India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நடிகர் அசோக் செல்வன் படங்களின் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை என தயாரிப்பாளர் திருமலை குற்றஞ்சாட்டியுள்ளார். அவர்கள் கூட்டணியில் உருவாகியிருக்கும் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அதில் அசோக் செல்வன் கலந்து கொள்ளாத நிலையில் பேசிய தயாரிப்பாளர், அவர் ஃபோனை கூட எடுக்காமல் புறக்கணிப்பதாக வேதனை தெரிவித்தார்
இந்தியாவில் நெரிசலான நகரங்களில் ஒன்றாக இருப்பது பெங்களூரு. இதை உணர்த்தும் வகையிலான கூகுள் மேப் ஸ்கிரீன் ஷாட் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆயுஷ் சிங் என்பவர் தனது X பக்கத்தில், பிரிகேட் மெட்ரோபோலிஸ் முதல் கே.ஆர்.புரம் வரையிலான 6 கி.மீ தூரத்தை கார் மற்றும் நடந்து சென்றால் எவ்வளவு நேரமாகும் என்பதை ஒப்பிட்டுள்ளார். அதில் நடந்து சென்றால் முன் கூட்டியே சென்றுவிடலாம் என்பதை கூகுள் மேப் காட்டியுள்ளது.
பழக்குடியினர் நலத்துறையில் உள்ள 328 பள்ளிகளில், 438 ஆசிரியர்கள் பணியிடங்கள் பல ஆண்டுகளாக நிரந்தரமாக நிரப்பப்படவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. 300 பணியிடங்கள் தற்காலிக ஆசிரியர்கள் மூலம் பாடம் நடத்தப்பட்டு வருகிறது. பெரும்பாலான பள்ளிகளில் ஓராசிரியர்கள் மட்டும் பணிபுரியும் பள்ளிகளாக இருப்பதால், பழங்குடியின மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். கவனிக்குமா அரசு?
பாரிஸ் ஒலிம்பிக்ஸில் 3 தங்கம் மற்றும் 2 வெள்ளி பதக்கங்களை வென்று பதக்க பட்டியலில் ஆஸ்திரேலியா முதலிடத்தில் உள்ளது. 3 தங்கம் மற்றும் ஒரு வெண்கல பதக்கங்கள் வென்று சீனா 2ஆவது இடத்தையும், 2 தங்கம், 2 வெள்ளி மற்றும் ஒரு வெண்கலம் வென்று தென் கொரியா 3ஆவது இடத்தையும் பிடித்துள்ளன. இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஸ்வீடன், ஸ்பெயின், ஹங்கேரி ஆகிய நாடுகள் ஒரு வெண்கல பதக்கம் வென்று 17ஆவது இடத்தில் உள்ளன.
டெல்லியில் எல்லைச்சாமியாக இருந்து கலைஞர் தமிழ்நாட்டை காப்பாற்றிக் கொண்டிருக்கிறார் என திமுக எம்பி ஆ.ராசா கூறியுள்ளார். கலைஞர் எல்லைச்சாமியாக அங்கு இருக்கும் வரை தமிழனையும், தமிழ்நாட்டையும் யாரும் ஒன்னும் செய்ய முடியாது என்ற அவர், இந்தியாவின் அரசியலைமைப்பை 93 வயது வரை காப்பாற்றி மறைந்த கடவுளின் அவதாரமாக இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாரிஸ் ஒலிம்பிக் தொடக்க விழாவில் திருமண மோதிரத்தை தொலைத்து விட்டதாக, ஜியான்மார்கோ தம்பேரி வேதனை தெரிவித்துள்ளார். இத்தாலியைச் சேர்ந்த தடகள வீரரான இவர், டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றவர். பாரிஸ் தொடக்க விழா அணிவகுப்பில் தேசிய கொடியை ஏந்தி சென்ற அவர், கையில் இருந்த மோதிரத்தை ஆற்றில் தவற விட்டுள்ளார். இது குறித்து இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள அவர், தனது மனைவியிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
‘களவாணி’ படம் மூலம் தமிழ் திரைத்துறையில் அறிமுகமான ஓவியா, ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானார். குறிப்பாக, சமூக வலைதளங்களில் அவருக்காக ஆர்மியும் உருவாக்கப்பட்டது. இந்நிலையில், அவரது இன்ஸ்டா பதிவு இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளது. மது அருந்தும் புகைப்படத்தை பகிர்ந்து, குடிப்பழக்கம் உடல் நலத்திற்கு தீங்கானது என அவர் குறிப்பிட்டிருப்பது ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளாகியுள்ளது.
ஆசியக் கோப்பை மகளிர் T20 தொடரின் இறுதிப் போட்டியில், இலங்கை அணியிடம் இந்திய அணி தோல்வியடைந்தது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த IND, 165/6 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஸ்மிருதி மந்தனா 60 ரன்கள் எடுத்தார். 166 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய SL, 18.4 ஓவர்களில் இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம், முதல் முறையாக SL அணி, ஆசியக் கோப்பை மகளிர் T20 சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
சர்வதேச விமானங்களில் பயணிக்கும் போது, பயணிகளுக்கு 20 நிமிடங்கள் இலவச வைஃபை சேவை வழங்கப்படும் என விஸ்தாரா நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் மூலம் வானில் பறக்கும் போது இணைய சேவை வழங்கும் முதல் இந்திய விமான நிறுவனம் என்ற பெருமையை விஸ்தாரா பெற்றுள்ளது. மேலும், சேவைக்கு ஏற்றபடி 372.74+ஜிஎஸ்டி முதல் 2,707.04+ஜிஎஸ்டி வரை கட்டணம் செலுத்தி கூடுதல் வைஃபை வசதியை பெற முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரிஸ் ஒலிம்பிக்ஸில் 10 மீட்டர் ஏர் ரைபிள் ஆடவர் பிரிவின் இறுதிப் போட்டிக்கு இந்திய வீரர் அர்ஜூன் பபுதா முன்னேறினார். தகுதி சுற்றில் முதல் 8 இடங்களை பிடிக்கும் வீரர்கள் மட்டுமே இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியும். அதன்படி, பபுதா 630.1 புள்ளிகள் பெற்று 7ஆவது இடம் பிடித்தார். மற்றொரு இந்திய வீரரான சந்தீப் சிங் 12ஆவது இடம் பிடித்து வெளியேறினார். இறுதிச்சுற்று நாளை மதியம் 3.30க்கு நடைபெறுகிறது.
Sorry, no posts matched your criteria.