news

News July 29, 2024

மீனவ குடும்பங்களுக்கான உதவித்தொகை உயர்வு

image

இலங்கை சிறையில் வாடும் மீனவ குடும்பங்களுக்கான உதவித்தொகையை உயர்த்தி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் மீனவ குடும்பங்களுக்கான தின உதவித் தொகை ₹250லிருந்து ₹350ஆக உயர்த்தி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட விசைப் படகுகளுக்கான நிவாரணம் ₹6 லட்சமாகவும், நாட்டுப் படகுகளுக்கான நிவாரணம் ₹2 லட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

News July 29, 2024

Olympics: தென் கொரியர்கள் ஏன் வில்வித்தையில் பிரபலம்?

image

ஒலிம்பிக் வரலாற்றில் தென் கொரிய வீரர்கள் வில்வித்தையில் அதிக பதக்கங்களை வென்றுள்ளனர். 1984 முதல் அவர்கள் வில்வித்தையில் 27 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளனர். ஆரம்பப் பள்ளியில் இருந்தே அவர்களுக்கு வில்வித்தை கற்றுத்தரப்படுவதே இதற்கு காரணமாகக் கூறப்படுகிறது. இதற்காக உபகரணங்களை இலவசமாக கொடுக்கும் அரசு, கட்டணமும் வசூலிப்பதில்லை. தென் கொரிய மகளிர் அணி ஏற்கெனவே ஒலிம்பிக் 2024 தொடரில் தங்கம் வென்றுள்ளனர்.

News July 29, 2024

சாதிவாரி கணக்கெடுப்பை உடனே நடத்துக: முதல்வர்

image

நாட்டில் சமூக நீதியை நிலைநாட்ட சாதிவாரி கணக்கெடுப்பை உடனே நடத்த வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார். திமுகவின் சட்ட போராட்டத்தால் கடந்த 3 ஆண்டுகளில் OBC மாணவர்களுக்கு 15,066 மருத்துவ இடங்கள் கிடைத்துள்ளதாக கூறிய அவர், இந்தியாவில் பின்தங்கிய சமூகத்தின் விகிதாச்சாரத்தை தெரிந்துகொள்ள சாதிவாரி கணக்கெடுப்பை உடனே நடத்த வேண்டும் என மத்திய அரசை கேட்டுக்கொண்டார்.

News July 29, 2024

ஆகஸ்டில் வங்கிகள் 8 நாள்கள் இயங்காது

image

ஆகஸ்ட் மாதம் வங்கிகள் 8 நாள்கள் இயங்காது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ஆர்பிஐ தரவுகள்படி, ஆகஸ்ட் 4, ஆகஸ்ட் 11, ஆகஸ்ட் 18 மற்றும் ஆகஸ்ட் 25 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளிலும், ஆகஸ்ட் 10 மற்றும் ஆகஸ்ட் 24 ஆகிய சனிக்கிழமைகளிலும் வங்கிகள் இயங்காது. அதேபோல, சுந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15ஆம் தேதியும், கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு ஆகஸ்ட் 26ஆம் தேதியும் நாடு முழுவதும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.

News July 29, 2024

கள் விற்பனை குறித்து பரிசீலிக்க உத்தரவு

image

தமிழகத்தில் கள் விற்பனை சாத்தியமாகுமா என பரிசீலிக்க, அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளில் தரமான மது கிடைப்பதில்லை, கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக குறிப்பிட்டு, ஐடி ஊழியர் முரளிதரன், நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதனை விசாரித்த நீதிமன்றம், கள் விற்பனை சாத்தியமா என ஆய்வு செய்து அறிவிக்க, அரசுக்கு ஆணையிட்டுள்ளது.

News July 29, 2024

நடாலை வென்றார் ஜோகோவிச்

image

ஒலிம்பிக்ஸ் ஆண்கள் ஒற்றையர் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயினின் ரஃபேல் நடாலை செர்பியாவின் நோவாக் ஜோகோவிச் தோற்கடித்தார். அவர்கள் இருவரும் 60ஆவது முறையாக நேருக்கு நேர் மோதிக் கொண்டனர். இதில், ஜோகோவிக் 6 – 1, 6 – 4 என்ற நேர் செட் கணக்கில் நடாலை தோற்கடித்தார். இந்த இரண்டு ஜாம்பவான்களும் மோதும் கடைசிப் போட்டி இதுவாகத்தான் இருக்கும் என்ற எதிர்பார்ப்பால் ஆட்டத்தில் அனல் பறந்தது.

News July 29, 2024

Olympics: காலிறுதியில் இந்தியா தோல்வி

image

பாரிஸ் ஒலிம்பிக் வில்வித்தை காலிறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்துள்ளது. ஆடவருக்கான வில்வித்தையில் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காலிறுதியில் தோல்வியடைந்து ஏமாற்றம் அளித்துள்ளது. காலிறுதியில் துருக்கி அணியை எதிர்கொண்ட இந்தியாவின் தருண்தீப், தீரஜ், பிரவீன் இணை 2- 6 என்ற கணக்கில் தோல்வியடைந்தனர்.

News July 29, 2024

ஈட்டி தாக்கிய சிறுவன் மூளைச்சாவு

image

வடலூர், பார்வதிபுரத்தில் ஈட்டி தாக்கிய சிறுவன் கிஷோர் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 24ஆம் தேதி சிலம்பம் பயிற்சி மேற்கொண்டிருந்த போது, வேறொருவர் எறிந்த ஈட்டி சிறுவனின் தலையில் தாக்கியது. இதனையடுத்து, மருத்துவமனையில் சிசிச்சை பெற்று வந்த அவர், இன்று மூளைச்சாவு அடைந்தார். இதனையறிந்த சிறுவனின் தாயார், துக்கம் தாங்காமல் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

News July 29, 2024

Apply Now: இந்தியன் வங்கியில் 1,500 பணியிடங்கள்

image

இந்தியன் வங்கியில் காலியாக உள்ள 1,500 தொழில் பழகுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க, 20 – 28 வயதிற்கு உட்பட்டவராகவும், பட்டப்படிப்பு முடித்தவராகவும் இருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் nats.education.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து, இந்தியன் வங்கியின் <>indianbank.in<<>> என்ற இணையத்தளத்தில் வரும் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

News July 29, 2024

மணிக்கு 130 கி.மீ வேகத்தை தாண்டினால் வழக்கு

image

கர்நாடகாவில் மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது ஆகஸ்ட் 1 முதல் வழக்குப்பதிவு செய்யப்படும் என அம்மாநில போக்குவரத்து காவல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கர்நாடகாவில் 90% சாலை விபத்துகள் அதிவேகமாக பயணிப்பதால் நேரிடுவதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், சாலை விபத்துகளை தடுக்கும் நோக்கில், புதிய விதி அமலுக்கு வரவுள்ளது. தமிழ்நாட்டில் வேக வரம்பு 60 கி.மீ என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!