news

News July 30, 2024

திமுகவினரே வன்முறையில் ஈடுபடலாமா?: ஓபிஎஸ்

image

அரசு ஊழியர்கள், காவலர்கள், பொதுமக்கள் என அனைவரையும் திமுகவினர் மிரட்டுவதாக ஓபிஎஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். டெண்டர் விடாமல் எப்படி சாலை போடப்பட்டது என உதவிப் பொறியாளர் கேட்டதற்கு சிவகங்கை ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் தாக்கிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருவதாகவும், ஆனால் முதல்வரோ, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதாக தம்பட்டம் அடித்து கொண்டிருப்பதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

News July 30, 2024

விமர்சனத்திற்கு உள்ளாகும் எலான் மஸ்க்

image

கமலா ஹாரிஸ் குறித்த டீப் ஃபேக் வீடியோவை பகிர்ந்ததற்காக எலான் மஸ்க் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார். வீடியோவில் கமலா, ஜோ பைடனை முதியவர் எனவும், நாட்டை வழிநடத்த தனக்கு தெரியாது எனவும் பேசுகிறார். டிரம்ப், மஸ்க் போன்றோரின் பொய் தகவல்கள் மக்களுக்கு தேவையில்லை என கமலா கூறியுள்ளார். மஸ்கின் பதிவு X-இன் கொள்கையை மீறினாலும், அவர் உரிமையாளர் என்பதால் நடவடிக்கை இருக்காது என பலரும் விமர்சிக்கின்றனர்.

News July 30, 2024

ராகுலுக்கு எந்த உரிமையும் இல்லை: வானதி

image

மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த நரேந்திர மோடி 3ஆவது முறையாக பிரதமரானதை 5 ஆம் தலைமுறை வாரிசான ராகுல் காந்தியால் ஜீரணிக்க முடியவில்லை என வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார். ஜனநாயகத்திற்கு எதிரான குடும்ப அரசியலில் மூழ்கி திளைக்கும் ராகுல் காந்திக்கு பாஜகவைப் பற்றி பேச உரிமை இல்லை எனவும் ஒரு கட்சியை ஒரு குடும்பமே அடிமைப்படுத்தி வைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

News July 30, 2024

இன்றைய நல்ல நேரம்

image

▶ஜூலை – 30 | ▶ஆடி – 14 ▶கிழமை: செவ்வாய் ▶திதி: தசமி ▶நல்ல நேரம்: 07:45 AM – 08:45 AM & 04:45 PM – 05:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:15 AM & 07:30 PM – 08:30 PM ▶ராகு காலம்: 03:00 PM – 04:30 PM ▶எமகண்டம்: 09:00 AM – 10:30 AM ▶குளிகை: 12:00 PM – 01:30 PM ▶சந்திராஷ்டமம்: உத்திரம், ஹஸ்தம் ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்

News July 30, 2024

சூர்யாவுக்கு சொல்லப்பட்ட கதையில் SK?

image

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்க இருந்த ‘புறநானூறு’ திரைப்படம் கைவிடப்பட்டதாக கூறப்படும் நிலையில், அந்த படத்தில் தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் டிசம்பர் மாதம் முதற்கட்ட படப்படிப்பு தொடங்க உள்ளதாகவும், கல்லூரி மாணவராக சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், இயக்குநர் சுதா இப்படத்தை இணைந்து தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News July 30, 2024

சட்டம் ஒழுங்கு சீரழிவு: சசிகலா

image

தமிழகத்தில் ஒரே நாளில் 3 அரசியல் பிரமுகர்கள் கொலை செய்யப்பட்டிருப்பது, சட்டம் ஒழுங்கு சீரழிந்து இருப்பதை காட்டுவதாக சசிகலா தெரிவித்துள்ளார். இவற்றையெல்லாம் தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் அரசு வேடிக்கை பார்த்து வருவதாகவும், நாள் தவறாமல் நடைபெறும் படுகொலைகளை தடுக்க தவறிய திமுக தலைமையிலான விளம்பர அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவிப்பதாகவும் அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

News July 30, 2024

பாலியல் வன்கொடுமையால் மூதாட்டி உயிரிழப்பு

image

உ.பியில் பாலியல் வல்லுறவுக்கு ஆளான 85 வயது மூதாட்டி உயிரிழந்தார். வீட்டில் தனியாக வசித்து வந்த மூதாட்டியை, அவரது மருமகள் காண சென்ற போது, அண்டை வீட்டில் வசிக்கும் ராகேஷ் (35) என்பவர் பலாத்காரம் செய்து கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். இதைத் தொடர்ந்து போலீஸார் குற்றவாளியை கைது செய்த நிலையில், மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். ராகேஷ் குடிக்கு அடிமையானவர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

News July 30, 2024

பகத்சிங் பொன்மொழிகள்

image

➤கவலையை நினைத்து கண்ணீர் சிந்துவதை விட, லட்சியத்தை நினைத்து ரத்தம் சிந்துவதே மேல். ➤தனிநபர்களைக் கொல்வது எளிது ஆனால் உங்கள் கருத்துக்களைக் கொல்ல முடியாது. ➤எதிலும் குருட்டு நம்பிக்கை என்பது ஆபத்தானது. மனிதனின் மூளையை முடமாக்கி அவனைப் பிற்போக்கில் தள்ளிவிடும். ➤சான்றோர் ஒரு கட்டத்தில் இறந்துவிடுகின்றனர். ஆனால் அவர்களின் நம்பிக்கைகள், குறிக்கோள்கள், இவ்வுலகைப் பிரகாசிக்கச் செய்கின்றன.

News July 30, 2024

உயிரிழந்த மாணவர்களுக்கு ₹10 லட்சம் நிவாரணம்

image

டெல்லியில் ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த 3 மாணவர்களின் குடும்பத்தினருக்கு தலா ₹10 லட்சம் நிவாரணத்தொகை வழங்கப்படும் என துணைநிலை ஆளுநர் வி.கே.சக்ஸேனா அறிவித்துள்ளார். போராடிய மாணவர்களை நேரில் சந்தித்து பேசிய அவர், சம்பவத்தை தடுக்க தவறிய அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இந்த உயிரிழப்புக்கு காரணமான எவரும் தப்ப முடியாது என்றும் உறுதியளித்தார்.

News July 30, 2024

இஸ்ரேல் vs துருக்கி: முற்றும் பதற்றம்

image

பிராந்திய கூட்டணியில் இருந்து துருக்கியை நீக்க, இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ், நேட்டோவை வலியுறுத்தியுள்ளார். துருக்கி அதிபர் தன்னை சதாம் உசேனை போல செயல்படுவதாகவும், அவருக்கு என்ன ஆனது என்பதை நினைவில் கொள்ள வேண்டும் எனவும் கட்ஸ் எச்சரித்துள்ளார். பாலஸ்தீனத்திற்கு எதிராக அநீதி தொடர்ந்தால் இஸ்ரேலுக்குள் துருக்கி படைகள் நுழையும் என அந்நாட்டு அதிபர் எர்டோகன் தெரிவித்து இருந்தார்.

error: Content is protected !!