India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்திய பங்குச்சந்தைகள் இன்று புதிய உச்சம் தொட்டு சாதனை படைத்துள்ளது. நேற்று 24,835 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்த தேசிய பங்குச்சந்தை நிஃப்டி, இன்று மதியம் 12 மணியளவில் 153 புள்ளிகள் உயர்ந்து 24,988 புள்ளிகளை தொட்டது. நிஃப்டி இன்றே 25,000 புள்ளிகளை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மதியத்திற்கு பின் மளமளவென சரிந்து மீண்டும் 24,836 புள்ளிகளுக்கு வந்தது.
மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான சிபிஐ வழக்கில், டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலின் ஜாமின் மனு மீதான தீர்ப்பை, டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. அமலாக்கத்துறை வழக்கில் ஜாமின் கிடைத்த நிலையில், சிபிஐ வழக்கிலும் ஜாமின் கேட்டு, உயர்நீதிமன்றத்தில் அவர் மனுத்தாக்கல் செய்திருந்தார். இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, முறைகேட்டிற்கு அடிகோலியவர் கெஜ்ரிவால் என சிபிஐ தரப்பில் வாதிடப்பட்டது.
தமிழ் நடிகர்கள், நடிகைகள் புதிய படங்களில் நடிப்பதற்கு தயாரிப்பாளர் சங்கம் செக் வைத்துள்ளது. பலர் ஏற்கெனவே அட்வான்ஸ் வாங்கிய படங்களில் நடித்து முடிக்காமல், புதிய படங்களுக்கு அட்வான்ஸ் வாங்குவதாக தயாரிப்பாளர்கள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. இதனால், பல தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படுவதால், ஏற்கெனவே ஒப்புக்கொண்ட படங்களில் நடித்து முடித்த பின்பே புதிய படங்களுக்கு செல்ல தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
அமெரிக்காவில் ‘டெப்ஃலான் ஃப்ளூ’ என்ற நோய் பரவி வருவதை நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். வீட்டில் சமைப்பதற்காக பயன்படுத்தும் நான்ஸ்டிக் சமையல் பாத்திரங்கள் இந்த நோய்க்கு காரணமாக அமைவதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டில் 267 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. நான்ஸ்டிக் தவாவை அதிக வெப்பத்தில் வைத்து சமைக்கும் போது, அதில் உள்ள ரசாயன பூச்சு ‘டெப்ஃலான் ஃப்ளூ’ காய்ச்சலை உருவாக்குகிறது.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா நூலிழையில் பதக்கத்தை தவறவிட்டுள்ளது. ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் இறுதிப் போட்டியில் அர்ஜூன் பாபுதா வெற்றியை நெருங்கி வந்து கடைசி நேரத்தில் தோல்வியடைந்துள்ளார். பரபரப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் அர்ஜூன் 208.4 புள்ளிகளுடன் நான்காவது இடத்தைப் பிடித்தார்.
தர்மபுரி மாவட்டம் இலக்கியம்பட்டியில் ஓட்டல் புகுந்து இளைஞரை கொலை செய்த வழக்கில், 4 பேரை போலீசார் கைது செய்தனர். பிரியாணி ஓட்டலில் வேலை பார்த்துவந்த முகமது ஆஷிக்கை இரு தினங்களுக்கு முன், 4 இளைஞர்கள் வெட்டவெளியில் வெட்டிக்கொன்றனர். இதில் தற்போது கைதாகியிருக்கும் நான்கு பேர் அளித்த வாக்குமூலத்தின்படி, காதல் விவகாரம் பிடிக்காமல் பெண்ணின் உறவினர்களே காதலனை கொலை செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் இரவு 7 மணி வரை மழை பெய்யக்கூடிய மாவட்டங்களின் பெயர்களை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இந்தியாவில் ஆண்டுதோறும் 30 முதல் 40 லட்சம் பேரை பாம்பு கடிப்பதாக, பாஜக எம்.பி ராஜீவ் பிரதாப் ரூடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து நாடாளுமன்றத்தில் பேசிய அவர், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 50,000 பேர் பாம்புக்கடியால் உயிரிழப்பதாகக் கூறினார். இது, உலகளவில் அதிகபட்ச எண்ணிக்கை என குறிப்பிட்ட அவர், பருவநிலை மாற்றத்தால் வெப்பநிலை உயர்ந்து வருவது, இதற்கு முக்கிய காரணம் என்றார்.
ராயன் திரைப்படத்தை வெற்றி பெற வைத்த ரசிகர்களுக்கு, நடிகரும், இயக்குநருமான தனுஷ் தனது X பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார். இந்த வெற்றி தனக்கு கிடைத்த மிகச்சிறந்த பிறந்த நாள் பரிசு
என்றும், திரைப்படத்துறையினர், நண்பர்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் தனுஷ் குறிப்பிட்டுள்ளார். முடிவில், அவரது பாணியில் அன்புடன் D என்றும் பதிவிட்டுள்ளார்.
2025ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் ஆசியக் கோப்பை டி20 தொடர் இந்தியாவில் நடைபெறவுள்ளது. 13 போட்டிகளைக் கொண்ட இத்தொடரில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, ஆஃப்கானிஸ்தான் உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கவுள்ளன. போட்டிகள் நடைபெறும் தேதிகள் இன்னும் முடிவாகாத நிலையில் செப்டம்பரில் நடத்தலாம் என்று ஆலோசிக்கப்படுகிறது. 2027 ஆசியக் கோப்பை ஒருநாள் தொடர் வங்கதேசத்தில் நடைபெறவுள்ளது.
Sorry, no posts matched your criteria.