India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகம் முழுவதும் 1-8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, நாளை முதல் விலையில்லா சீருடை வழங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், 2024-25 கல்வியாண்டில் மாணவர்களுக்கு அளவெடுத்து தைக்கப்பட்ட சீருடைகளை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள், சமூக நலத்துறை பணியாளர்களுடன் இணைந்து வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கைக்கு எதிரான 2ஆவது T20 போட்டியில், இந்திய அணிக்கு 162 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டாஸ் வென்ற IND அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ததால் SL அணி பேட்டிங் செய்தது. அதிகபட்சமாக, குசல் பெரேரா 53, நிஷங்கா 32 ரன்கள் எடுத்தனர். இந்திய அணி தரப்பில், ரவி பிஸ்னோய் 3, அர்ஷ்தீப் சிங், அக்ஷர் படேல், ஹர்திக் பாண்டியா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். சற்று நேரத்தில் இந்திய அணி விளையாட உள்ளது.
போலி பேராசிரியர்களை நியமித்த மோசடி வழக்கில் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார். அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளில் போலி பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டதாக எழுந்த புகார் தொடர்பாக அண்ணா பல்கலை. துணை வேந்தர் வேல்ராஜ் ஆளுநரிடம் அறிக்கை தாக்கல் செய்தார். அந்த அறிக்கையின்படி தவறு செய்த கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்க ஆளுநர் உத்தரவிட்டார்.
கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் ஜூலை 31 வரை சென்னை டிபிஐ வளாகத்தை முற்றுகையிட்டு போராட உள்ளதாக, தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு அறிவித்துள்ளது. பதவி உயர்வை பறிக்கும் அரசாணை 243 ரத்து, காலிப் பணியிடங்களை நிரப்புதல் போன்றவற்றை வலியுறுத்தி போராடுவதாக அந்தக் குழு அறிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் நாளை தொடக்கப் பள்ளிகள் செயல்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
நாமக்கல்லில் கோழி முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 10 காசுகள் குறைந்துள்ளது. நேற்று ₹4.60க்கு விற்கப்பட்ட ஒரு முட்டை, இன்று ₹4.50ஆக விற்பனையாகிறது. சென்னை சில்லரை சந்தையில் முட்டை விலை சுமார் ₹5.50க்கு விற்கப்படுகிறது. நுகர்வை விட உற்பத்தி அதிகரித்திருப்பதால் முட்டை விலை குறைக்கப்பட்டிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இது மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
PM கிஷான் திட்டத்தில், விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ₹6000 வழங்கப்படுகிறது. 3 தவணைகளாக வழங்கப்படும் இந்த நிதியுதவியை பெற, e-KYC பதிவு செய்ய வேண்டும். இதற்கான அவகாசம் ஜூலை 31 உடன் முடியவுள்ள நிலையில், விவசாயிகள் தங்களது விவரங்களை உடனே பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதுவரை 17 தவணைகள் பணம் வழங்கப்பட்டுள்ள நிலையில், e-KYC பதிவு செய்யாதவர்களுக்கு 18ஆவது தவணை பணம் கிடைக்காது எனக் கூறப்பட்டுள்ளது.
ஜார்கண்டின் ராஞ்சியில் உள்ள பகவான் பிர்சா உயிரியல் பூங்காவில் நீர் யானை தாக்கியதில், அதன் பராமரிப்பாளர் உயிரிழந்தார். சமீபத்தில் குட்டியை ஈன்ற நீர் யானை, அதன் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள முயன்றவரை பலமாக தாக்கியது. இதனால் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது குடும்பத்திற்கு நிவாரணம் கிடைக்க பூங்கா நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
புனேவில் 19 வயது இளைஞரின் கழுத்தில் ஸ்கூட்டர் ஸ்டாண்ட் சிக்கிக் கொண்ட சம்பவம் காண்போரை அதிர வைத்துள்ளது. அவர் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது பேருந்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக ஸ்கூட்டர் ஸ்டாண்ட் கீழ் தாடைக்கும் கழுத்துக்கும் இடையே எலும்பில் சிக்கியது. இதனை மருத்துவர்கள் 4 மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பின் அகற்றினர்.
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை இங்கிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. மே.இ.தீவுகள் அணி இரண்டு இன்னிங்ஸ்களில் முறையே 282 & 175 ரன்கள் குவித்தது. தனது முதல் இன்னிங்ஸில் 376 ரன்கள் குவித்த இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்ஸில் வெறும் 7.2 ஓவர்களில் 87 என்ற இலக்கை விக்கெட் இழப்பின்றி எட்டியது. கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 28 பந்துகளில் 57 ரன்கள் விளாசினார்.
இந்தியாவில் உள்ள டாப் 10 நிறுவனங்களில் 6 நிறுவனங்களின் சந்தை மதிப்பு கடந்த வாரம் ₹1,85,186.51 கோடி அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக LIC மதிப்பு ₹44,907.49 கோடி உயர்ந்து, ₹7,46,602.73 கோடியாக உள்ளது. இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் மதிப்பு ₹35,665.92 கோடி அதிகரித்து, ₹7,80,062.35 கோடியாக உள்ளது. பட்ஜெட் எதிரொலியாக தொடர் வீழ்ச்சியை சந்தித்த இந்திய பங்குச்சந்தை, வர்த்தக வார இறுதி நாள்களில் வளர்ச்சி கண்டது.
Sorry, no posts matched your criteria.