news

News July 29, 2024

இன்றைய தலைப்புச் செய்திகள்

image

➤ஆக்கிரமிக்கப்பட்டிருந்த ₹5,557 கோடி மதிப்பிலான கோயில் நிலங்கள் மீட்கப்பட்டதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ➤ஜம்மு பிராந்தியத்தில் தீவிரவாத தாக்குதல்கள் அதிகரிப்பதன் எதிரொலியாக அங்கு கூடுதலாக 2000 ராணுவ வீரர்களை நிலை நிறுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. ➤பாரிஸ் ஒலிம்பிக்ஸில் மகளிர் துப்பாக்கிச் சுடுதல் 10மீ ஏர்பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.

News July 29, 2024

வீராங்கனையை போனில் வாழ்த்திய பிரதமர்

image

ஒலிம்பிக்கில் துப்பாக்கிச் சுடுதலில் வெண்கலப் பதக்கம் வென்ற மனு பாக்கரிடம் போனில் பேசிய பிரதமர் மோடி, இந்தியாவை பெருமையடையச் செய்துள்ளதாக வாழ்த்தியுள்ளார். துப்பாக்கிச் சுடுதலில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனையாக திகழ்வதாகவும், இந்த பதக்கம் அடுத்தடுத்த போட்டிகளுக்கு உத்வேகமாக அமையும் எனவும் அவர் பாராட்டியுள்ளார். மேலும், வீரர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்து தருவதாக உறுதியளித்துள்ளார்.

News July 28, 2024

இலங்கையை வீழ்த்தியது இந்தியா

image

இலங்கைக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த SL, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்தது. இந்திய அணி பேட்டிங்கின் போது மழை குறுக்கிட்டதால், 7.3 ஓவர்களுக்குள் 72 ரன்களை எடுக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 6.3 ஓவர்களிலேயே 3 விக்கெட் இழப்பிற்கு 81 ரன்களை எடுத்து இந்திய அணி வெற்றி பெற்றது.

News July 28, 2024

‘கூலி’ பட வாய்ப்பை நிராகரித்த நாகர்ஜூனா?

image

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘கூலி’. இப்படத்தில் சத்யராஜ், ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடிப்பது உறுதியாகியுள்ளது. ரஜினியின் மகளாக ஸ்ருதிஹாசனும், நண்பராக சத்யராஜும் நடிப்பதாக கூறப்படுகிறது. ஆனால், நாகர்ஜுனாவை வில்லனாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்த நிலையில், அவர் ஒப்புக்கொள்ளவில்லை எனத் தெரிகிறது. இதனால், வேறொரு தெலுங்கு நடிகரை படக்குழு அணுகி வருகிறதாம்.

News July 28, 2024

12 ராசிகளுக்கான பலன்கள் (29.07.2024)

image

*மேஷம் – பாராட்டு பெறுவீர்
*ரிஷபம் – நன்மை தேடி வரும்
*மிதுனம் – அமைதியாக இருந்து சாதிப்பீர்
*கடகம் – வீண் செலவுகளை தவிர்க்கவும்
*சிம்மம் – அச்சம் தவிர்க்கும் நாள்
*கன்னி – கவலை கொள்ள வேண்டாம்
*துலாம் – வரவு அதிகரிக்கும்
*விருச்சிகம் – தாமதம் ஏற்படும்
*தனுசு – ஜெயம் உண்டாகும்
*மகரம் – ஆதரவு கிடைக்கும் *கும்பம் – வெற்றி தேடி வரும் *மீனம் – ஆக்கப்பூர்வமான நாள்

News July 28, 2024

IND Vs SL போட்டி 8 ஓவர்களாக குறைப்பு

image

இந்தியா-இலங்கை இடையிலான 2ஆவது T20 போட்டி, 8 ஓவர்களாக குறைக்கப்பட்டுள்ளது. பல்லேகலேவில் உள்ள மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில், முதலில் பேட்டிங் செய்த SL, 161/9 ரன்கள் எடுத்தது. பிறகு இந்திய அணி பேட்டிங் செய்ய களமிறங்கியபோது மழை குறுக்கிட்டது. இதனால், 8 ஓவர்களில் IND அணிக்கு 78 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சற்று நேரத்தில் போட்டி தொடங்க உள்ளது. தொடரைக் கைப்பற்றுமா இந்திய அணி?

News July 28, 2024

தங்கம் விலை சவரன் ₹60,000 போகும்?

image

இந்தியாவில் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், பட்ஜெட்டில் சுங்க வரி குறைக்கப்பட்ட பிறகு விலை குறைந்து வருகிறது. இந்நிலையில், தங்கத்தின் விலை சரிவது தற்காலிகமானது என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, இந்த ஆண்டு இறுதிக்குள் சவரன் ₹60,000 எட்டும் எனவும், அடுத்த 5 ஆண்டுகளில் தங்கத்தின் விலை இரட்டிப்பாகும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

News July 28, 2024

உலகின் மிக நீண்ட நெடுஞ்சாலை

image

உலகிலேயே மிக நீண்ட நெடுஞ்சாலை ஆஸ்திரேலியாவில் அமைந்துள்ளது. கடற்கரை நகரங்கள் அனைத்தையும் இணைக்கும் இந்த நெடுஞ்சாலை, 14,500 கி.மீட்டருக்கு நீள்கிறது. ஆஸ்திரேலியாவின் மத்தியப் பகுதிகள் பெரும்பாலும் பாலைவங்களாக இருப்பதால் இடையில் ஊடுருவிச் செல்லக்கூடிய சாலைகள் ஏதும் அங்கில்லை. ஆகையால் ஆஸ்திரேலிய மக்கள் அனைவரும் இந்த நெடுஞ்சாலையை பயன்படுத்தியே மற்ற நகரங்களுக்கு செல்கின்றனர்.

News July 28, 2024

பொறியியல் பொதுப்பிரிவு கலந்தாய்வு நாளை தொடக்கம்

image

தமிழகம் முழுவதும் நாளை 2ஆம் கட்ட பொறியியல் கலந்தாய்வு நடைபெற உள்ளது. முதல்கட்டமாக சிறப்பு இட ஒதுக்கீட்டு பிரிவு உள்ளிட்ட மாணவர்களுக்கு கலந்தாய்வு நடந்ததைத் தொடர்ந்து நாளை காலை 11 மணி முதல் செப்டம்பர் 3 வரை , பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் ஆன்லைன் மூலம் நடைபெறும் இந்தக் கலந்தாய்வு குறித்த விவரங்களை https://www.tneaonline.org/ என்ற இணையதளம் மூலம் அறியலாம்.

News July 28, 2024

பாரிஸ் ஒலிம்பிக்ஸ்: முதல் சுற்றில் பிரனாய் வெற்றி

image

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவைச் சேர்ந்த 117 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்திய வீரர் பிரனாய், ஜெர்மனியின் பேபியன் ரோத் உடன் மோதினார். அதில், பிரனாய் 21-18, 21-12 என்ற நேர் செட் கணக்கில் அபார வெற்றி பெற்றுள்ளார். புதன்கிழமை நடைபெறும் போட்டியில் வியட்நாம் வீரருடன் பிரனாய் மோதுகிறார்.

error: Content is protected !!