news

News August 16, 2024

INDO-TIBET படை வேலை: நாளை மறுநாளே கடைசி

image

INDO-TIBET படையில் காவலர் நிலை (டெய்லர், காப்லர்) பதவிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள 51 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை மறுநாள் கடைசி நாளாகும். இந்த வேலைக்கு <>https://recruitment.itbpolice.nic.in/rect/index.php <<>> இணையதளத்தில் ஜூலை 20 முதல் விண்ணப்பப்பதிவு நடைபெற்று வருகிறது. கல்வித் தகுதியாக 10ஆம் வகுப்பு தேர்ச்சி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆண்களுக்கு 44, பெண்களுக்கு 7 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

News August 16, 2024

போராட்டம் வாபஸ்: அண்ணாமலை

image

அத்திக்கடவு- அவிநாசி திட்டத்துக்காக 20ஆம் தேதி முதல் பாஜக நடத்துவதாக அறிவித்த தொடர் உண்ணாவிரத போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். அத்திட்டத்தை CM ஸ்டாலின் நாளை தொடங்கி வைப்பதாக அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இதை, பாஜக வரவேற்கிறது என்று அவர் கூறியுள்ளார். குழாய் பதிக்க நிலம் கொடுத்த விவசாயிகளுக்கான இழப்பீட்டை தொடக்க விழாவில் அறிவிக்கவும் வலியுறுத்தியுள்ளார்.

News August 16, 2024

இந்தியாவை நெருங்கும் குரங்கம்மை

image

இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் 3 பேருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. அவர்கள் மூவரும் அண்மையில் அரபு நாடுகளில் இருந்து வந்ததாக அந்நாட்டின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் மட்டுமே பரவி வந்த இந்த தொற்று, முதன் முதலாக ஐரோப்பா நாடான ஸ்வீடனில் நேற்று பரவியது. அங்கு ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை தெரிவித்தது.

News August 16, 2024

உடனே பதவி பறிப்பு: முதல்வர் சரவெடி

image

திமுக கவுன்சிலர்கள் யாராக இருந்தாலும், தவறு செய்தால் உடனே அவர்களின் பதவியை பறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்டச் செயலாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். சமீபத்தில் திமுக கவுன்சிலர்களே எதிர்ப்பு தெரிவித்ததால், நெல்லை, கோவை மேயர்கள் அடுத்தடுத்து பதவியை ராஜினாமா செய்தனர். இதில் ஒருபடி மேலே போய், நம்பிக்கை வாக்கெடுப்பில் நெல்லை மேயருக்கு எதிராக திமுக கவுன்சிலர்கள் வாக்களித்தனர்

News August 16, 2024

ரயில்வேயில் 1,376 வேலை: நாளை முதல் APPLY

image

இந்திய ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியங்கள் அறிவித்துள்ள 1,376 பணியிடங்களுக்கு நாளை முதல் விண்ணப்பப்பதிவு தொடங்கவுள்ளது. டயட்டிசியன், நர்சிங் சூப்பிரண்ட், ஆடியாலஜிஸ்ட், ஸ்பீச் தெரபிஸ்ட் உள்ளிட்ட 20 பதவிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஆட்சேர்ப்பு வாரிய இணையதளங்களில் செப். 16 வரை விண்ணப்பிக்கலாம். பொது பிரிவினருக்கு ₹500, பட்டியல் பிரிவினருக்கு ₹250 தேர்வு கட்டணம்.

News August 16, 2024

2025 ஜன. முடிவடையும் ஜார்கண்ட் சட்டசபை

image

<<13867459>>தேர்தல் <<>>தேதி இன்று அறிவிக்கப்படவுள்ள ஜார்க்கண்ட் சட்டசபையில் ஹேமந்த் சோரன் தலைமையிலான JMM கூட்டணி அரசுக்கு 47 இடங்கள் (மொத்தம் 82) உள்ளன. இதில் JMM 27, காங்கிரஸ் 18, ஆர்ஜேடி 1, சிபிஎம் 1 இடங்கள் உள்ளன. எதிர்க்கட்சிகளுக்கு 30 இடங்கள் உள்ளன. சட்டசபை பதவிக்காலம் 2025 ஜன. முடிவடைகிறது. மோசடி வழக்கில் கைதான சோரன் ஜாமினில் வந்த நிலையில், தேர்தல் தேதி அட்டவணை இன்று வெளியாகவுள்ளது.

News August 16, 2024

உதயநிதிக்கு துணை முதல்வர் வாய்ப்பில்லையா?

image

முதலீடுகளை ஈர்க்க அமெரிக்காவில் இருந்தாலும், கட்சியையும், அரசையும் கவனித்துக் கொண்டிருப்பேன் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவரின் பேச்சு மூலம், உதயநிதி துணை முதல்வராக வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. மேலும், 2026 சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவதே இலக்கு. ஒவ்வொரு வாக்கும் முக்கியம் என்பதை மாவட்டச் செயலாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

News August 16, 2024

Breaking: மாவட்டச் செயலாளர்கள் மீது நடவடிக்கை

image

திமுகவை சேர்ந்த சில மாவட்டச் செயலாளர்கள் மீது புகார்கள் வந்திருக்கின்றன. மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் மீதான புகார்கள் குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் எச்சரித்துள்ளார். மக்களுக்கு நலத்திட்டங்களை அளித்திருக்கிறோம், அதை வாக்குகளாக மாற்ற களப்பணியாற்ற வேண்டும். சுணக்கமின்றி தொடர்ந்து செயல்பட்டால், அடுத்த முறையும் திமுக ஆட்சி தான் என்று சூளுரைத்தார்.

News August 16, 2024

‘அவதார்’ நாயகன் அவதரித்த தினம்

image

ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனுக்கு இன்று பிறந்தநாள். ‘பிரானா 2’ படம் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர், அடுத்து இயக்கிய ‘டெர்மினேட்டர்’, ‘ஏலியன்ஸ்’, ‘டைட்டானிக்’ ஆகிய படங்கள் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றன. இவர் அறிவியல் புனைவு படங்களை எடுப்பதில் வல்லவர். இருப்பினும் இயற்கை மீதான அவரது காதல் ‘அவதார்’ படங்களில் வெளிப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களின் பக்கமே அவரது ஹீரா கதாபாத்திரம் நின்றது.

News August 16, 2024

ஊழல் புகாரில் ரோஜாவிடம் விசாரணை?

image

ஊழல் புகாரில் ஆந்திரா முன்னாள் அமைச்சர் ரோஜா உள்ளிட்ட 4 பேரை விசாரிக்க விஜயவாடா காவல் ஆணையருக்கு சிஐடி போலீசார் பரிந்துரைத்துள்ளனர். எந்த நேரத்திலும் அவர் விசாரணைக்கு அழைக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை நடத்தியதில், ஒதுக்கீடு செய்யப்பட்ட ₹150 கோடியில், டெண்டர் வழங்கியதில் முறைகேடு செய்தாக சிஐடி போலீசாரிடம் பல்வேறு தரப்பில் புகார் அளிக்கப்பட்டிருந்தது.

error: Content is protected !!