India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நபிகள் நாயகம் முஸ்லிம் மக்களுக்காக 4 கடமைகளை முன் வைத்துள்ளார். அவை என்னென்ன?
1) பெற்றோருக்கு துஆ (வணக்கம்) செய்து பாவ மன்னிப்பு கோருவது
2) பெற்றோர் வாக்குறுதியை நிறைவேற்றுவது
3) நண்பர்களை கண்ணியப்படுத்துவது
4) உறவினர்களுடன் சேர்ந்து இருப்பது.
இந்த 4 கடமைகளை செய்ய தவறக் கூடாது என்றும் அவர் கேட்டு கொண்டுள்ளார்.
நாடு முழுவதும் மருத்துவர்கள் நாளை வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர். கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டதற்கு நீதி கேட்டு போராடியவர்கள் மீது வன்முறை கட்டவிழ்க்கப்பட்டதைக் கண்டித்து ஸ்டிரைக் நடத்தப்படுவதாக IMA தெரிவித்துள்ளது. நாளை காலை 6 மணி முதல் ஞாயிறு காலை 6 மணி வரை ஸ்டிரைக் நடைபெறும் எனவும், அத்தியாவசிய சேவை பிரிவுகள் மட்டுமே செயல்படும் என்றும் கூறியுள்ளது.
மத்திய அரசு வெறுப்பை பரப்பும் நோக்கத்துடன் பிரிவினைவாத சிந்தனையை ஊக்குவிப்பதாக காங்கிரஸ் தலைவர் கார்கே விமர்சித்துள்ளார். சுதந்திர போராட்டத்தில் சாதி, மதம், இன பாகுபாடுகளை கடந்து அனைவரும் நாட்டு விடுதலைக்காக போராடியதாக தெரிவித்த அவர், சுதந்திர போராட்டத்தில் எந்த பங்களிப்பும் இல்லாதவர்கள் தியாகிகளின் பட்டியலில் இடம்பெற விரும்புகின்றார்கள் என பாஜகவை மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
மழை குறித்து IMD விடுக்கும் மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு எச்சரிக்கைக்கு என்ன அர்த்தம் எனத் தெரிந்து கொள்ளலாம். மஞ்சள் எச்சரிக்கை எனில் கனமழை பெய்யும். 24 மணி நேரத்தில் 6.4 செ.மீ.- 11.5 செ.மீ. வரை மழை பெய்யும். ஆரஞ்சு எச்சரிக்கை என்றால் மிக கனமழை பெய்யும். 11.5 செ.மீ.-20.4 செ.மீ. வரை மழை பெய்யும். சிவப்பு எச்சரிக்கை எனில், அதிகனமழை பெய்யும். 24 மணி நேரத்தில் 20.4. செ.மீ.க்கு மேல் மழை பெய்யும்.
தைவான் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கிழக்கு நகரமான ஹுவாலினில் இருந்து 34 கிமீ தொலைவில், 9.7 கிமீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 6.3 ரிக்டர் அளவுகோலில் பதிவாகியுள்ளது. இதனால் அந்நாட்டின் தலைநகர் தைபேவில் கட்டடங்கள் குலுங்கியதால், மக்கள் அலறியடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.
FAMILY MAN-2 வெப் சீரிஸ் இயக்குநர் ராஜ் நித்மோரும், சமந்தாவும் காதலிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நாக சைதன்யாவை டைவர்ஸ் செய்த பிறகு, நடிப்பில் அவர் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். அண்மையில், ராஜ் நித்மோர் இயக்கிய FAMILY MAN-2 வெப் சீரிசில் நடித்த சமந்தா, அவர் இயக்கி வரும் சிட்டாடல் ஹனி பன்னி சீரிசிலும் நடித்து வருகிறார். படப்பிடிப்பில் 2 பேரும் காதல் வயப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இன்று முதல் 4 நாள்கள் கனமழை பெய்யக்கூடும் என RMC தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் இன்று கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று RMC கூறியுள்ளது. திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, குமரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூரில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளது.
திருப்பத்தூர் அதிமுக Ex MLA ரமேஷ் (58) மாரடைப்பால் காலமானார். உடல்நலம் பாதிப்பால் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது உயிர் பிரிந்துள்ளது. எம்ஜிஆர், ஜெ.,வின் தீவிர விசுவாசியான இவர், அதிமுகவில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்தவர். அவரது மறைவிற்கு, இபிஎஸ், திமுக எம்எல்ஏ நல்லதம்பி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மத்திய ரிசர்வ் வங்கியில் (RBI) காலியாக உள்ள 94 அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். கல்வித் தகுதி இளநிலை பட்டம் முடித்திருக்க வேண்டும். முதல் கட்ட தேர்வு, முதன்மை தேர்வு, நேர்முகத் தேர்வு என்ற அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இன்று மாலை 6 மணி வரை இதற்கு விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு www.rbi.org.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
வெள்ளிக்கிழமை துர்க்கை வழிபாடு மேற்கொள்வது பல பயன்களை தரும் என ஆன்மிகம் சொல்கிறது. குறிப்பாக ராகு காலத்தில் மேற்கொள்ளும் வழிபாடால் துர்க்கை நல்வழி காட்டுவார் என்றும், அரண் போல தீமையை தடுப்பார் என்றும் கூறுகிறது. துர்கா தேவிக்கு அம்பிகை, சூலினி என்ற பெயர்களும் உண்டு. இந்த பெயரில் உள்ள மந்திரங்களை சொல்லி வழிபட்டால் கைமேல் பலன் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.