India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நடிகர் தனுஷின் 50ஆவது படமான ‘ராயன்’ வருகிற 23ஆம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் தமிழ், தெலுங்கு உள்பட 5 மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தனுஷ் இயக்கி நடித்த இத்திரைப்படம் கடந்த மாதம் 26ஆம் தேதி வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. 4 சகோதரர்களின் வாழ்க்கையில் நடப்பதை மையமாகக் கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது. இப்படம் திரையரங்குகளில் ₹150 கோடி வசூலித்ததாகக் கூறப்படுகிறது.
2022ஆம் ஆண்டுக்கான சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது A.R. ரஹ்மானுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் 1 படத்திற்கு இசையமைத்ததற்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இது அவர் பெறவுள்ள 7ஆவது தேசிய விருது ஆகும். இதற்கு முன்பு அவர், ரோஜா, மின்சார கனவு, லகான், கன்னத்தில் முத்தமிட்டால், காற்று வெளியிடை, மாம் ஆகிய படங்களுக்காக விருது பெற்றுள்ளார்.
திருச்சிற்றம்பலம் திரைப்படத்துக்காக நித்யா மேனனுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், இப்படத்தில் இடம்பெற்ற மேகம் கருக்காதா பாடலுக்காக சிறந்த நடனத்திற்கான தேசிய விருது ஜானி, சதீஷூக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கே.ஜி.எஃப் படத்திற்காக சிறந்த சண்டை பயிற்சியாளர் தேசிய விருது அன்பறிவ்-க்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மணிரத்னத்தின் “பொன்னியின் செல்வன் -1” படத்துக்கு சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது PS-1 படத்தில் பணியாற்றிய ஏ.ஆர்.ரஹ்மானுக்கும், சிறந்த ஒலி வடிவமைப்புக்கான விருது ஆனந்த் கிருஷ்ணமூர்த்திக்கும், சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருது ரவி வர்மனுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய செயல் தலைவராக ஸ்மிருதி இரானியையும், தமிழக செயல் தலைவராக குஷ்புவையும் நியமிப்பது குறித்து பாஜக தலைமை திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கட்சியில் முக்கிய பதவி தர வேண்டும் என சில மாதங்களாக மேலிடத்தை வலியுறுத்திய குஷ்பு , அதற்காக தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததாகக் கூறப்பட்டது. இந்நிலையில், அவர் தமிழக செயல் தலைவராக நியமிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
இயற்கை மூலிகை அதிமதுரம் குறித்து சித்த மருத்துவம் கூறுவதைக் காணலாம். அதிமதுரம், தலைவலி, நெஞ்சு சளியை கட்டுப்படுத்தும். இதில் மஞ்சள் காமாலையை தடுக்கும் மருத்துவ குணம் உள்ளது. தினமும் காலை, மாலை அதிமதுரத்தை பொடியாக்கி நீரில் கலந்து குடித்தால், மஞ்சள் காமாலை எட்டி பார்க்காது என சித்த மருத்துவம் கூறுகிறது. இந்த தகவல் உங்களுக்கு பயனுடையதாக இருந்திருக்கும். இதை உங்கள் நண்பர்களுக்கும் பகிரலாமே.
இன்று நீலகிரி, கோவை, திண்டுக்கல் மாவட்டங்களிலும், நாளை தென்காசி, குமரி, நெல்லை மாவட்டங்களிலும் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. குமரி, நெல்லை, தென்காசி, தேனி, திருப்பூர், நாமக்கல், ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களில் இன்றும், தூத்துக்குடி , விருதுநகர், மதுரை, கோவை, நீலகிரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் நாளையும் கனமழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சித்த எதிர்க்கட்சிகளில் திமுகவும் ஒன்று. அதேபோல், திமுக தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலினும் மோடி அரசையும், அதன் கொள்கைகளையும் எதிர்ப்பவர் ஆவார். பதிலுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்ட பாஜக மேலிடத் தலைவர்கள், அண்ணாமலை உள்ளிட்ட தமிழக பாஜகவினர் திமுக அரசு மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்ததால், தேசிய அளவில் 2 கட்சிகளும் எதிரும் புதிருமாக பார்க்கப்பட்டன.
சுதந்திர தினத்தையொட்டி ஆளுநரின் விருந்தில் ஸ்டாலின் கலந்து கொண்டார். திமுக அமைச்சர் எ.வ. வேலுவுடன் அண்ணாமலை நீண்ட நேரம் பேசினார். இந்நிலையில், அத்திக்கடவு-அவிநாசி திட்டத்துக்காக அறிவித்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அண்ணாமலை அறிவித்துள்ளார். இதை வைத்து பார்க்கும்போது திமுக-பாஜக சமரசமாகி விட்டனவா? என அரசியல் ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர். இதுகுறித்த உங்கள் கருத்தை கீழே பதிவிடுங்கள்.
மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக, மாநிலம் முழுவதும் சிறப்பு முகாம் நடத்தப்படவுள்ளதாக சமூக வலைதளங்களில் செய்தி வெளியானது. இந்த தகவலை அதிகாரப்பூர்வமாக மறுத்துள்ள தமிழ்நாடு அரசு, மகளிர் உரிமை தொடர்பாக சிறப்பு முகாம் நடைபெறவில்லை என விளக்கமளித்துள்ளது. மேலும், வாட்ஸ்ஆப் உள்ளிட்டவற்றில் வெளியாகும் இதுபோன்ற போலியான செய்திகளை மக்கள் நம்ப வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
Sorry, no posts matched your criteria.