news

News July 29, 2024

அக்டோபர் 2ஆம் தேதி கட்சி தொடங்குகிறார் பி.கே

image

தேர்தல் வியூகவாதி பிரசாந்த் கிஷோர், அக்டோபர் 2ஆம் தேதி புதிய கட்சியை தொடங்கவிருப்பதாக அறிவித்துள்ளார். ஜன் சூரஜ் என்ற அமைப்பை நடத்தி வரும் அவர், காந்தி ஜெயந்தி அன்று அதனை கட்சியாக மாற்றி பிஹார் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட முடிவு செய்திருக்கிறார். முன்னதாக, இவர் 2021 தேர்தலில் திமுகவுக்கு வியூகம் வகுத்துக் கொடுத்தார். கட்சி தொடங்கியபின் அப்பணியை அவர் கைவிடப் போவதாகவும் தெரிகிறது.

News July 29, 2024

தலைமுடி உதிர்வை நிறுத்த….

image

அழகின் ஒரு அங்கமான தலைமுடி திடீரென உதிர்வது பெரும் கவலையைத் தரும். தலைமுடி உதிர்வு பிரச்னைக்கு வீட்டில் உள்ள எளிய உணவுகளை உட்கொள்வதன் மூலமே நாம் தீர்வு காண முடியும். குறிப்பாக, நமது உணவில் முட்டை, ஓட்ஸ், பீன்ஸ், பசலைக்கீரை, சர்க்கரை வள்ளி கிழங்கு ஆகியவற்றை அதிகம் சேர்க்க வேண்டும். சூரிய காந்தி விதையை சாப்பிட்டாலும் தீர்வு காணலாம் என்று உடல்நல ஆலோசகர்கள் பரிந்துரைக்கின்றனர்.

News July 29, 2024

இன்றைய தலைப்புச் செய்திகள்

image

➤ஆசியக் கோப்பை மகளிர் T20 தொடரின் இறுதிப் போட்டியில், இலங்கையிடம் இந்திய அணி தோல்வியடைந்தது. ➤ மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளில் சேருவதற்கான CUET-UG தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. ➤தமிழகம் முழுவதும் 1-8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, இன்று முதல் விலையில்லா சீருடை வழங்கப்பட உள்ளது. ➤தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான 2ஆம் கட்ட கலந்தாய்வு இன்று தொடங்கி செப். 3 வரை நடைபெற உள்ளது.

News July 29, 2024

திட்டமிட்டதற்கு முன்பாகவே ஓடிடி ரிலீஸ்?

image

‘இந்தியன் -2’ திரைப்படத்திற்கு சொல்லிக் கொள்ளும்படி பெரிய வரவேற்பு இல்லாததால், திட்டமிட்டதற்கு முன்பாகவே நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிட பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பொதுவாக படம் திரையரங்குகளில் வெளியாகி 4 வாரங்களுக்கு பிறகே ஓடிடியில் ரிலீஸாகும் நிலையில், பெரிய தொகை கொடுத்து ‘இந்தியன் -2’ வாங்கப்பட்டதால் 4 வாரங்களுக்குள் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

News July 29, 2024

விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு

image

பேராசிரியர்களின் போலி நியமன முறைகேட்டில் பொறியியல் கல்லூரிகளிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புமாறு அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார். 353 பேராசிரியர்கள், 10க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பணியாற்றுவது கண்டறியப்பட்டது. மோசடியில் ஈடுபட்ட கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என துணைவேந்தர் கூறியிருந்த நிலையில், ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

News July 29, 2024

₹110 கோடி மதிப்பிலான போதை மாத்திரைகள் பறிமுதல்

image

குஜராத்தில் கடந்த 2 நாள்களில் ₹110 கோடி மதிப்பிலான போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சுங்க இலாகா துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த சனிக்கிழமை 26.26 லட்சம் டிரமடோல் போதை மாத்திரைகளும், நேற்று 42.24 லட்சம் போதை மாத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதன் சந்தை மதிப்பு ₹110 கோடியாகும். மேலும், அகமதாபாத்தில் ஆளில்லா குடோனில் இருந்தும் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

News July 29, 2024

மின்சார வாகனம் வாங்குவோர் கவனத்திற்கு!

image

மத்திய அரசின் மின்சார இயக்க ஊக்குவிப்புத் திட்டம் செப்டம்பர் வரை நீட்டிக்கப்பட்டு, மானியத் தொகை கூடுதலாக ₹278 கோடி உயர்த்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் இரு சக்கர வாகனங்களுக்கு ₹10,000, சிறிய மின்சார 3 சக்கர வாகனங்களுக்கு ₹25,000, 3 சக்கர கனரக வாகனங்களுக்கு ₹50,000 மானியமாக வழங்கப்படுகிறது. அதர், பஜாஜ், ஓலா உள்ளிட்ட குறிப்பிட்ட நிறுவன வாகனங்களுக்கு மட்டும் மானியம் வழங்கப்படுகிறது.

News July 29, 2024

இன்றைய நல்ல நேரம்

image

▶ஜூலை – 29 | ▶ஆடி – 13 ▶கிழமை: திங்கள் ▶திதி: நவமி ▶நல்ல நேரம்: 06:15 AM – 07:15 AM & 04:45 PM – 05:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 09:15 AM – 10:15 AM & 07:30 PM – 08:30 PM ▶ராகு காலம்: 07:30 PM – 09:00 PM ▶எமகண்டம்: 10:30 AM – 12:00 PM ▶குளிகை: 01:30 PM – 03:00 PM ▶சந்திராஷ்டமம்: பூரம், உத்திரம் ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர்

News July 29, 2024

அரசே சமஸ்கிருதத்தை திணிப்பதா?: அன்புமணி

image

தமிழகத்தில் தொல்லியல் பணிகளை மேற்கொள்ள சமஸ்கிருதத்தில் பட்டம் பெற்றிருப்பது கட்டாயம் என்பது சமஸ்கிருதத் திணிப்பு என அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார். சமஸ்கிருதம் வழக்கொழிந்த மொழி என்பது தான் அரசின் நிலைப்பாடு என்று இருக்கையில், பின்னர் எப்படி அம்மொழியில் பட்டம் பெற்றவர்கள் தமிழகத்தில் இருப்பார்கள் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் TNPSC அறிவிப்பை திரும்ப பெற வலியுறுத்தியுள்ளார்.

News July 29, 2024

இந்தியாவில் வாட்ஸ் அப் சேவை நிறுத்தம்?

image

பயனாளர்களை தகவல்களை அரசிடம் பகிர கூறி கட்டாயப்படுத்துவதால், இந்தியாவில் வாட்ஸ் அப் சேவை நிறுத்தப்பட வாய்ப்புள்ளதா என ராஜ்ய சபாவில் காங்., உறுப்பினர் விவேக் டன்கா கேள்வி எழுப்பினார். இது குறித்து அந்நிறுவனம் எவ்வித தகவலையும் அரசிடம் பகிரவில்லை எனவும், நாட்டின் பாதுகாப்பிற்காகத்தான் பயனாளர்களின் தகவல்களை பகிர சொல்லி கேட்டதாகவும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதில் அளித்துள்ளார்.

error: Content is protected !!