India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மகாராஷ்டிரா, ஜார்கண்ட், ஹரியானா சட்ட மன்றங்களுக்கான தேர்தல் அட்டவணையை EC இன்று வெளியிடவுள்ளது. இதற்கான அறிவிப்பை EC தலைமை ஆணையர் ராஜீவ் குமார் டெல்லியில் இன்று மதியம் 3 மணிக்கு வெளியிடவுள்ளார். ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைக்கு செப். 30க்குள் தேர்தல் நடத்த SC கெடு விதித்திருப்பதால், அதுகுறித்த அறிவிப்பும் இன்று வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அது உறுதிப்படுத்தப்படவில்லை.
ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து SSLV-D3 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. 175.5 கிலோ எடை கொண்ட EOS-08 செயற்கைக்கோளையும், SR-0 டெமோசாட் என்ற தனியார் நிறுவன செயற்கைக்கோளையும் SSLV-D3 ராக்கெட் எடுத்துச் சென்றது. EOS-08 செயற்கைக்கோள் பேரிடர் காலங்களில் பூமி கண்காணிப்பு பணிகளையும், காலநிலை கண்காணிப்பு, மலைப் பகுதிகளில் மழை அளவு உள்ளிட்ட தரவுகளையும் ஆய்வு மேற்கொள்ளவுள்ளது.
சனி, ஞாயிறு வார விடுமுறையையொட்டி, இன்று, நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துறை அறிவித்துள்ளது. சென்னையில் இருந்து, திருச்சி, மதுரை, நெல்லை, கோவை, சேலம், தி.மலை, நாகை, ஓசூர் உள்ளிட்ட பகுதிகளுக்கும், முக்கிய நகரங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கூட்ட நெரிசலை தவிர்க்க, www.tnstc.in மற்றும் அதன் மொபைல் செயலி மூலம் பொதுமக்கள் முன்பதிவு செய்துக் கொள்ளலாம்.
இந்திய கடற்படையின் தகவல் தொழில்நுட்பப் பிரிவில் காலியாக உள்ள SSC EXECUTIVE பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். இதற்கு BE, B.TECH, BSC, MSC, BCA, MCA, M.TECH படித்த 19 -24 வயதுடையவர்கள் www.joinindiannavy.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். ஊதியம் : பணி நிலையைப் பொறுத்து ரூ.56,100 முதல் ரூ.1,77, 500 வரை வழங்கப்படும். இந்த தகவலை வேலை தேடும் நபர்களுக்கு பகிர்ந்து உதவுங்கள்.
டிஎஸ்பிக்கள் 33 பேர் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர். ஐபிஎஸ் அதிகாரிகள், ஐஏஎஸ் அதிகாரிகள் அடுத்தடுத்து பணியிட மாறுதல் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வரிசையில், 33 டிஎஸ்பிக்களை தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி சங்கர் ஜிவால் பணியிட மாறுதல் செய்து உத்தரவிட்டுள்ளார். அதன்படி, தருமபுரி மாவட்டம் பாலக்கோடு டிஎஸ்பி சிந்து, கோவை பொது விநியோக கடத்தல் தடுப்பு டிஎஸ்பி ஜனனி உள்ளிட்டோர் மாற்றப்பட்டுள்ளனர்.
நன்கு செட்டிலாகிய அணிகள் மெகா ஏலத்தை விரும்பவில்லை எனவும், செட்டிலாகாத அணிகள் ஏலத்தை விரும்புவதாகவும் BCCI செயலாளர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார். அதேபோல் இம்பேக்ட் பிளேயர் விதியில் சில சாதகங்கள், பாதகங்கள் உள்ளதாகவும், அணி நிர்வாகங்களுடனான சமீபத்திய சந்திப்பில் இது தொடர்பாக விவாதித்தாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், மெகா ஏலம் குறித்த இறுதி முடிவு விரைவில் தெரியவரும் என தெரிவித்துள்ளார்.
100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிவரும் குரங்கு அம்மையால் உலகளாவிய அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், காங்கோ, மத்திய ஆப்பிரிக்காவில் இருந்து தமிழகம் வரும் பயணிகளை விமான நிலையத்தில் சோதனை செய்ய மருத்துவத்துறை அறிவுறுத்தியுள்ளது. தோல் அரிப்பு, 2 -4 வாரம் காய்ச்சல், தலை, தசை, முதுகு வலி, சீழ் நிறைந்த புண்கள் குரங்கு அம்மை அறிகுறி. இது மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகளிடம் இருந்தும் பரவக்கூடியது.
ஸ்வீடனில் ஒருவருக்கு Mpox (குரங்கு அம்மை) வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் ஜேகப் தெரிவித்துள்ளார். ஆப்பிரிக்க நாடுகளில் மட்டும் தொற்று பரவி வந்த நிலையில், ஐரோப்பிய நாடுகளிலும் தற்போது பரவத் தொடங்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, தொற்று பரவலின் தீவிரத் தன்மையை உணர்ந்த WHO, நேற்று அவசர நிலை பிரகடனம் செய்தது குறிப்பிடத்தக்கது.
வங்கி மோசடி, சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் அவந்தா குழும ₹678 கோடி சொத்துக்களை ED முடக்கியது. தொழிலதிபர் கவுதம் தாபரின் (படத்தில் இருப்பவர்) அவந்தா குழுமம், SBI உள்ளிட்ட வங்கிகளிடம் ₹2,400 கோடி கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாததோடு, ₹1,307 கோடியை வேறு நிறுவனத்துக்கு திருப்பி விட்டதை ED கண்டுபிடித்தது. இதுதொடர்பாக தாபர் மீது வழக்குப்பதிந்து ₹14 கோடி சொத்தை ஏற்கெனவே ED முடக்கியது.
மும்பையில் ₹100 கோடியில் சொகுசு பங்களா, ஹைதராபாத்தில் தலா ₹30 கோடி மதிப்பில் 2 அப்பார்ட்மெண்ட்களை நயன்தாரா வைத்துள்ளார். ₹50 கோடியில் தனி விமானம், ₹2.76 கோடி மதிப்பில் 2 சொகுசு கார்களும் வைத்துள்ளார். இதுபோக ₹10 கோடியை Lip Balm நிறுவனத்திலும், அரபு நாடுகளில் எண்ணெய் தொழிலில் ₹100 கோடியும் முதலீடு செய்துள்ளார். மேலும், ₹50 கோடியில் ரவுடி பிக்சர்ஸ் என்ற படத் தயாரிப்பு நிறுவனத்தையும் கொண்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.