news

News July 28, 2024

உலகின் மிக நீண்ட நெடுஞ்சாலை

image

உலகிலேயே மிக நீண்ட நெடுஞ்சாலை ஆஸ்திரேலியாவில் அமைந்துள்ளது. கடற்கரை நகரங்கள் அனைத்தையும் இணைக்கும் இந்த நெடுஞ்சாலை, 14,500 கி.மீட்டருக்கு நீள்கிறது. ஆஸ்திரேலியாவின் மத்தியப் பகுதிகள் பெரும்பாலும் பாலைவங்களாக இருப்பதால் இடையில் ஊடுருவிச் செல்லக்கூடிய சாலைகள் ஏதும் அங்கில்லை. ஆகையால் ஆஸ்திரேலிய மக்கள் அனைவரும் இந்த நெடுஞ்சாலையை பயன்படுத்தியே மற்ற நகரங்களுக்கு செல்கின்றனர்.

News July 28, 2024

பொறியியல் பொதுப்பிரிவு கலந்தாய்வு நாளை தொடக்கம்

image

தமிழகம் முழுவதும் நாளை 2ஆம் கட்ட பொறியியல் கலந்தாய்வு நடைபெற உள்ளது. முதல்கட்டமாக சிறப்பு இட ஒதுக்கீட்டு பிரிவு உள்ளிட்ட மாணவர்களுக்கு கலந்தாய்வு நடந்ததைத் தொடர்ந்து நாளை காலை 11 மணி முதல் செப்டம்பர் 3 வரை , பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் ஆன்லைன் மூலம் நடைபெறும் இந்தக் கலந்தாய்வு குறித்த விவரங்களை https://www.tneaonline.org/ என்ற இணையதளம் மூலம் அறியலாம்.

News July 28, 2024

பாரிஸ் ஒலிம்பிக்ஸ்: முதல் சுற்றில் பிரனாய் வெற்றி

image

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவைச் சேர்ந்த 117 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்திய வீரர் பிரனாய், ஜெர்மனியின் பேபியன் ரோத் உடன் மோதினார். அதில், பிரனாய் 21-18, 21-12 என்ற நேர் செட் கணக்கில் அபார வெற்றி பெற்றுள்ளார். புதன்கிழமை நடைபெறும் போட்டியில் வியட்நாம் வீரருடன் பிரனாய் மோதுகிறார்.

News July 28, 2024

இந்தியா-இலங்கை ஆட்டம் கனமழையால் பாதிப்பு

image

இந்தியா-இலங்கை இடையிலான 2ஆவது T20 போட்டி கனமழை காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. பல்லேகலே மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த SL, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்தது. 162 ரன்கள் இலக்குடன், ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் களமிறங்கினர். அப்போது மழை குறுக்கிட்டதால் போட்டி தடைபட்டது. IND அணி தற்போதுவரை 3 பந்துகளில் 6 ரன்களை எடுத்துள்ளது.

News July 28, 2024

வீட்டுக்கடனை எளிதாக முடிப்பது எப்படி?

image

சில வழிமுறைகளை பின்பற்றி, வீட்டுக்கடனை எளிதாக அடைக்கலாம் என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். *ஒவ்வொரு ஆண்டும் தவணைத் தொகையை 10% அதிகரித்து கட்டலாம். உதாரணமாக, 8.5% வட்டியில் ₹50 லட்ச கடனுக்கான மொத்த தவணை காலம் 25 ஆண்டுகளாக இருக்கும் போது, ஆண்டுதோறும் 10% தவணையை அதிகரித்தால், 10 ஆண்டுகளிலேயே கடனை முடிக்க முடியும். *ஆண்டுக்கு ஒரு தவணையை அதிகமாக கட்டினால், 19 ஆண்டுகளில் கடனை முடித்து விடலாம்.

News July 28, 2024

அல்லல்கள் அகற்றும் ஆடிக்கிருத்திகை

image

ஓர் ஆண்டில் 12 கிருத்திகை தினங்கள் இருந்தாலும், தை கிருத்திகை, திருக்கார்த்திகை மற்றும் ஆடிக்கிருத்திகை சிறப்பு வாய்ந்தவை. குறிப்பாக, ஆடிக்கிருத்திகையில் ஆறுமுகனை வழிபட்டால் வாழ்வில் அல்லல்கள் அகலும் என்பது ஆன்மிகவாதிகளின் நம்பிக்கையாக உள்ளது. ஆடிக்கிருத்திகை நாளில் மல்லிகை, தாமரை, சிவப்பு நிற மலர்கள் கொண்டு முருகனுக்கு அர்ச்சனை செய்யலாம். அவல் பாயசம் செய்து நிவேதனம் செய்வது சிறப்பு நலன் தரும்.

News July 28, 2024

நாளை முதல் விலையில்லா சீருடை விநியோகம்

image

தமிழகம் முழுவதும் 1-8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, நாளை முதல் விலையில்லா சீருடை வழங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், 2024-25 கல்வியாண்டில் மாணவர்களுக்கு அளவெடுத்து தைக்கப்பட்ட சீருடைகளை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள், சமூக நலத்துறை பணியாளர்களுடன் இணைந்து வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News July 28, 2024

இந்திய அணிக்கு 162 ரன்கள் இலக்கு

image

இலங்கைக்கு எதிரான 2ஆவது T20 போட்டியில், இந்திய அணிக்கு 162 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டாஸ் வென்ற IND அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ததால் SL அணி பேட்டிங் செய்தது. அதிகபட்சமாக, குசல் பெரேரா 53, நிஷங்கா 32 ரன்கள் எடுத்தனர். இந்திய அணி தரப்பில், ரவி பிஸ்னோய் 3, அர்ஷ்தீப் சிங், அக்‌ஷர் படேல், ஹர்திக் பாண்டியா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். சற்று நேரத்தில் இந்திய அணி விளையாட உள்ளது.

News July 28, 2024

கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய உத்தரவு

image

போலி பேராசிரியர்களை நியமித்த மோசடி வழக்கில் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார். அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளில் போலி பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டதாக எழுந்த புகார் தொடர்பாக அண்ணா பல்கலை. துணை வேந்தர் வேல்ராஜ் ஆளுநரிடம் அறிக்கை தாக்கல் செய்தார். அந்த அறிக்கையின்படி தவறு செய்த கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்க ஆளுநர் உத்தரவிட்டார்.

News July 28, 2024

தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் நாளை போராட்டம் அறிவிப்பு

image

கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் ஜூலை 31 வரை சென்னை டிபிஐ வளாகத்தை முற்றுகையிட்டு போராட உள்ளதாக, தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு அறிவித்துள்ளது. பதவி உயர்வை பறிக்கும் அரசாணை 243 ரத்து, காலிப் பணியிடங்களை நிரப்புதல் போன்றவற்றை வலியுறுத்தி போராடுவதாக அந்தக் குழு அறிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் நாளை தொடக்கப் பள்ளிகள் செயல்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

error: Content is protected !!