news

News August 16, 2024

திமுக – பாஜக சமரசமா ? (1/2)

image

மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சித்த எதிர்க்கட்சிகளில் திமுகவும் ஒன்று. அதேபோல், திமுக தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலினும் மோடி அரசையும், அதன் கொள்கைகளையும் எதிர்ப்பவர் ஆவார். பதிலுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்ட பாஜக மேலிடத் தலைவர்கள், அண்ணாமலை உள்ளிட்ட தமிழக பாஜகவினர் திமுக அரசு மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்ததால், தேசிய அளவில் 2 கட்சிகளும் எதிரும் புதிருமாக பார்க்கப்பட்டன.

News August 16, 2024

திமுக – பாஜக சமரசமா ? (2/2)

image

சுதந்திர தினத்தையொட்டி ஆளுநரின் விருந்தில் ஸ்டாலின் கலந்து கொண்டார். திமுக அமைச்சர் எ.வ. வேலுவுடன் அண்ணாமலை நீண்ட நேரம் பேசினார். இந்நிலையில், அத்திக்கடவு-அவிநாசி திட்டத்துக்காக அறிவித்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அண்ணாமலை அறிவித்துள்ளார். இதை வைத்து பார்க்கும்போது திமுக-பாஜக சமரசமாகி விட்டனவா? என அரசியல் ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர். இதுகுறித்த உங்கள் கருத்தை கீழே பதிவிடுங்கள்.

News August 16, 2024

மகளிர் உரிமைத் தொகை ₹1000 .. அதிகாரப்பூர்வ விளக்கம்

image

மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக, மாநிலம் முழுவதும் சிறப்பு முகாம் நடத்தப்படவுள்ளதாக சமூக வலைதளங்களில் செய்தி வெளியானது. இந்த தகவலை அதிகாரப்பூர்வமாக மறுத்துள்ள தமிழ்நாடு அரசு, மகளிர் உரிமை தொடர்பாக சிறப்பு முகாம் நடைபெறவில்லை என விளக்கமளித்துள்ளது. மேலும், வாட்ஸ்ஆப் உள்ளிட்டவற்றில் வெளியாகும் இதுபோன்ற போலியான செய்திகளை மக்கள் நம்ப வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

News August 16, 2024

டிச. வரை கார்கள் விலையில் DISCOUNT?

image

கார் விலை DISCOUNT சலுகைகள் டிச. வரை நீட்டிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. விற்பனை குறைந்து வந்த நிலையில், அதை ஈடு கட்ட 2 மாதங்களாக விலை தள்ளுபடி உள்ளிட்ட சலுகைகளை மாருதி சுசூகி, ஹியூன்டாய், டாடா உள்ளிட்ட நிறுவனங்கள் அளிக்கின்றன. கடந்தாண்டு ஆகஸ்டுடன் ஒப்பிடுகையில், நடப்பாண்டு ஆகஸ்டில் இது 2 மடங்கு அதிகரித்துள்ளது. இந்த சலுகை விழாக்காலம் முழுவதும் அளிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

News August 16, 2024

INDO-TIBET படை வேலை: நாளை மறுநாளே கடைசி

image

INDO-TIBET படையில் காவலர் நிலை (டெய்லர், காப்லர்) பதவிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள 51 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை மறுநாள் கடைசி நாளாகும். இந்த வேலைக்கு <>https://recruitment.itbpolice.nic.in/rect/index.php <<>> இணையதளத்தில் ஜூலை 20 முதல் விண்ணப்பப்பதிவு நடைபெற்று வருகிறது. கல்வித் தகுதியாக 10ஆம் வகுப்பு தேர்ச்சி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆண்களுக்கு 44, பெண்களுக்கு 7 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

News August 16, 2024

போராட்டம் வாபஸ்: அண்ணாமலை

image

அத்திக்கடவு- அவிநாசி திட்டத்துக்காக 20ஆம் தேதி முதல் பாஜக நடத்துவதாக அறிவித்த தொடர் உண்ணாவிரத போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். அத்திட்டத்தை CM ஸ்டாலின் நாளை தொடங்கி வைப்பதாக அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இதை, பாஜக வரவேற்கிறது என்று அவர் கூறியுள்ளார். குழாய் பதிக்க நிலம் கொடுத்த விவசாயிகளுக்கான இழப்பீட்டை தொடக்க விழாவில் அறிவிக்கவும் வலியுறுத்தியுள்ளார்.

News August 16, 2024

இந்தியாவை நெருங்கும் குரங்கம்மை

image

இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் 3 பேருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. அவர்கள் மூவரும் அண்மையில் அரபு நாடுகளில் இருந்து வந்ததாக அந்நாட்டின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் மட்டுமே பரவி வந்த இந்த தொற்று, முதன் முதலாக ஐரோப்பா நாடான ஸ்வீடனில் நேற்று பரவியது. அங்கு ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை தெரிவித்தது.

News August 16, 2024

உடனே பதவி பறிப்பு: முதல்வர் சரவெடி

image

திமுக கவுன்சிலர்கள் யாராக இருந்தாலும், தவறு செய்தால் உடனே அவர்களின் பதவியை பறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்டச் செயலாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். சமீபத்தில் திமுக கவுன்சிலர்களே எதிர்ப்பு தெரிவித்ததால், நெல்லை, கோவை மேயர்கள் அடுத்தடுத்து பதவியை ராஜினாமா செய்தனர். இதில் ஒருபடி மேலே போய், நம்பிக்கை வாக்கெடுப்பில் நெல்லை மேயருக்கு எதிராக திமுக கவுன்சிலர்கள் வாக்களித்தனர்

News August 16, 2024

ரயில்வேயில் 1,376 வேலை: நாளை முதல் APPLY

image

இந்திய ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியங்கள் அறிவித்துள்ள 1,376 பணியிடங்களுக்கு நாளை முதல் விண்ணப்பப்பதிவு தொடங்கவுள்ளது. டயட்டிசியன், நர்சிங் சூப்பிரண்ட், ஆடியாலஜிஸ்ட், ஸ்பீச் தெரபிஸ்ட் உள்ளிட்ட 20 பதவிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஆட்சேர்ப்பு வாரிய இணையதளங்களில் செப். 16 வரை விண்ணப்பிக்கலாம். பொது பிரிவினருக்கு ₹500, பட்டியல் பிரிவினருக்கு ₹250 தேர்வு கட்டணம்.

News August 16, 2024

2025 ஜன. முடிவடையும் ஜார்கண்ட் சட்டசபை

image

<<13867459>>தேர்தல் <<>>தேதி இன்று அறிவிக்கப்படவுள்ள ஜார்க்கண்ட் சட்டசபையில் ஹேமந்த் சோரன் தலைமையிலான JMM கூட்டணி அரசுக்கு 47 இடங்கள் (மொத்தம் 82) உள்ளன. இதில் JMM 27, காங்கிரஸ் 18, ஆர்ஜேடி 1, சிபிஎம் 1 இடங்கள் உள்ளன. எதிர்க்கட்சிகளுக்கு 30 இடங்கள் உள்ளன. சட்டசபை பதவிக்காலம் 2025 ஜன. முடிவடைகிறது. மோசடி வழக்கில் கைதான சோரன் ஜாமினில் வந்த நிலையில், தேர்தல் தேதி அட்டவணை இன்று வெளியாகவுள்ளது.

error: Content is protected !!