India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இனி குறிப்பிட்ட தனியார் மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கு தடுப்பூசி இலவசம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசிகள் கூடுதல் விலையில் செலுத்துவதாக புகார் எழுந்தது. இதைத் தடுக்கும் வகையில், தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்படும் என்றும், பிறந்த குழந்தை முதல் 18 வயது வரை 16 தவணைகளாக தடுப்பூசி செலுத்தப்படும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.
பாரிஸ் ஒலிம்பிக்ஸ் கோலாகலத்தில் ஒட்டுமொத்த விளையாட்டு உலகும் திருவிழா கோலம் பூண்டுள்ளது. சர்வதேச வீரர்கள் மகிழ்ச்சியில் திளைத்துவரும் இந்நேரத்தில், பாலஸ்தீனத்தின் முதல் ஒலிம்பிக்ஸ் பங்கேற்பாளரும், தடகள வீரருமான அபு மராஹீல் வதைவலி மிகுந்த மரணத்தை எய்தியுள்ளார். சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்பட்ட அவர் நுசிராத் முகாமில் இருந்து மேல் சிகிச்சைக்காக ரஃபா எல்லையைத் கடக்க முயன்றபோது உயிரிழந்துள்ளார்.
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் மீது, ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. சிபிஐ வழக்கிலும் ஜாமின் கோரும் அவரது மனு, டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரும் நிலையில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை வழக்கில் ஜாமின் கிடைத்தாலும், சிபிஐ வழக்கில் இதுவரை கிடைக்காததால், கெஜ்ரிவால் சிறையிலுள்ளார்.
காஞ்சிபுரம் மேயருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்துள்ளதாக ஆணையர் செந்தில் முருகன் தெரிவித்துள்ளார். கோரம் (போதுமான உறுப்பினர்கள்) இல்லாததால் தீர்மானம் இயற்கையாகவே தோல்வி அடைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார். திமுக கவுன்சிலர்கள் 22 பேர் மேயர் மகாலட்சுமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருந்த நிலையில், வாக்கெடுப்புக்கு முதல்நாள் அவர்கள் மகாபலிபுரத்திற்கு சுற்றுலாவுக்கு சென்றனர்.
கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணமில்லை என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். உள்ளூர் வாகனங்களுக்கு 50% கட்டணம் வசூலிப்பதை எதிர்த்து, திருமங்கலம் சுற்று வட்டாரத்தில் நாளை கடையடைப்பு அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்றைய முத்தரப்பு பேச்சுவார்த்தையில், உள்ளூர்காரர்கள் ஆதார் அட்டையை காட்டி கட்டணமின்றி பயணிக்கலாம் என முடிவு எடுக்கப்பட்டதால், போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டி ஆண்கள் இரட்டையர் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் – சிராஜ் ஷெட்டி இணை காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. இன்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய ஆட்டத்தில், எதிரணி வீரர்கள் காயம் காரணமாக வெளியேறிய நிலையில், இவர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். நாளை காலிறுதிப் போட்டி நடைபெற உள்ள நிலையில், இருவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
பிஹாரில் கல்வி, வேலைவாய்ப்பில் 65% இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்கு பாட்னா உயர்நீதிமன்றம் விதித்த தடையை நீக்க, உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. இது, ஆளும் நிதிஷ்குமார் அரசுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. மாநிலம் முழுவதும் நடத்தப்பட்ட சாதி வாரி கணக்கெடுப்பின் அடிப்படையில், SC,ST,OBC பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை 50% லிருந்து 65% ஆக உயர்த்தி, பிஹார் அரசு கடந்த நவம்பரில் சட்டம் கொண்டு வந்தது.
போக்குவரத்துத்துறையில் ஒப்பந்தப் பணியில் ஓட்டுநர், நடத்துநர் இடைக்கால நிவாரணமாகவே பணியமர்த்தப்படுவதாக அமைச்சர் சிவசங்கர் விளக்கமளித்துள்ளார். மே மாதம் ஏராளமானோர் ஓய்வு பெற்றதால், தற்காலிக நடவடிக்கையாக ஒப்பந்த முறையில் ஆட்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், நிரந்தரப் பணியாளர்கள் தேர்வானதும், ஒப்பந்தப் பணியாளர்கள் பணியில் இருந்து விலகி விடுவார்கள் எனவும் தெளிவுபடுத்தியுள்ளார்.
பாரிஸ் ஒலிம்பிக்ஸின் தனிநபர் பிரிவின் குரூப் சுற்றில் இந்திய பேட்மிண்டன் வீரர் லக்க்ஷயா சென் பெற்ற வெற்றியை நீக்குவதாக BWF அறிவித்துள்ளது. அந்த சுற்றில் அவருடன் மோதிய கார்டனுக்கு இடது முழங்கை பகுதியில் காயம் ஏற்பட்டது.இதையடுத்து, அவர் ஒலிம்பிக்ஸில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.இதன் காரணமாக ‘குரூப் L’இல் கார்டன் சம்பந்தப்பட்ட அனைத்து போட்டிகளின் முடிவுகளும் தற்போது நீக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
செல்போனை 5 நிமிடங்கள் ஆஃப் செய்து வைப்பதன் மூலம் கார்பன் பயன்பாட்டை குறைக்க முடியும் என்று கோவையில் நடந்த சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பாஜக எம்.எல்.ஏ வானதி தெரிவித்துள்ளார். எனவே, ஒவ்வொருவரும் செல்போனை 5 நிமிடம் ஆஃப் செய்யுங்கள் என கேட்டுக்கொண்ட அவர், பிரதமர் மோடி சுற்றுச்சூழல் மீது மிகுந்த அக்கறை கொண்டவர் என்றும் புகழாரம் சூட்டினார்.
Sorry, no posts matched your criteria.