India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பிரபல யூடியூபர் ரபி (the biriyani man) லைவ்-இல் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சக யூடியூபர்கள் இர்ஃபான், தயாளு ஆகியோரை பிரியாணி மேன் வம்பிழுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவருக்கு எதிராக A2D உள்ளிட்ட சில யூடியூபர்கள் வீடியோ வெளியிட்டனர். இந்நிலையில் நேற்று லைவ் செய்து கொண்டிருந்தபோது, திடீரென தூக்குபோட முயன்ற ரபியை, அவரது தாயார் தடுத்து நிறுத்தினார்.
பட்ஜெட் அல்வா நாட்டின் பெரும்பாலான மக்களுக்கு கிடைக்கவில்லை என ராகுல் காந்தி கிண்டலாக தெரிவித்துள்ளார். மக்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய அவர், பாஜகவிற்கு வெறுப்பு, கசப்புதான் தெரிவதாக விமர்சித்தார். பட்ஜெட் திட்டமிடலில் ஓபிசி, பட்டியலினத்தவர்கள் இடம்பெறவில்லை என்றும், பாஜகவிற்கு இந்தியாவின் கலாசாரம் தெரியவில்லை எனவும் கூறினார். இதற்கு பாஜக எம்.பிக்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
ஆக.16ஆம் தேதி முதல் புதிய திரைப்படங்கள் தொடங்குவதை தற்காலிகமாக நிறுத்திவைக்க, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. தற்போது நடைபெற்றுவரும் அனைத்து படப்பிடிப்புகளையும் அக்.30 ஆம் தேதிக்குள் முடித்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்ட தயாரிப்பாளர் சங்கம், நவ.1 முதல் தமிழ் சினிமாவின் அனைத்து விதமான படப்பிடிப்பு சம்பந்தப்பட்ட வேலைகளையும் நிறுத்திவைக்கவும் தீர்மானித்துள்ளது.
மக்களவையில் நடைபெறும் பட்ஜெட் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசி வருகிறார். அப்போது, அவர் அம்பானி, அதானி என்று குறிப்பிட்டபோது சபாநாயகர் இடைமறித்து பெயர்களை குறிப்பிட வேண்டாம் என்றார். உடனே, A1 (Accused 1), A2 என்று குறிப்பிட்டு பேசினார் ராகுல். இதற்கு பாஜக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டதால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.
சந்தைகளில் விற்கப்படும் காலணிகளுக்கு புதிய தர நிர்ணய வழிகாட்டுதல்களை BIS வெளியிட்டுள்ளது. அதன்படி, IS 6721 & IS 10702 வழிகாட்டுதல்கள் வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதால் அதன் விலையும் உயரவுள்ளது. BISஇன் இந்த தர வழிகாட்டிகளை கடைபிடிக்க காலணி தயாரிப்பு நிறுவனங்களுக்கு அதிக செலவு ஏற்படும் என்பதால் விலை உயரவுள்ளது. ₹50 கோடிக்கு கீழ் வருவாய் ஈட்டும் நிறுவனங்களுக்கு இந்த விதி பொருந்தாது
பாஜக ஆட்சியில் இந்தியா முழுவதும் வரி தீவிரவாதம் நடைபெறுவதாக ராகுல் குற்றஞ்சாட்டியுள்ளார். மக்களவையில் ராகுல் பேசிய அவர், சிறு, குறு தொழில் செய்வோருக்கு நள்ளிரவில் ஜிஎஸ்டி, ED அலுவலகத்தில் இருந்து ஃபோன் வருவதாக குற்றம் சாட்டினார். 20 ஆண்டுகளில் இல்லாத வகையில் விவசாயம் மற்றும் கல்விக்கு நிதி ஒதுக்கப்படவில்லை என்று விமர்சித்த அவர், கடந்த 10 ஆண்டில் 70 முறை வினாத்தாள் கசிந்துள்ளதாகவும் சாடியுள்ளார்.
பட்ஜெட்டுக்கு பிறகு, ரியல் எஸ்டேட் சார்ந்த நிறுவனங்களின் சந்தை மதிப்பு ₹6,480 கோடி வீழ்ச்சி அடைந்துள்ளது. வீடு உள்ளிட்ட ரியல் எஸ்டேட் சார்ந்த சொத்துகளுக்கான இண்டெக்ஸேஷன் முறை நீக்கப்படுவதாக, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் லாபம் குறையும் என்பதால், சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இண்டெக்ஸேஷன் முறையில் ரியல் எஸ்டேட் சொத்துகளை விற்கும்போது லாபத்தில் பணவீக்கம் நீக்கப்படும்.
நடிகர் தனுஷ் புதிய படங்களில் கமிட்டாவதற்கு தயாரிப்பாளர் சங்கம் செக் வைத்துள்ளது. தனுஷ் பல தயாரிப்பாளர்களிடம் அட்வான்ஸ் பெற்றுக்கொண்டு படங்களை முடித்துக்கொடுக்காமல், மேலும் புதிய தயாரிப்பாளர்களை அணுகுவதாக, சென்னையில் இன்று நடந்த தயாரிப்பாளர் சங்கக்கூட்டத்தில்
குற்றஞ்சாட்டப்பட்டது. எனவே, புதிய தயாரிப்பாளர்கள் தனுஷை சந்திக்கும் முன், தயாரிப்பாளர் சங்கத்தை அணுகவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 20 பேரின் சொத்துகளை பறிமுதல் செய்ய போலீசார் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த கொலை வழக்கில் 21 பேர் இதுவரை கைதான நிலையில், திருவேங்கடம் என்பவர் என்கவுண்டரில் சுட்டு கொல்லப்பட்டார். கைது செய்யப்பட்ட அனைவரையும் காவலில் எடுத்து விசாரிக்கும் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், முதல்கட்டமாக சொத்துக்கள் முடக்கப்படும் என தெரிகிறது.
வேலைவாய்ப்பை ஏற்படுத்துவதாக கூறி இந்தியாவில் உள்ள இளைஞர்களின் முதுகில் பாஜக அரசு குத்திவிட்டதாக ராகுல் விமர்சித்துள்ளார். மக்களவையில் பேசிய அவர், கொரோனா போது டார்ச் அடிப்பதும், விளக்கேற்றுவதும் தான் மோடி இளைஞர்களுக்கு வழங்கிய வேலையா? எனக் கேள்வி எழுப்பினார். மோடியின் சக்கர வியூகத்தை காங்கிரஸ் கட்சி முறியடிக்கும் என்ற அவர், பாஜகவை மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என்றார்.
Sorry, no posts matched your criteria.