news

News July 28, 2024

மனு பாக்கர் நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார்: ராம் கிஷன்

image

மனு பாக்கரை நினைத்து நாடு பெருமிதம் கொள்வதாக மகளிர் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை மனு பாக்கரின் தந்தை ராம் கிஷன் பாக்கர் தெரிவித்துள்ளார். மனுவுக்கு அரசாங்கம் மற்றும் துப்பாக்கிச் சுடுதல் கூட்டமைப்பிலிருந்து அதிகப்படியான ஆதரவு கிடைத்ததாகவும், அதனால் தான் இந்த வெற்றி சாத்தியமானதாகவும் அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

News July 28, 2024

பரிசுகளுக்கு வருமான வரி உண்டா?

image

வருமான வரி சட்டத்தின்படி, நெருங்கிய உறவினர்களுக்கு அளிக்கும் பரிசுப் பொருள்கள் மற்றும் பரிசுத் தொகைக்கு வருமான வரி கட்ட வேண்டிய அவசியமில்லை. இதில், நெருங்கிய உறவினர் என்பது மனைவி, கணவன், தாய், தந்தை, சகோதரன், சகோதரி, மகன், மகள் உள்ளிட்டோர் அடங்குவார்கள். மற்றவர்கள் அளிக்கும் பரிசுக்கு ₹50,000 வரை வரி கிடையாது. அதே போல, திருமணத்தில் பெறப்படும் அனைத்து பரிசுகளுக்கும் வரி விலக்கு உண்டு.

News July 28, 2024

OLYMPICS: நைஜீரிய வீராங்கனை சஸ்பெண்ட்

image

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் தொடங்கும் முன்பு, அதில் கலந்து கொள்ளும் வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்க மருந்து பரிசோதனை நடத்தப்பட்டது. அப்போது நைஜீரிய குத்துச்சண்டை வீராங்கனை சின்டியா டிமிட்டியாயோவுக்கும் சோதனை நடத்தப்பட்டது. இதில் அவர், ஊக்கமருந்து பரிசோதனையில் தோல்வியடைந்தார். இதையடுத்து, ஊக்கமருந்து தடை விதிகளை மீறிய குற்றச்சாட்டுக்காக அவரை சர்வதேச ஒலிம்பிக் அமைப்பு சஸ்பெண்ட் செய்துள்ளது.

News July 28, 2024

ஆபாசப் படத்தால் தங்கையை கொன்ற அண்ணன்

image

மத்திய பிரதேச மாநிலத்தில் ஆபாசப் படம் பார்த்து 9 வயது தங்கையை பலாத்காரம் செய்த 13 வயது சிறுவன், அவரை கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக தந்தையிடம் தெரிவிக்கப் போவதாக சிறுமி கூறியதால் பயந்த சிறுவன், அவரது கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இந்த விவகாரத்தில் சிறுவன், அவரது தாயார் உள்பட 3 பேர் கைதாகியுள்ள நிலையில், போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

News July 28, 2024

5 கோடி பேர் வருமான வரி கணக்கு தாக்கல்

image

2023-24 நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு இன்னும் 3 நாள்களில் நிறைவடைகிறது. இந்நிலையில், 5 கோடிக்கும் அதிகமானோர் இதுவரை ITR தாக்கல் செய்துள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 8% அதிகமாகும். இதனிடையே, ITR இணையதளத்தில் பிரச்னைகளை எதிர்கொள்வதாக பயனாளர்கள் புகார் தெரிவித்து வந்த நிலையில், தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு வருகிறது.

News July 28, 2024

வரலாற்று பதக்கம்: மோடி

image

மகளிர் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற மனு பாக்கருக்கு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் மனு பாக்கர், வரலாற்று பதக்கத்தை வென்றுள்ளதாக பாராட்டியுள்ள அவர், இந்த சாதனையை எளிதில் நம்ப முடியவில்லை என்று வாழ்த்தியுள்ளார். ஒலிம்பிக்ஸில் மகளிர் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் முதல் பதக்கம் பெற்ற இந்திய வீராங்கனை என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

News July 28, 2024

ஒலிம்பிக் வரலாற்றில் புதிய சாதனை படைத்த மனு பாக்கர்

image

ஒலிம்பிக் வரலாற்றில், மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவு போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாறை, மனு பாக்கர் படைத்துள்ளார். பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் நடைபெற்ற துப்பாக்கிச் சுடுதல் போட்டியில், வெண்கலம் வென்றதன் மூலம் அவர் இந்த சாதனையை படைத்துள்ளார். அதேபோல, பாரிஸ் ஒலிம்பிக்-2024இல் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

News July 28, 2024

கோச்சிங் சென்டர் உரிமையாளர்கள் கைது

image

டெல்லியில் சிவில் சர்வீஸ் தேர்வர்கள் 3 பேர் உயிரிழந்த விவகாரத்தில் கோச்சிங் சென்டர் உரிமையாளர் அபிஷேக் குப்தா கைது செய்யப்பட்டுள்ளார். ஐஏஎஸ் பயிற்சிக்கு கட்டடத்தின் அடித்தளத்தில் தங்கி படித்துக் கொண்டிருந்த 3 பேர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக டெல்லியில் ஆங்காங்கே போராட்டங்கள் வெடித்த நிலையில், கட்டட விதிமீறல் நடைபெற்றுள்ளதாக கூறி உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

News July 28, 2024

இந்தியா சிமெண்ட்ஸை கைப்பற்றும் அல்ட்ரா டெக்?

image

இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை, ஆதித்யா பிர்லா குழுமத்தின் அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ் வாங்கியுள்ளது. முன்னதாக, ஜூனில் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 22.77% பங்குகளை, அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ் வாங்கியிருந்த நிலையில், தற்போது மேலும், 32.72% சதவீத பங்குகளை வாங்கியுள்ளது. இதன்மூலம் இந்தியா சிமெண்ட்ஸின் 55.49% பங்குகளை அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ் நிறுவனம் வைத்துள்ளது.

News July 28, 2024

இந்திய பெண்கள் அணி அபாரம்

image

பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிப் போட்டியில் இந்திய அணி 165 ரன்கள் குவித்துள்ளது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க வீராங்களை ஸ்மிருதி மந்தனா 60 ரன்கள் குவித்தார். ரிச்சா கோஷ் 30 ரன்களும், ஜெமிமா ரோட்ரிகேஸ் 29 ரன்களும் குவித்து வலுவான அடித்தளம் அமைத்தனர். . 20 ஓவர் முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் எடுத்தது.

error: Content is protected !!