India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
2024 TNPL தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும், நெல்லை ராயல் கிங்ஸ் அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 136 ரன்களை எடுத்தது. அடுத்து களமிறங்கிய நெல்லை அணி 17.5 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 138 ரன்களை எடுத்து, 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக அருண் கார்த்திக் 45 ரன்களை எடுத்தார்.
‘மகாராஜா’ படத்தின் ஹிந்தி உரிமையை நடிகர் அமீர் கான் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரே நடிக்க போகிறாரா அல்லது தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்திற்காக வாங்கியுள்ளாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. கடந்த ஜூன் 14ல் வெளியான இப்படத்தில் தந்தை – மகள் பாசம், சிறுமிக்கு எதிரான பாலியல் குற்றம், கிளைமேக்ஸ் ட்விஸ்ட் என விறுவிறுப்பாக கதை நகர்ந்ததால் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
▶குறள் பால்: அறத்துப்பால் ▶இயல்: பாயிரவியல் ▶அதிகாரம்: கடவுள் வாழ்த்து ▶குறள் எண்: 6 ▶குறள்: பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார். ▶பொருள்: மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்பொறிகளையும் கட்டுப்படுத்திய தூயவனின் உண்மையான ஒழுக்கமுடைய நெறியைப் பின்பற்றி நிற்பவர்களின் புகழ்வாழ்வு நிலையானதாக அமையும்.
மணிப்பூரில் நடக்கும் வன்முறை போல், மகாராஷ்டிராவில் நடக்க இருந்ததாக NCP-SP தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார். அண்டை மாநிலங்களில் கூட கலவரங்கள் நடந்து வருவதாகவும், ஆனால் மகாராஷ்டிராவின் தலைவர்கள் சமூக நல்லிணக்கத்தை உயர்த்தி பிடித்ததால் அது தடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், பல தலைமுறைகளாக ஒன்றாக வாழ்ந்த மணிப்பூர் மக்கள், இன்று ஒருவருக்கொருவர் பேசக்கூட தயாராக இல்லை என தெரிவித்துள்ளார்.
பாரிஸ் ஒலிம்பிக்கில் மகளிர் துப்பாக்கி சுடுதலில் வெண்கல பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை மனு பாக்கர், இந்த வெற்றியை நாட்டிற்கு சமர்ப்பிப்பதாக தெரிவித்தார். பிரதமருடன் தொலைபேசியில் பேசிய அவர், டோக்யோ ஒலிம்பிக்கில் வெல்ல முடியாமல் போனது நீண்ட நாள் துயரமாக இருந்ததாகவும், தற்போது கனவு நனவாகிவிட்டதாகவும் கூறினார். மேலும், தன்னை ஆதரித்து அனைவரின் கனவும் நிறைவேறி விட்டதாக தெரிவித்தார்.
டெல்லியில் IAS பயிற்சி மையத்தில் சூழ்ந்த வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த மாணவர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது. உ.பியைச் சேர்ந்த ஸ்ரேயா யாதவ் (25), தெலங்கானாவின் தான்யா சோனி (25), கேரளாவின் நவீன் டால்வின் (28) ஆகியோர் உயிரிழந்துள்ளனர். ஸ்ரேயா கடந்த ஏப்ரல் மாதமும், தான்யா ஒன்றரை மாதங்களுக்கு முன்பும் பயிற்சி மையத்தில் இணைந்துள்ளனர். நவீன் 8 மாதங்களாக டெல்லியில் வசித்து வருவதாக கூறப்படுகிறது.
டெல்லியில் பழைய ராஜிந்தர் நகர் பகுதியில் இயங்கி வந்த 13 ஐஏஎஸ் பயிற்சி மையங்களுக்கு நகராட்சி நிர்வாகம் சீல் வைத்துள்ளது. நேற்று முன் தினம் பெய்த மழையில் கட்டுமானத்தின் அடித்தளத்தில் சூழ்ந்த வெள்ளத்தில் சிக்கி 3 மாணவர்கள் பலியான நிலையில், கட்டுமான விதிகளை மீறியதாக சீல் வைக்கப்பட்டுள்ளது. தேவைப்படும் பட்சத்தில் டெல்லி முழுவதும் சோதனை நடத்தப்படும் என டெல்லி மேயர் தெரிவித்துள்ளார்.
இன்று (ஜூலை 29) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். பிறந்தநாள் கொண்டாடுபவர்களின் தெளிவான புகைப்படங்களை அனுப்பி, உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்.

Sorry, no posts matched your criteria.