India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழிசைக்கு மீண்டும் ஆளுநர் பதவி கிடைக்கவில்லை என்ற செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்ததாக காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். தெலங்கானாவில் ஆளுநராக இருந்த அவர், அண்ணாமலையின் சித்து விளையாட்டால் பலிகடா ஆக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார். இன்று புதிதாக 7 பேர் ஆளுநராக நியமிக்கப்பட்ட நிலையில், ஏற்கெனவே ஆளுநராக இருந்த தமிழிசை பெயர் அதில் இடம் பெறவில்லை.
மொபைல் நெட்வொர்க் சேவையை அளிப்பது போல, மலிவு விலை 4ஜி செல்போன்களையும் ஜியோ விற்று வருகிறது. அந்த வரிசையில், JIOBHARAT J1 என்ற பெயரில் புதிய 4ஜி போனை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை ₹2,999ஆக நிர்ணயித்துள்ளது. ஆனால், அறிமுக சலுகையாக ₹1,799 விலைக்கு அந்த போனை விற்பனை செய்கிறது. 2,500 Mah பேட்டரி திறனும், 2.8 இன்ச் திரையும் கொண்டுள்ளது. மெமரியை 128 ஜிபி வரை நீட்டிக்க முடியும்.
காதி விற்பனை முன் எப்போதும் இல்லாத வகையில் 400% உயர்ந்துள்ளதாக மன் கி பாத் உரையில் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் 7ஆம் தேதி தேசிய கைத்தறி தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில், காதி மூலம் வரும் வருவாய் 1.5 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது என்றார். மேலும், அதிகரித்து வரும் காதி, கைத்தறி விற்பனை புதிய வேலை வாய்ப்புகளையும் உருவாக்கி வருவதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
பாரிஸ் ஒலிம்பிக்ஸின் துப்பாக்கிச் சுடுதல் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு இந்திய வீராங்கனை ரமிதா ஜிண்டால் முன்னேறியுள்ளார். மகளிருக்கான 10 மீ., ஏர் ரைபிள் பிரிவின் தகுதிச்சுற்றில் சிறப்பாக விளையாடிய அவர் 631.5 புள்ளிகளைப் பெற்று 5ஆம் பிடித்து இறுதிப்போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளார்.
43 வீராங்கனைகள் பங்குகொண்ட இந்த ஆட்டத்தில் முதல் 8 இடங்களை பிடிப்பவர்கள் மட்டுமே இறுதிச்சுற்றுக்கு முன்னேற முடியும்.
தமிழகத்தில் இரவு 7 மணி வரை மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கோவை, தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, குமரி மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, ஈரோடு, திருப்பூர், தூத்துக்குடி, திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீர் இருப்பு 110 அடியை தாண்டிய நிலையில், முதல்வரின் அறிவுறுத்தலின்படி, அமைச்சர் கே.என்.நேரு அணையில் இருந்து நீரை திறந்து வைத்தார். இதனையடுத்து காவிரி ஆறு செல்லும் வழித்தடங்களுக்கு அருகில் சென்று, ஆபத்தான முறையில் புகைப்படம் எடுக்க கூடாது என பொதுமக்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது.
பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், டேபிள் டென்னிஸ் பிரிவின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை ஸ்ரீஜா அகுளா, ஸ்வீடன் வீராங்கனை கிறிஸ்டின் உடன் மோதினார். இதில், அகுளா 11-4, 11-9, 11-7,11-8 என்ற நேர் செட் கணக்கில் வென்று அடுத்தச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். ரவுண்ட் ஆஃப் 32 போட்டிக்கு தகுதி பெற அகுளா வெறும் 30 நிமிடங்களே எடுத்துக் கொண்டார்.
*பூரிக்கு மாவு பிசையும் போது, கால் தேக்கரண்டி ரவை சேர்த்துக் கொண்டால் உப்பலாக வரும். *வடை தட்டும் போது, ஒரு பன்னீர் துண்டை மாவால் மூடி எண்ணெய்யில் போட்டு பொறித்தால், வித்தியாசமான ருசியுடன் இருக்கும். *கீரையை வேகவிடும் போது, சிறிதளவு எண்ணெய் சேர்த்தால், பச்சை நிறம் மாறாது. *பாகற்காய் குழம்பு செய்யும் போது, கேரட் ஒன்றை நறுக்கிப் போட்டால், கசப்புத்தன்மை அதிகமாக இருக்காது.
*ஆகஸ்ட் 1ஆம் தேதிக்கு பிறகு ஐடிஆர் (வருமான வரி) தாக்கல் செய்தால் அபராதம் விதிக்கப்படும்.
*ஆகஸ்ட் 1 முதல் HDFC கிரெடிட் கார்டு மூலம் CRED, Cheq, MobiKwik, Freecharge போன்ற ஆப்களை பயன்படுத்தி வாடகை செலுத்தினால் 1% பரிவர்த்தனை கட்டணம் வசூலிக்கப்படும்.
*ஆக.1 முதல் கூகுள் நிறுவனம் இந்தியாவில் சேவை கட்டணங்களை 70% வரை குறைக்கிறது. *ஆக.1 முதல் வீட்டு உபயோகம், வணிக சிலிண்டர்கள் விலை குறைய வாய்ப்புள்ளது.
ஆசிய கோப்பை பெண்கள் டி20 தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா – இலங்கை அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங் செய்கிறது. இத்தொடரில் இரு அணிகளும் ஒரு முறை கூட தோற்காததால் இப்போட்டிக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அரையிறுதியில் இந்திய அணி வங்கதேசத்தையும் இலங்கை அணி பாகிஸ்தானையும் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.