India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்தியன் வங்கியில் காலியாக உள்ள 1,500 தொழில் பழகுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க, 20 – 28 வயதிற்கு உட்பட்டவராகவும், பட்டப்படிப்பு முடித்தவராகவும் இருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் nats.education.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து, இந்தியன் வங்கியின் <
கர்நாடகாவில் மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது ஆகஸ்ட் 1 முதல் வழக்குப்பதிவு செய்யப்படும் என அம்மாநில போக்குவரத்து காவல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கர்நாடகாவில் 90% சாலை விபத்துகள் அதிவேகமாக பயணிப்பதால் நேரிடுவதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், சாலை விபத்துகளை தடுக்கும் நோக்கில், புதிய விதி அமலுக்கு வரவுள்ளது. தமிழ்நாட்டில் வேக வரம்பு 60 கி.மீ என்பது குறிப்பிடத்தக்கது.
மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கான நீர் திறப்பு வினாடிக்கு 23,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னதாக 20,000 கன அடியாக இருந்த நீர் திறப்பு, டெல்டா பாசனம் மற்றும் ஆடிப்பெருக்கை முன்னிட்டு, அதிகரிக்கப்பட்டுள்ளது. அணை கொள்ளளவு 120 அடியாக உள்ள நிலையில், நீர்மட்டம் 118 அடியை தாண்டியுள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் கனமழையால், மேட்டூருக்கு நீர்வரத்து உயர்ந்துள்ளது.
பாரிஸ் ஒலிம்பிக் பேட்மிண்டன் ஆண்கள் இரட்டையர் பிரிவில், சாத்விக்-சிராக் ஜோடி காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர். பிரான்ஸ் ஜோடி, இந்தோனேசியாவிடம் தோல்வியடைந்தால் காலிறுதிக்கு தகுதிபெற்றுள்ளனர். இதன் மூலம் ஒலிம்பிக் வரலாற்றில் காலிறுதிக்கு முன்னேறிய முதல் இந்திய ஜோடி என்ற சாதனையை படைத்துள்ளனர். நாளை அவர்கள் இந்தோனேசியாவுடன் மோதவுள்ளனர்.
தமிழகத்தில் இரவு 10 மணி வரை நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
இந்தியாவின் முன்னணி பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்தியன் வங்கி முதல் காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, நிகர லாபம் 41% அதிகரித்து, ₹2,403 கோடியாக உயர்ந்துள்ளது. சென்னையை தலைமையிடமாக கொண்ட இந்த வங்கியின் நிகர லாபம், கடந்த ஆண்டு ₹1,709 கோடியாக இருந்தது. வட்டி வருவாய் ₹13,049 கோடியில் இருந்து, ₹15,039 கோடியாக அதிகரித்துள்ளது. மோசமான கடன்கள் 0.70%இல் இருந்து 0.39%ஆக குறைந்துள்ளது.
தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் அரசு கலைக்கல்லூரிகளில் 6,699 கவுரவ விரிவுரையாளர்கள் பணி தொடர TN அரசு அனுமதி அளித்துள்ளது. ஏற்கெனவே, பணி நியமனம் செய்யப்பட்ட கவுரவ விரிவுரையாளர்களுக்கு மாதம் ₹25,000 வீதம் 11 மாதங்களுக்கு தொகுப்பூதிய அடிப்படையில், மார்ச் 2025 வரை பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் காலியாகவுள்ள பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என தெரிகிறது.
கட்டணம் செலுத்தாததால் மின்சார இணைப்பு துண்டிக்கப்படும் என குறுஞ்செய்தி வந்தால், அதை பொருட்படுத்த வேண்டாம். முதலில் உங்கள் கட்டண நிலையினை மின்வாரிய வலைதளம்/செயலியில் சரி பார்க்க வேண்டும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது. மோசடி கும்பல், இதுபோன்ற குறுஞ்செய்தியை அனுப்பி, தனிப்பட்ட தகவலை திருடி மோசடி செய்கின்றன. எனவே, குறுஞ்செய்தி வந்த எண்ணை அழைக்கவோ/ பணம் செலுத்தவோ வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.
ஸ்மார்ட் ஃபோன்களை அதிகமாகப் பயன்படுத்துவதால் கண் சோர்வு மற்றும் தூக்கமின்மை ஏற்படலாம் என, பல ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. இந்நிலையில், மெக்சிகன் யுனிவர்சிட்டி ஆய்வாளர்கள் சமீபத்தில் நடத்திய ஆய்வில், ஸ்மார்ட் ஃபோன், லேப்டாப், டிவியிலிருந்து வெளியாகும் நீல நிற ஒளிக்கதிர்கள் உடலின் கொலாஜன் புரதத்தை பாதிப்பது தெரியவந்துள்ளது. மேலும் பல சரும பிரச்னைகளை ஏற்படுத்தும் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
செந்தில்பாலாஜியின் நீதிமன்றக்காவலை 50ஆவது முறையாக நீட்டித்து, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கைதாகி ஒரு வருடத்திற்கு மேல் சிறையில் இருக்கும் அவர், உடல்நிலையை காரணம் காட்டி ஜாமின் கோரினார். ஆனால், தற்போதுவரை ஜாமின் கிடைக்கவில்லை. இந்நிலையில் காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவரது காவலை நீதிபதி அல்லி நீட்டித்து உத்தரவிட்டார்.
Sorry, no posts matched your criteria.