news

News July 30, 2024

தினம் ஒரு திருக்குறள்!

image

▶குறள் பால்: அறத்துப்பால் ▶இயல்: பாயிரவியல் ▶அதிகாரம்: கடவுள் வாழ்த்து ▶குறள் எண்: 7 ▶குறள்: தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது. ▶பொருள்: ஒப்பாரும் மிக்காருமில்லாதவனுடைய அடியொற்றி நடப்பவர்களைத் தவிர, மற்றவர்களின் மனக்கவலை தீர வழியேதுமில்லை.

News July 30, 2024

நாய்களுக்கு அதிக உணவளித்த பெண்ணுக்கு சிறை

image

நியூசிலாந்தில் வளர்ப்பு நாய்களுக்கு அதீதமாக உணவளித்த பெண்ணுக்கு 2 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய மதிப்பில் சுமார் ₹60,154 இழப்பீடு வழங்கவும், நாய்கள் வளர்க்க ஒரு ஆண்டு தடையும் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021ல் அப்பெண்ணின் வீட்டில் இருந்து மீட்கப்பட்ட Nuggi என்ற நாய் அதீத பருமனால் நடக்கவும், மூச்சு விடவும் முடியாமல் சிரமப்பட்ட நிலையில் உயிரிழந்தது.

News July 30, 2024

மற்ற நாடுகளின் உதவி தேவை இல்லை: ஜெய்சங்கர்

image

இந்தியா – சீனா இடையிலான எல்லை பிரச்னையை தீர்க்க மற்ற நாடுகளின் உதவி தேவை இல்லை என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இருநாடுகளுக்கு இடையேயான உறவு சீராக இல்லை என்பது உண்மைதான் எனவும், இரு நாடுகளும் கலந்து பேசி தீர்வு காண வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் இரண்டும் பெரிய நாடுகள் என்பதால், மற்ற நாடுகள் இப்பிரச்னைகளில் ஆர்வம் காட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.

News July 30, 2024

இந்திய அணிக்கு பவுலிங் பயிற்சியாளர் நியமனம்?

image

இந்திய கிரிக்கெட் அணியின் பவுலிங் பயிற்சியாளராக தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் மோர்னே மோர்கல் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வங்க தேசத்திற்கு எதிரான தொடரில் இருந்து அவர் பவுலிங் பயிற்சியாளராக செயல்படுவார் என கூறப்படுகிறது. கம்பீரின் கோரிக்கையை ஏற்று பிசிசிஐ இந்த முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. வங்க தேசத்திற்கு எதிரான 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் செப்.19 முதல் தொடங்குகிறது.

News July 30, 2024

மாணவர்கள் உயிரிழப்பு குறித்து விசாரிக்க குழு அமைப்பு

image

டெல்லி ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் அடித்தளத்தில் வெள்ளத்தில் சிக்கி 3 மாணவர்கள் உயிரிழந்த விவகாரம் குறித்து விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் குழு அமைத்துள்ளது. வருங்காலங்களில் இது போன்று நிகழாமல் இருக்க தேவையான நடவடிக்கைகள் குறித்து பரிசீலிக்க 30 நாள்களில் அறிக்கை தாக்கல் செய்யவும் குழுவிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்கள் உயிரிழந்த விவகாரத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

News July 30, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (ஜூலை 30) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். பிறந்தநாள் கொண்டாடுபவர்களின் தெளிவான புகைப்படங்களை அனுப்பி, உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்.

இன்றைய தலைப்புச் செய்திகள்

image

➤குறிப்பிட்ட தனியார் மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கு தடுப்பூசி இலவசம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ➤RRB வாரியத்தில் நிரப்பப்படவுள்ள 7,951 பணியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம். ➤செந்தில்பாலாஜியின் நீதிமன்றக்காவல் 50ஆவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. ➤கட்டணம் செலுத்தாததால் மின்சார இணைப்பு துண்டிக்கப்படும் என குறுஞ்செய்தி வந்தால், அதை பொருட்படுத்த வேண்டாம் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

News July 30, 2024

பட்டியலில் இந்தியாவுக்கு எந்த இடம்?

image

33வது ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 26) தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. அனைத்து நாடுகளும் பதக்க வேட்டையில் இறங்கியுள்ள நிலையில், இந்தியா இதுவரை 1 பதக்கம் (வெண்கலம்) மட்டுமே வென்று பதக்க பட்டியலில் 23வது இடத்தில் உள்ளது. 5 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் என 9 பதக்கங்களுடன் சீனா முதல் இடத்திலும், தென் கொரியா, ஆஸ்திரேலியா 2, 3வது இடத்திலும் உள்ளன.

error: Content is protected !!