India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட்டின் மகன் சமிட் டிராவிட் உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் அறிமுகமாகியுள்ளார். மகாராஜா டிராபி தொடரில் மைசூர் வாரியர்ஸ் அணிக்காக விளையாடுகிறார். நேற்று நடைபெற்ற சிவமொக்கா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 ரன்களை மட்டுமே எடுத்தார். இருப்பினும் ராகுல் டிராவிட்டின் அடுத்த தலைமுறை கிரிக்கெட்டில் களமாடுவது குறித்து ரசிகர்கள் மகிழ்ச்சியையே வெளிப்படுத்தியுள்ளனர்.
சென்னையில் உள்ள திமுக தலைமையகத்தில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாட்டின் ரயில்வே திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யாதது உள்ளிட்டவற்றுக்காக மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோல், முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவாக நாணயம் வெளியிடுவதற்கு நன்றி தெரிவித்து மற்றொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதிமுக அவசர செயற்குழுக் கூட்டத்தில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தமிழ்நாட்டுக்கு பட்ஜெட்டில் போதிய நிதி ஒதுக்காத மத்திய அரசுக்கு எதிராக ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலை சீர்குலைந்துள்ளதாக குற்றம்சாட்டி தமிழக அரசுக்கு எதிராக ஒரு தீர்மானமும், தொழில் வளர்ச்சி குறைந்த காரணத்தை கண்டறிந்து தீர்வு காணக்கோரி ஒரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளன.
ஆஸ்கர் விருதே கிடைக்கும் என்று சொன்னால் கூட தலையை மொட்டை அடித்து நடிக்க மாட்டேன் என நடிகை ஜான்வி கபூர் தெரிவித்துள்ளார். தன்னுடைய தலை முடிக்காக தனது அம்மா ஸ்ரீதேவி அதிக அக்கறை எடுத்து கொள்வார் எனவும், 4 நாள்களுக்கு ஒருமுறை தலையில் ஆயில் மசாஜ் செய்வார் என்றும் அவர் நினைவு கூர்ந்துள்ளார். மேலும், முதல் படத்தில் நடிப்பதற்காக சிறிதளவு முடி வெட்டியதற்கு அம்மா மிகவும் கோபப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியுள்ளது. இக்கூட்டத்தில், உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்குவது குறித்தும், MLAக்களின் செயல்பாடுகள், மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கையை உயர்த்துவது, திமுக முப்பெரும் விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்தும் ஆலோசனை நடைபெறுகிறது. இன்று திமுகவில் பல அதிரடி மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் மதியம் 1 மணி வரை 12 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என RMC தெரிவித்துள்ளது. காலையில் இருந்து பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், அடுத்த 2 மணி நேரத்திற்கு தென்காசி, நெல்லை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, குமரி, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, தேனி, திண்டுக்கல், விருதுநகர் மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் எனக் கூறியுள்ளது.
சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் இபிஎஸ் முன்னிலையில் அவசர செயற்குழுக் கூட்டம் தொடங்கியுள்ளது. உட்கட்சி விவகாரம், கட்சியை பலப்படுத்துவது, மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது, பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைப்பது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது. மேலும், அடுத்தகட்ட தேர்தல் பணிகள் குறித்து இக்கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என கூறப்படுகிறது.
தமிழகத்தில் 13 அரசு மருத்துவக் கல்லூரிகளில் டீன்கள் இல்லை என செய்தி வெளியாகியுள்ளது. சுகாதாரத் துறை அதிகாரிகளை மேற்கோள்காட்டி வெளியான அந்த செய்திகளில், செங்கல்பட்டு, கரூர், வேலூர், மதுரை, கள்ளக்குறிச்சி, திருச்சி, சேலம், விருதுநகர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, குமரி, தேனி, கீழ்பாக்கம் மருத்துவ கல்லூரிகளில் டீன் இல்லை. மூத்த மருத்துவர்களே இந்த பொறுப்பைக் கூடுதலாக கவனிப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கம் ₹80 உயர்ந்து ₹52,520க்கும், கிராமுக்கு ₹10 உயர்ந்து ₹6,565க்கும் விற்பனையாகிறது. அதேபோல், ஒரு கிராம் வெள்ளி விலை 50 காசுகள் உயர்ந்து ₹89க்கும், கிலோ வெள்ளி ₹500 உயர்ந்து ₹89,000க்கும் விற்பனையாகிறது. ஒருவாரமாக உயர்ந்த தங்கம் விலை கடந்த 14ஆம் தேதி குறைந்தது. ஆனால், ஒரு நாளில் மீண்டும் அதிகரித்துள்ளது.
2026 ஹாக்கி உலகக்கோப்பையில் பதக்கம் வெல்வதே தனது அடுத்த இலக்கு என இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் மன்பிரீத் சிங் தெரிவித்துள்ளார். அதற்காக தனது உடலை ஃபிட்டாக பராமரிப்பதாகவும், அனைத்தும் சாதகமாக நடந்தால் 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்ஸில் விளையாடுவேன் என்றும் அவர் கூறியுள்ளார். முன்னதாக கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் ஓய்வு அறிவித்த நிலையில், இவரும் ஓய்வு அறிவிக்க போகிறார் என எதிர்பார்க்கப்பட்டது.
Sorry, no posts matched your criteria.