India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கருணாநிதியின் உருவம் பொறித்த நாணயம் வெளியீட்டு விழாவில் பங்கேற்க மாட்டோம் என அதிமுக அறிவித்துள்ளது. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு நினைவாக, ஆக.18ஆம் தேதி அவரது உருவம் பொறித்த ₹100 நாணயம் வெளியிடப்படுகிறது. இதில் பங்கேற்க தமிழகத்திலுள்ள அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், விழாவை அதிமுக புறக்கணிப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
வங்கதேசத்தில் இந்துக்கள் மீது தாக்குதல் தொடர்ந்து வரும் நிலையில், வங்கதேச இடைக்கால அரசாங்கத் தலைவர் முகமது யூனுஸ், பிரதமர் மோடியிடம் போனில் பேசியுள்ளார். இத்தகவலை X தளத்தில் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, அங்கு இந்துக்கள் மற்றும் சிறுபான்மையினரின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என, யூனுஸ் தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்தியாவின் ஆதரவையும் அவர் கோரியதாகவும் தெரிவித்துள்ளார்.
தங்கத்தின் விலை அதிகரித்து வரும் சூழலில், அதன் இறக்குமதி ஏப்ரல் – ஜூலை காலக்கட்டத்தில் 4.23% சரிந்து, ₹1.05 லட்சம் கோடியாக குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டு ₹1.10 லட்சம் கோடியாக இருந்தது. அதுவே கடந்த ஆண்டின் ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில், இது 10.65% குறைவாகும். எனினும், பண்டிகை காலம் தொடங்குவதாலும், இறக்குமதி வரி குறைக்கப்பட்டதாலும், செப்டம்பரில் நகை விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்களவைத் தேர்தல் காரணமாக புதிய ரேஷன் அட்டை விநியோகிக்கும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், இம்மாதம் முதல் ரேஷன் அட்டையை விநியோகிக்கும் பணிகள் தொடங்கும் என அரசு அறிவித்திருந்தது. 2.40 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், அதில் 2 லட்சம் அட்டைகள் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. இவற்றை விண்ணப்பித்தவர்களின் வீட்டிற்கே அனுப்பி வைக்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
70வது தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. இதில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் நடித்ததற்காக, நித்யா மேனனுக்கு சிறந்த நடிகை விருதும், அப்படத்தில் பணியாற்றிய ஜானி, சதீஷூக்கு நடன கலைஞர்களுக்கான விருதும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், விருது பெறும் அனைவருக்கும் நடிகர் தனுஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார். விருது பெறும் அனைவரும், அதற்கு தகுதியானவர்கள் எனவும் புகழ்ந்துள்ளார்.
இந்த ஆண்டுக்குள் 4 சட்டமன்றங்களுக்கு தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என, ராஜூவ் குமார் தெரிவித்துள்ளார். இதன்காரணமாகவே முதலில் ஜம்மு காஷ்மீர், ஹரியானாவுக்கும், பின்னர் மகாராஷ்டிரா, ஜார்கண்டிற்கும் தேர்தல் நடைபெறுவதாக கூறினார். பாதுகாப்பு வீரர்களின் எண்ணிக்கையும் ஒரு காரணமென்ற அவர், மகாராஷ்டிராவில் மழை பாதிப்பு மற்றும் தொடர் விழாக்களை கருத்தில் கொண்டும் இம்முடிவு எடுக்கப்பட்டதாக விளக்கமளித்தார்.
கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொலை செய்யப்பட்டது, நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மாநில அரசு அறிவித்த இழப்பீட்டுத் தொகையை பெற, மருத்துவரின் தந்தை மறுத்துள்ளார். இந்த தொகையை பெற்றுக்கொண்டால், அது தனது மகளுக்கு வலியை கொடுக்கும் என்றும், தனக்கு நியாயம்தான் வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
சிறப்பு அந்தஸ்து 370 சட்டப்பிரிவு ரத்தான பின், ஜம்மு காஷ்மீரில் முதல்முறையாக தேர்தல் நடக்கிறது. 90 தொகுதிகளை கொண்ட சட்டப்பேரவைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. மொத்தம் 87 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில், 11,838 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்படவுள்ளன. சமீபகாலமாக தீவிரவாதத் தாக்குதல்கள் அதிகரித்துள்ள நிலையில், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.
அதிக கனமழை பெய்ததால் சிறார் திருமணம் அதிகரித்துள்ளதாக பாகிஸ்தான் விநோத காரணத்தைக் கூறியுள்ளது. அதிக சிறார் திருமணம் நடைபெறும் நாடுகள் பட்டியலில் பாகிஸ்தான் 6ஆவது இடத்தில் உள்ளது. சிறார் திருமணம் குறைந்து வந்த நிலையில், 2022 கனமழை வெள்ளத்தால் பயிர்கள் சேதமடையவே இழப்பை சந்திக்க முடியாத குடும்பங்கள் பணம் பெற்றுக் கொண்டு சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைப்பதாக பாகிஸ்தான் கூறியுள்ளது.
அரசுப் பள்ளிகளில் உள்ள பள்ளி மேலாண்மைக் குழுவை (SMC) கட்டமைக்கும் 2ஆவது கூட்டம், நாளை நடைபெறவுள்ளது. கடந்த சனிக்கிழமை நடந்த கூட்டத்தில் 12,117 அரசுப் பள்ளிகளில் SMC மறுகட்டமைப்பு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து நாளைய கூட்டத்தில் 8,000க்கும் அதிகமான பள்ளிகளில் மறுகட்டமைப்பு செய்யப்படுகிறது. அரசுப்பள்ளி மாணவர்களின் நலனை மேம்படுத்த பெற்றோர், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் இந்தக் குழுவில் இடம்பெறுவர்.
Sorry, no posts matched your criteria.