்ளி உள்ளிட்ட 12 பதக்கங்களை தனதாக்கியுள்ளது. அமெரிக்கா 20 பதக்கங்களுடன் 6ஆவது இடத்திலும், இந்தியா 1 வெண்கலத்துடன் 26ஆவது இடத்திலும் உள்ளன.
தமிழ் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். சென்னை அசோக் நகரில் உள்ள அவரது வீட்டுக்கு அதிகாலையில் வந்த அதிகாரிகள், நீண்ட நேரமாக தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள்.
சோதனைக்கான காரணம் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை. பண மோசடி வழக்கில் ஏற்கெனவே அவர் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதில், ஒரு ஆண்டில் ஒவ்வொரு நாளும் 6 மணி நேரம் என 1,000 மணி நேரம் பள்ளிகளில் ஆசிரியர்கள், மாணவர்கள் செலவிடுவதாகவும், இதில் 6-8 மாணாக்கர்களுக்கு 10 நாள் (அ) 60 மணி நேரத்தை புத்தகப்பை இல்லா தினமாக்கி தச்சு, தோட்டம், பானைத் தொழிலாளர் உள்ளிட்ட நிபுணர்களிடம் திறமையை கற்க திட்டமிடலாம் எனப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.