India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொலை செய்யப்பட்டது, நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மாநில அரசு அறிவித்த இழப்பீட்டுத் தொகையை பெற, மருத்துவரின் தந்தை மறுத்துள்ளார். இந்த தொகையை பெற்றுக்கொண்டால், அது தனது மகளுக்கு வலியை கொடுக்கும் என்றும், தனக்கு நியாயம்தான் வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
சிறப்பு அந்தஸ்து 370 சட்டப்பிரிவு ரத்தான பின், ஜம்மு காஷ்மீரில் முதல்முறையாக தேர்தல் நடக்கிறது. 90 தொகுதிகளை கொண்ட சட்டப்பேரவைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. மொத்தம் 87 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில், 11,838 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்படவுள்ளன. சமீபகாலமாக தீவிரவாதத் தாக்குதல்கள் அதிகரித்துள்ள நிலையில், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.
அதிக கனமழை பெய்ததால் சிறார் திருமணம் அதிகரித்துள்ளதாக பாகிஸ்தான் விநோத காரணத்தைக் கூறியுள்ளது. அதிக சிறார் திருமணம் நடைபெறும் நாடுகள் பட்டியலில் பாகிஸ்தான் 6ஆவது இடத்தில் உள்ளது. சிறார் திருமணம் குறைந்து வந்த நிலையில், 2022 கனமழை வெள்ளத்தால் பயிர்கள் சேதமடையவே இழப்பை சந்திக்க முடியாத குடும்பங்கள் பணம் பெற்றுக் கொண்டு சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைப்பதாக பாகிஸ்தான் கூறியுள்ளது.
அரசுப் பள்ளிகளில் உள்ள பள்ளி மேலாண்மைக் குழுவை (SMC) கட்டமைக்கும் 2ஆவது கூட்டம், நாளை நடைபெறவுள்ளது. கடந்த சனிக்கிழமை நடந்த கூட்டத்தில் 12,117 அரசுப் பள்ளிகளில் SMC மறுகட்டமைப்பு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து நாளைய கூட்டத்தில் 8,000க்கும் அதிகமான பள்ளிகளில் மறுகட்டமைப்பு செய்யப்படுகிறது. அரசுப்பள்ளி மாணவர்களின் நலனை மேம்படுத்த பெற்றோர், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் இந்தக் குழுவில் இடம்பெறுவர்.
ஸ்டெனோகிராபர் கிரேடு ‘சி’ மற்றும் ‘டி’ பதவிக்கு மொத்தம் 2006 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை (ஆக.17) கடைசி நாளாகும். வயது: கிரேடு ‘சி’-க்கு 18-30, கிரேடு ‘டி’ 18-27 இருக்க வேண்டும். சென்னை, கோவை, மதுரை, நெல்லை, சேலம், திருச்சி மற்றும் புதுச்சேரியில் தேர்வு நடத்தப்பட்டு, தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். கல்வித்தகுதி: +2 தேர்ச்சி. இணையதளம்: <
ரன்பிர் கபூர், அலியா பட் நடிப்பில் வெளியான ‘பிரம்மாஸ்திரா 1’ படத்தின் “கேசரியா..” பாடலை பாடிய அர்ஜித் சிங்கிற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் ஏற்கெனவே ‘பத்மாவத்’ படத்தின் “பிந்தே தில்…” பாடலுக்காக தேசிய விருது பெற்றுள்ளார். சிறந்த இசையமைப்பாளராக ‘பிரம்மாஸ்திரா 1’ படத்திற்காக பிரிட்டம் தேர்வாகியுள்ளார். சிறந்த VFX திரைப்படமாகவும் ‘பிரம்மாஸ்திரா 1’ தேர்வு செய்யப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் அறிவித்துள்ளார். செப்.18, 25 மற்றும் அக்.1 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது. 10 ஆண்டுகளுக்குப்பிறகு, JKஇல் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. அதே போல, ஹரியானாவில் அக்.1ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. மொத்தமாக அக்.4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆடி மாதத்தின் கடைசி வெள்ளியையொட்டி மற்றும் வரலட்சுமி நோன்பையொட்டி, அம்மன் கோயில்களில் இன்று மாலை சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க முடியாத சுமங்கலிப் பெண்கள், தங்கள் வீட்டின் அருகில் வசிக்கும் பெண்களுக்கு வெற்றிலை பாக்கு, பூ, 2 வாழைப்பழம், மஞ்சள், குங்குமம், ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து தாம்பூலம் வழங்கி ஆசிபெறலாம். அவ்வாறு செய்தால் அம்மனின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்பது ஐதீகம்.
பாரிஸ் ஒலிம்பிக்ஸில் மகளிர் மல்யுத்த இறுதிப்போட்டிக்கு முந்தைய நாள் இரவு வினேஷ் போகத் உயிரிழந்து விடுவார் என நினைத்ததாக அவரது பயிற்சியாளர் Woller Akos சமூக வலைதளத்தில் பதிவிட்டு உடனே நீக்கியது தற்போது தெரிய வந்துள்ளது. எடையை குறைக்க வேண்டி கடுமையான தொடர் பயிற்சிகள் மேற்கொண்டதால் வினேஷ் உருக்குலைந்து விட்டதாகவும், ஆனால் எப்படியோ மீண்டு வந்ததாகவும் அவர் ஹங்கேரி மொழியில் பதிவிட்டுள்ளார்.
மருத்துவமனையில் இருந்து திரும்பியபோது வினேஷ் உருக்கமாக பேசியதையும் பயிற்சியாளர் பதிவு செய்திருந்தார். நெருக்கடியான சூழலில் உலகின் NO.1 வீராங்கனையை வீழ்த்தியதை நினைவில் கொள் என பயிற்சியாளர் கூறியதை வினேஷ் சுட்டிக் காட்டியதாகவும், பதக்கங்கள் வெறும் பொருள்கள்தான் என்று கூறியதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், தன்னுடைய இலக்கை எட்டிவிட்டதாக வினேஷ் கூறியதாகவும் பயிற்சியாளர் பதிவிட்டிருந்தார்.
Sorry, no posts matched your criteria.