India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீர் இருப்பு 110 அடியை தாண்டிய நிலையில், முதல்வரின் அறிவுறுத்தலின்படி, அமைச்சர் கே.என்.நேரு அணையில் இருந்து நீரை திறந்து வைத்தார். இதனையடுத்து காவிரி ஆறு செல்லும் வழித்தடங்களுக்கு அருகில் சென்று, ஆபத்தான முறையில் புகைப்படம் எடுக்க கூடாது என பொதுமக்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது.
பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், டேபிள் டென்னிஸ் பிரிவின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை ஸ்ரீஜா அகுளா, ஸ்வீடன் வீராங்கனை கிறிஸ்டின் உடன் மோதினார். இதில், அகுளா 11-4, 11-9, 11-7,11-8 என்ற நேர் செட் கணக்கில் வென்று அடுத்தச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். ரவுண்ட் ஆஃப் 32 போட்டிக்கு தகுதி பெற அகுளா வெறும் 30 நிமிடங்களே எடுத்துக் கொண்டார்.
*பூரிக்கு மாவு பிசையும் போது, கால் தேக்கரண்டி ரவை சேர்த்துக் கொண்டால் உப்பலாக வரும். *வடை தட்டும் போது, ஒரு பன்னீர் துண்டை மாவால் மூடி எண்ணெய்யில் போட்டு பொறித்தால், வித்தியாசமான ருசியுடன் இருக்கும். *கீரையை வேகவிடும் போது, சிறிதளவு எண்ணெய் சேர்த்தால், பச்சை நிறம் மாறாது. *பாகற்காய் குழம்பு செய்யும் போது, கேரட் ஒன்றை நறுக்கிப் போட்டால், கசப்புத்தன்மை அதிகமாக இருக்காது.
*ஆகஸ்ட் 1ஆம் தேதிக்கு பிறகு ஐடிஆர் (வருமான வரி) தாக்கல் செய்தால் அபராதம் விதிக்கப்படும்.
*ஆகஸ்ட் 1 முதல் HDFC கிரெடிட் கார்டு மூலம் CRED, Cheq, MobiKwik, Freecharge போன்ற ஆப்களை பயன்படுத்தி வாடகை செலுத்தினால் 1% பரிவர்த்தனை கட்டணம் வசூலிக்கப்படும்.
*ஆக.1 முதல் கூகுள் நிறுவனம் இந்தியாவில் சேவை கட்டணங்களை 70% வரை குறைக்கிறது. *ஆக.1 முதல் வீட்டு உபயோகம், வணிக சிலிண்டர்கள் விலை குறைய வாய்ப்புள்ளது.
ஆசிய கோப்பை பெண்கள் டி20 தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா – இலங்கை அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங் செய்கிறது. இத்தொடரில் இரு அணிகளும் ஒரு முறை கூட தோற்காததால் இப்போட்டிக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அரையிறுதியில் இந்திய அணி வங்கதேசத்தையும் இலங்கை அணி பாகிஸ்தானையும் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
‘O’ என்ற எழுத்தில் தொடங்கும் பெயரைக் கொண்டவர்கள் சாத்தியமற்றதை சாத்தியமாக்குபவர்களாக இருப்பார்கள் என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர். உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் குணமும், நிபந்தனையற்று நேசிக்கும் மனமும் கொண்டிருப்பதாலேயே பல நேரங்களில் மன உளைச்சலுக்கு ஆளாக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கின்றனர். கேதுவின் ஆதிக்கம் கொண்ட ‘O’ என்ற எழுத்தில் பெயர் கொண்ட உங்கள் குடும்பத்தினர், நண்பர்களுக்கு இதை பகிருங்கள்.
ஹாலிவுட் ஆக்ஷன் நடிகர் க்ரூஸுக்கு, பிரான்ஸ் அரசின் உயரிய விருதான செவாலியே விருது வழங்கப்பட்டுள்ளது. தங்கள் துறைகளில் சிறப்பாக செயல்படும் நபர்களுக்கு, 1957இல் இருந்து பிரான்ஸ் அரசு இந்த விருதை வழங்கி வருகிறது. அந்த வகையில் திரைத்துறையில் பல்வேறு சாதனைகளை படைத்த டாம் க்ரூக்ஸுக்கு, இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. 1995இல் நடிகர் சிவாஜி கணேசனுக்கும் இந்த விருதை வழங்கி கெளரவித்துள்ளது
சிறந்த கடல் வளங்களைக் கொண்ட தமிழகத்திற்கு, ஆழ்கடல் இயக்கத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியை மாநில அரசு பயன்படுத்தப்படவில்லை என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் குற்றஞ்சாட்டியுள்ளார். . பட்ஜெட்டில் தமிழகத்துக்கு உரிய பங்கு அளிக்கப்படுகிறதெனக் குறிப்பிட்ட அவர், மக்களிடையே பிரதேச அடிப்படையில் பிளவை உருவாக்கும் வகையில், திமுக அரசு பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்வதாக விமர்சித்துள்ளார்.
பான் கார்டு, ஆதாரை இணைக்க முடியாமல் தவிக்கிறீர்களா? கவலை வேண்டாம். இதை எளிதில் சரி செய்யலாம். 2 எண்களும் இணையாமல் இருக்க 2 காரணங்களே இருக்கக்கூடும். ஒன்று, பெயர் முரண்பாடு, எழுத்துப் பிழை. இரண்டு, பிறந்த தேதி உள்ளிட்டவை தவறாக இருக்கக்கூடும். எனவே இரண்டையும் எடுத்து, எது சரி என்பதை உறுதி செய்து, மற்றதை திருத்தி விண்ணப்பித்தால், பான் கார்டுடன், ஆதாரை இணைத்து விடலாம்.
பும்ரா உலகின் மிகவும் தனித்துவமான பவுலர் என இலங்கையின் பயிற்சியாளர் ஜெயசூர்யா குறிப்பிட்டுள்ளார். பும்ராவின் திறமையை அனைவரும் மதிக்க வேண்டும் என்ற அவர், அவரால் சிறப்பாக செயல்பட முடியாத நாள்களை பேட்டர்கள் பயன்படுத்தி ரன்களை குவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். மற்ற வீரர்களை காட்டிலும் பவுலர்கள் எப்போதும் புத்திசாலித்தனமாக சிந்திப்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.