news

News July 29, 2024

தர்மபுரி கொலையுடன் தொடர்புடைய 4 பேர் கைது

image

தர்மபுரி மாவட்டம் இலக்கியம்பட்டியில் ஓட்டல் புகுந்து இளைஞரை கொலை செய்த வழக்கில், 4 பேரை போலீசார் கைது செய்தனர். பிரியாணி ஓட்டலில் வேலை பார்த்துவந்த முகமது ஆஷிக்கை இரு தினங்களுக்கு முன், 4 இளைஞர்கள் வெட்டவெளியில் வெட்டிக்கொன்றனர். இதில் தற்போது கைதாகியிருக்கும் நான்கு பேர் அளித்த வாக்குமூலத்தின்படி, காதல் விவகாரம் பிடிக்காமல் பெண்ணின் உறவினர்களே காதலனை கொலை செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

News July 29, 2024

அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை

image

தமிழகத்தில் இரவு 7 மணி வரை மழை பெய்யக்கூடிய மாவட்டங்களின் பெயர்களை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

News July 29, 2024

பாம்புக்கடியால் சுமார் 50,000 பேர் பலி

image

இந்தியாவில் ஆண்டுதோறும் 30 முதல் 40 லட்சம் பேரை பாம்பு கடிப்பதாக, பாஜக எம்.பி ராஜீவ் பிரதாப் ரூடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து நாடாளுமன்றத்தில் பேசிய அவர், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 50,000 பேர் பாம்புக்கடியால் உயிரிழப்பதாகக் கூறினார். இது, உலகளவில் அதிகபட்ச எண்ணிக்கை என குறிப்பிட்ட அவர், பருவநிலை மாற்றத்தால் வெப்பநிலை உயர்ந்து வருவது, இதற்கு முக்கிய காரணம் என்றார்.

News July 29, 2024

ரசிகர்களுக்கு தனுஷ் நன்றி

image

ராயன் திரைப்படத்தை வெற்றி பெற வைத்த ரசிகர்களுக்கு, நடிகரும், இயக்குநருமான தனுஷ் தனது X பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார். இந்த வெற்றி தனக்கு கிடைத்த மிகச்சிறந்த பிறந்த நாள் பரிசு
என்றும், திரைப்படத்துறையினர், நண்பர்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் தனுஷ் குறிப்பிட்டுள்ளார். முடிவில், அவரது பாணியில் அன்புடன் D என்றும் பதிவிட்டுள்ளார்.

News July 29, 2024

2025 ஆசியக் கோப்பையை நடத்துகிறது இந்தியா

image

2025ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் ஆசியக் கோப்பை டி20 தொடர் இந்தியாவில் நடைபெறவுள்ளது. 13 போட்டிகளைக் கொண்ட இத்தொடரில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, ஆஃப்கானிஸ்தான் உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கவுள்ளன. போட்டிகள் நடைபெறும் தேதிகள் இன்னும் முடிவாகாத நிலையில் செப்டம்பரில் நடத்தலாம் என்று ஆலோசிக்கப்படுகிறது. 2027 ஆசியக் கோப்பை ஒருநாள் தொடர் வங்கதேசத்தில் நடைபெறவுள்ளது.

News July 29, 2024

Apply Now: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

image

RRB வாரியத்தில் நிரப்பப்படவுள்ள 7,951 பணியிடங்களுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம். ஜூனியர் இன்ஜினியர், மெட்டீரியல் சூப்பிரண்டு, கெமிக்கல் சூப்பர்வைசர் பணியில் சேர ஆர்வம் உள்ளவர்கள் ஆகஸ்ட் 29ஆம் தேதிவரை விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி: B.Tech., BE., CBT-1, CBT-2 . வயது வரம்பு:18-36. தேர்வு: கணினி வழிதேர்வு. ஊதியம்: ₹35,400-₹44,900/-. கூடுதல் தகவல்களுக்கு<> RRB <<>>இணைய முகவரியை கிளிக் செய்யவும்.

News July 29, 2024

வெனிசூலா அதிபர் தேர்தலில் வாகை சூடிய மதுரோ

image

வெனிசூலா அதிபர் தேர்தலில் ஐக்கிய சோஷலிஸ்ட் கட்சி வேட்பாளர் நிகோலஸ் மதுரோ 3ஆவது முறையாக வெற்றி பெற்றுள்ளார். பொருளாதார நெருக்கடி, மக்கள் வெளியேற்றம் போன்ற விவகாரங்கள் இந்த தேர்தலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. எதிர்க்கட்சி சார்பில் போட்டியிட்ட எட்மண்டோ கான்சல் வெல்வார் என பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் கூறிய நிலையில், அவற்றை பொய்யாகும் வகையில் மதுரோ ஆட்சியை தக்க வைத்துகொண்டார்.

News July 29, 2024

Olympics: ஜோதிக்குள் ஒளிந்திருக்கும் ரகசியம்

image

நெருப்பு வளையம் போல இருக்கும் பாரிஸ் ஒலிம்பிக்ஸ் ஜோதியைக் கண்டு உலகமே வியக்கிறது. எரிபொருள் இல்லாத 100% எலக்ட்ரிக் தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஜோதி ‘ஹாட்-ஏர்’ பலூன் மேல் ஒளிர்கிறது. முனைகளில் இருந்து உயர் அழுத்தத்தில் உள்ளுக்குள்ளே நீர் பாய்வதால் நீராவியாகி, மேக புகையை உருவாகிறது. அதன் மீது 40 எல்இடி விளக்குகளின் ஒளி வெள்ளம் விழும் போது, நிஜமான தீப்பிழம்பு போல ஜோதி ஒளிர்கிறது.

News July 29, 2024

டீப் ஃபேக்கிற்கு எதிராக எழும் குரல்

image

டீப் ஃபேக்கால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க தேசிய AI ஒழுங்காற்று ஆணையத்தை நிறுவ வேண்டுமென்ற கோரிக்கை வலுத்து வருகிறது. முதலில் மீம் கண்டென்ட்டுகளுக்காக விளையாட்டாக பயன்படுத்தப்பட்ட ‘டீப் ஃபேக்'(Deep fake) தற்போது திரைத்துறையினர், அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலரையும் அச்சுறுத்துகிறது. கடந்த தேர்தலில் வாய்ஸ் ஃபேக் மூலம் தலைவர்களின் பேச்சை திரித்து வெளியிட்ட விவகாரம் பூதாகரமானது குறிப்பிடத்தக்கது.

News July 29, 2024

இந்தியர்கள் லெபனான் செல்ல கட்டுப்பாடு

image

ஹமாஸ் குழுவிற்கு ஆதரவளிக்கும் லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கத்திற்கு எதிராக தொடர் தாக்குதல்களை நடத்த, இஸ்ரேல் அரசு திட்டமிட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. நிலைமை நாளுக்குநாள் மோசமடைந்து வருவதால், அங்குள்ள இந்தியர்களை பாதுகாப்பாக இருக்குமாறு, இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. இஸ்ரேல் தாக்குதல் அதிகரிப்பதால், இந்தியர்கள் லெபனான் செல்லவும் கட்டுப்பாடு விதித்துள்ளது.

error: Content is protected !!