India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக, மாநிலம் முழுவதும் சிறப்பு முகாம் நடத்தப்படவுள்ளதாக சமூக வலைதளங்களில் செய்தி வெளியானது. இந்த தகவலை அதிகாரப்பூர்வமாக மறுத்துள்ள தமிழ்நாடு அரசு, மகளிர் உரிமை தொடர்பாக சிறப்பு முகாம் நடைபெறவில்லை என விளக்கமளித்துள்ளது. மேலும், வாட்ஸ்ஆப் உள்ளிட்டவற்றில் வெளியாகும் இதுபோன்ற போலியான செய்திகளை மக்கள் நம்ப வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
கார் விலை DISCOUNT சலுகைகள் டிச. வரை நீட்டிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. விற்பனை குறைந்து வந்த நிலையில், அதை ஈடு கட்ட 2 மாதங்களாக விலை தள்ளுபடி உள்ளிட்ட சலுகைகளை மாருதி சுசூகி, ஹியூன்டாய், டாடா உள்ளிட்ட நிறுவனங்கள் அளிக்கின்றன. கடந்தாண்டு ஆகஸ்டுடன் ஒப்பிடுகையில், நடப்பாண்டு ஆகஸ்டில் இது 2 மடங்கு அதிகரித்துள்ளது. இந்த சலுகை விழாக்காலம் முழுவதும் அளிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
INDO-TIBET படையில் காவலர் நிலை (டெய்லர், காப்லர்) பதவிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள 51 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை மறுநாள் கடைசி நாளாகும். இந்த வேலைக்கு <
அத்திக்கடவு- அவிநாசி திட்டத்துக்காக 20ஆம் தேதி முதல் பாஜக நடத்துவதாக அறிவித்த தொடர் உண்ணாவிரத போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். அத்திட்டத்தை CM ஸ்டாலின் நாளை தொடங்கி வைப்பதாக அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இதை, பாஜக வரவேற்கிறது என்று அவர் கூறியுள்ளார். குழாய் பதிக்க நிலம் கொடுத்த விவசாயிகளுக்கான இழப்பீட்டை தொடக்க விழாவில் அறிவிக்கவும் வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் 3 பேருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. அவர்கள் மூவரும் அண்மையில் அரபு நாடுகளில் இருந்து வந்ததாக அந்நாட்டின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் மட்டுமே பரவி வந்த இந்த தொற்று, முதன் முதலாக ஐரோப்பா நாடான ஸ்வீடனில் நேற்று பரவியது. அங்கு ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை தெரிவித்தது.
திமுக கவுன்சிலர்கள் யாராக இருந்தாலும், தவறு செய்தால் உடனே அவர்களின் பதவியை பறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்டச் செயலாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். சமீபத்தில் திமுக கவுன்சிலர்களே எதிர்ப்பு தெரிவித்ததால், நெல்லை, கோவை மேயர்கள் அடுத்தடுத்து பதவியை ராஜினாமா செய்தனர். இதில் ஒருபடி மேலே போய், நம்பிக்கை வாக்கெடுப்பில் நெல்லை மேயருக்கு எதிராக திமுக கவுன்சிலர்கள் வாக்களித்தனர்
இந்திய ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியங்கள் அறிவித்துள்ள 1,376 பணியிடங்களுக்கு நாளை முதல் விண்ணப்பப்பதிவு தொடங்கவுள்ளது. டயட்டிசியன், நர்சிங் சூப்பிரண்ட், ஆடியாலஜிஸ்ட், ஸ்பீச் தெரபிஸ்ட் உள்ளிட்ட 20 பதவிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஆட்சேர்ப்பு வாரிய இணையதளங்களில் செப். 16 வரை விண்ணப்பிக்கலாம். பொது பிரிவினருக்கு ₹500, பட்டியல் பிரிவினருக்கு ₹250 தேர்வு கட்டணம்.
<<13867459>>தேர்தல் <<>>தேதி இன்று அறிவிக்கப்படவுள்ள ஜார்க்கண்ட் சட்டசபையில் ஹேமந்த் சோரன் தலைமையிலான JMM கூட்டணி அரசுக்கு 47 இடங்கள் (மொத்தம் 82) உள்ளன. இதில் JMM 27, காங்கிரஸ் 18, ஆர்ஜேடி 1, சிபிஎம் 1 இடங்கள் உள்ளன. எதிர்க்கட்சிகளுக்கு 30 இடங்கள் உள்ளன. சட்டசபை பதவிக்காலம் 2025 ஜன. முடிவடைகிறது. மோசடி வழக்கில் கைதான சோரன் ஜாமினில் வந்த நிலையில், தேர்தல் தேதி அட்டவணை இன்று வெளியாகவுள்ளது.
முதலீடுகளை ஈர்க்க அமெரிக்காவில் இருந்தாலும், கட்சியையும், அரசையும் கவனித்துக் கொண்டிருப்பேன் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவரின் பேச்சு மூலம், உதயநிதி துணை முதல்வராக வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. மேலும், 2026 சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவதே இலக்கு. ஒவ்வொரு வாக்கும் முக்கியம் என்பதை மாவட்டச் செயலாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.
திமுகவை சேர்ந்த சில மாவட்டச் செயலாளர்கள் மீது புகார்கள் வந்திருக்கின்றன. மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் மீதான புகார்கள் குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் எச்சரித்துள்ளார். மக்களுக்கு நலத்திட்டங்களை அளித்திருக்கிறோம், அதை வாக்குகளாக மாற்ற களப்பணியாற்ற வேண்டும். சுணக்கமின்றி தொடர்ந்து செயல்பட்டால், அடுத்த முறையும் திமுக ஆட்சி தான் என்று சூளுரைத்தார்.
Sorry, no posts matched your criteria.