India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
CUET-UG தேர்வுக்கான முடிவுகளை தேசிய தேர்வு முகமை சற்றுமுன் வெளியிட்டுள்ளது. மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளில் சேருவதற்காக ஆண்டுதோறும் இந்த தேர்வு நடத்தப்படுகிறது. நடப்பாண்டு, நாடு முழுவதும் இருந்து 13.48 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதினர். தேர்வு முடிவுகளை nta.ac.in மற்றும் exams.nta.ac.in/CUET-UG என்ற இணையதள முகவரியில் அறியலாம்.
சீனாவில் கனமழையால் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சீனாவின் கிழக்குப்பகுதி முழுவதும் கேமி புயலால் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இதனால், ஹூனான் மாகாணத்தில் உள்ள ஹெங்யாங் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கிய 11 பேர் மண்ணுக்குள் புதைந்து உயிரிழந்தனர். 6 பேர் காயங்களுடன் மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கைக்கு எதிரான 2ஆவது T20 போட்டியில், டாஸ் வென்ற IND அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. SLக்கு சுற்றுப் பயணம் சென்றுள்ள IND, 3 T20 போட்டிகளில் விளையாடுகிறது. கென்டியில் நேற்று நடைபெற்ற போட்டியில் IND அணி, 43 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. 2ஆவது போட்டி நடைபெறும் பல்லெகெலே பகுதியில் மழை பெய்ததால் போட்டி சற்று தாமதமாக தொடங்குகிறது. SLக்கு எதிரான T20 தொடரை SKY தலைமையிலான படை வெல்லுமா?
தமிழகத்தில் இரவு 10 மணி வரை மழை பெய்யக்கூடிய மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். திண்டுக்கல், ஈரோடு, திருப்பூர், விருதுநகர், தூத்துக்குடி, திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, சென்னை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
கர்நாடக அணைகளில் இருந்து விநாடிக்கு 1.50 லட்சம் கன அடிக்கும் அதிகமாக தண்ணீர் வருவதால், தமிழகத்தில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சை, நாகை மாவட்டங்களில் காவிரி ஆற்றங்கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கவும், அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
நடிகர் அசோக் செல்வன் படங்களின் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை என தயாரிப்பாளர் திருமலை குற்றஞ்சாட்டியுள்ளார். அவர்கள் கூட்டணியில் உருவாகியிருக்கும் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அதில் அசோக் செல்வன் கலந்து கொள்ளாத நிலையில் பேசிய தயாரிப்பாளர், அவர் ஃபோனை கூட எடுக்காமல் புறக்கணிப்பதாக வேதனை தெரிவித்தார்
இந்தியாவில் நெரிசலான நகரங்களில் ஒன்றாக இருப்பது பெங்களூரு. இதை உணர்த்தும் வகையிலான கூகுள் மேப் ஸ்கிரீன் ஷாட் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆயுஷ் சிங் என்பவர் தனது X பக்கத்தில், பிரிகேட் மெட்ரோபோலிஸ் முதல் கே.ஆர்.புரம் வரையிலான 6 கி.மீ தூரத்தை கார் மற்றும் நடந்து சென்றால் எவ்வளவு நேரமாகும் என்பதை ஒப்பிட்டுள்ளார். அதில் நடந்து சென்றால் முன் கூட்டியே சென்றுவிடலாம் என்பதை கூகுள் மேப் காட்டியுள்ளது.
பழக்குடியினர் நலத்துறையில் உள்ள 328 பள்ளிகளில், 438 ஆசிரியர்கள் பணியிடங்கள் பல ஆண்டுகளாக நிரந்தரமாக நிரப்பப்படவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. 300 பணியிடங்கள் தற்காலிக ஆசிரியர்கள் மூலம் பாடம் நடத்தப்பட்டு வருகிறது. பெரும்பாலான பள்ளிகளில் ஓராசிரியர்கள் மட்டும் பணிபுரியும் பள்ளிகளாக இருப்பதால், பழங்குடியின மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். கவனிக்குமா அரசு?
பாரிஸ் ஒலிம்பிக்ஸில் 3 தங்கம் மற்றும் 2 வெள்ளி பதக்கங்களை வென்று பதக்க பட்டியலில் ஆஸ்திரேலியா முதலிடத்தில் உள்ளது. 3 தங்கம் மற்றும் ஒரு வெண்கல பதக்கங்கள் வென்று சீனா 2ஆவது இடத்தையும், 2 தங்கம், 2 வெள்ளி மற்றும் ஒரு வெண்கலம் வென்று தென் கொரியா 3ஆவது இடத்தையும் பிடித்துள்ளன. இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஸ்வீடன், ஸ்பெயின், ஹங்கேரி ஆகிய நாடுகள் ஒரு வெண்கல பதக்கம் வென்று 17ஆவது இடத்தில் உள்ளன.
டெல்லியில் எல்லைச்சாமியாக இருந்து கலைஞர் தமிழ்நாட்டை காப்பாற்றிக் கொண்டிருக்கிறார் என திமுக எம்பி ஆ.ராசா கூறியுள்ளார். கலைஞர் எல்லைச்சாமியாக அங்கு இருக்கும் வரை தமிழனையும், தமிழ்நாட்டையும் யாரும் ஒன்னும் செய்ய முடியாது என்ற அவர், இந்தியாவின் அரசியலைமைப்பை 93 வயது வரை காப்பாற்றி மறைந்த கடவுளின் அவதாரமாக இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.