India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
▶ஜூலை – 30 | ▶ஆடி – 14 ▶கிழமை: செவ்வாய் ▶திதி: தசமி ▶நல்ல நேரம்: 07:45 AM – 08:45 AM & 04:45 PM – 05:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:15 AM & 07:30 PM – 08:30 PM ▶ராகு காலம்: 03:00 PM – 04:30 PM ▶எமகண்டம்: 09:00 AM – 10:30 AM ▶குளிகை: 12:00 PM – 01:30 PM ▶சந்திராஷ்டமம்: உத்திரம், ஹஸ்தம் ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்
சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்க இருந்த ‘புறநானூறு’ திரைப்படம் கைவிடப்பட்டதாக கூறப்படும் நிலையில், அந்த படத்தில் தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் டிசம்பர் மாதம் முதற்கட்ட படப்படிப்பு தொடங்க உள்ளதாகவும், கல்லூரி மாணவராக சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், இயக்குநர் சுதா இப்படத்தை இணைந்து தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் ஒரே நாளில் 3 அரசியல் பிரமுகர்கள் கொலை செய்யப்பட்டிருப்பது, சட்டம் ஒழுங்கு சீரழிந்து இருப்பதை காட்டுவதாக சசிகலா தெரிவித்துள்ளார். இவற்றையெல்லாம் தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் அரசு வேடிக்கை பார்த்து வருவதாகவும், நாள் தவறாமல் நடைபெறும் படுகொலைகளை தடுக்க தவறிய திமுக தலைமையிலான விளம்பர அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவிப்பதாகவும் அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
உ.பியில் பாலியல் வல்லுறவுக்கு ஆளான 85 வயது மூதாட்டி உயிரிழந்தார். வீட்டில் தனியாக வசித்து வந்த மூதாட்டியை, அவரது மருமகள் காண சென்ற போது, அண்டை வீட்டில் வசிக்கும் ராகேஷ் (35) என்பவர் பலாத்காரம் செய்து கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். இதைத் தொடர்ந்து போலீஸார் குற்றவாளியை கைது செய்த நிலையில், மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். ராகேஷ் குடிக்கு அடிமையானவர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
➤கவலையை நினைத்து கண்ணீர் சிந்துவதை விட, லட்சியத்தை நினைத்து ரத்தம் சிந்துவதே மேல். ➤தனிநபர்களைக் கொல்வது எளிது ஆனால் உங்கள் கருத்துக்களைக் கொல்ல முடியாது. ➤எதிலும் குருட்டு நம்பிக்கை என்பது ஆபத்தானது. மனிதனின் மூளையை முடமாக்கி அவனைப் பிற்போக்கில் தள்ளிவிடும். ➤சான்றோர் ஒரு கட்டத்தில் இறந்துவிடுகின்றனர். ஆனால் அவர்களின் நம்பிக்கைகள், குறிக்கோள்கள், இவ்வுலகைப் பிரகாசிக்கச் செய்கின்றன.
டெல்லியில் ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த 3 மாணவர்களின் குடும்பத்தினருக்கு தலா ₹10 லட்சம் நிவாரணத்தொகை வழங்கப்படும் என துணைநிலை ஆளுநர் வி.கே.சக்ஸேனா அறிவித்துள்ளார். போராடிய மாணவர்களை நேரில் சந்தித்து பேசிய அவர், சம்பவத்தை தடுக்க தவறிய அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இந்த உயிரிழப்புக்கு காரணமான எவரும் தப்ப முடியாது என்றும் உறுதியளித்தார்.
பிராந்திய கூட்டணியில் இருந்து துருக்கியை நீக்க, இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ், நேட்டோவை வலியுறுத்தியுள்ளார். துருக்கி அதிபர் தன்னை சதாம் உசேனை போல செயல்படுவதாகவும், அவருக்கு என்ன ஆனது என்பதை நினைவில் கொள்ள வேண்டும் எனவும் கட்ஸ் எச்சரித்துள்ளார். பாலஸ்தீனத்திற்கு எதிராக அநீதி தொடர்ந்தால் இஸ்ரேலுக்குள் துருக்கி படைகள் நுழையும் என அந்நாட்டு அதிபர் எர்டோகன் தெரிவித்து இருந்தார்.
செம்பருத்தி டீ குடித்தால் சர்க்கரை நோய் உள்ளிட்ட பல பிரச்னைகளுக்கு நல்லது என நடிகை நயன்தாரா தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டார். இதற்கு பதிலளித்த மருத்துவர் பிலிப்ஸ், செம்பருத்தி பூவில் ஆரோக்கிய நன்மைகள் இருப்பதாக அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை எனவும், இதை தினமும் குடித்தால் பெண்கள் பூப்பெய்துவது தள்ளிப்போகும் எனவும் கூறியிருந்தார். இதையடுத்து நயன்தாரா தனது பதிவை டெலிட் செய்துவிட்டார்.
*1626 – இத்தாலியில் நேப்பிள்ஸ் நகரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 10,000 பேர் உயிரிழந்தனர். *1886 – சமூகநீதி போராளி டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் பிறந்தநாள் இன்று. *2012 – ஆந்திரப் பிரதேசம், நெல்லூரில் தமிழ்நாடு விரைவு ரயில் தீப்பிடித்ததில் 32 பயணிகள் உயிரிழந்தனர், 27 பேர் காயமடைந்தனர். *1995 – இலங்கை, வாழைச்சேனையில் நடந்த கண்ணிவெடித் தாக்குதலில் ராணுவத் தளபதி நளின் அங்கம்மன கொல்லப்பட்டார்.
மேகதாது திட்டத்தால் தமிழகத்திற்குதான் அதிக பயன் கிடைக்கும் என கர்நாடகா முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் அணைகள் நிரம்பும்போது தமிழகத்திற்கு திறக்கப்படும் நீர், மேட்டூர் அணை நிரம்பியதும் கடலுக்கு திறந்துவிடப்படுவதாகவும், இப்படி வீணாக்கப்படும் நீரை சேமிக்கவே மேகதாது திட்டம் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், தேவையில்லாமல் தமிழகம் பிரச்னை செய்வதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.