news

News August 16, 2024

33 டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம்

image

டிஎஸ்பிக்கள் 33 பேர் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர். ஐபிஎஸ் அதிகாரிகள், ஐஏஎஸ் அதிகாரிகள் அடுத்தடுத்து பணியிட மாறுதல் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வரிசையில், 33 டிஎஸ்பிக்களை தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி சங்கர் ஜிவால் பணியிட மாறுதல் செய்து உத்தரவிட்டுள்ளார். அதன்படி, தருமபுரி மாவட்டம் பாலக்கோடு டிஎஸ்பி சிந்து, கோவை பொது விநியோக கடத்தல் தடுப்பு டிஎஸ்பி ஜனனி உள்ளிட்டோர் மாற்றப்பட்டுள்ளனர்.

News August 16, 2024

IPL மெகா ஏலம் நிறுத்தம்?: ஜெய்ஷா பதில்

image

நன்கு செட்டிலாகிய அணிகள் மெகா ஏலத்தை விரும்பவில்லை எனவும், செட்டிலாகாத அணிகள் ஏலத்தை விரும்புவதாகவும் BCCI செயலாளர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார். அதேபோல் இம்பேக்ட் பிளேயர் விதியில் சில சாதகங்கள், பாதகங்கள் உள்ளதாகவும், அணி நிர்வாகங்களுடனான சமீபத்திய சந்திப்பில் இது தொடர்பாக விவாதித்தாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், மெகா ஏலம் குறித்த இறுதி முடிவு விரைவில் தெரியவரும் என தெரிவித்துள்ளார்.

News August 16, 2024

mpox: மருத்துவத்துறை அலர்ட்

image

100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிவரும் குரங்கு அம்மையால் உலகளாவிய அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், காங்கோ, மத்திய ஆப்பிரிக்காவில் இருந்து தமிழகம் வரும் பயணிகளை விமான நிலையத்தில் சோதனை செய்ய மருத்துவத்துறை அறிவுறுத்தியுள்ளது. தோல் அரிப்பு, 2 -4 வாரம் காய்ச்சல், தலை, தசை, முதுகு வலி, சீழ் நிறைந்த புண்கள் குரங்கு அம்மை அறிகுறி. இது மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகளிடம் இருந்தும் பரவக்கூடியது.

News August 16, 2024

ஸ்வீடனிலும் பரவிய Mpox

image

ஸ்வீடனில் ஒருவருக்கு Mpox (குரங்கு அம்மை) வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் ஜேகப் தெரிவித்துள்ளார். ஆப்பிரிக்க நாடுகளில் மட்டும் தொற்று பரவி வந்த நிலையில், ஐரோப்பிய நாடுகளிலும் தற்போது பரவத் தொடங்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, தொற்று பரவலின் தீவிரத் தன்மையை உணர்ந்த WHO, நேற்று அவசர நிலை பிரகடனம் செய்தது குறிப்பிடத்தக்கது.

News August 16, 2024

அவந்தா குழும ₹678 கோடி சொத்துக்கள் முடக்கம்

image

வங்கி மோசடி, சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் அவந்தா குழும ₹678 கோடி சொத்துக்களை ED முடக்கியது. தொழிலதிபர் கவுதம் தாபரின் (படத்தில் இருப்பவர்) அவந்தா குழுமம், SBI உள்ளிட்ட வங்கிகளிடம் ₹2,400 கோடி கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாததோடு, ₹1,307 கோடியை வேறு நிறுவனத்துக்கு திருப்பி விட்டதை ED கண்டுபிடித்தது. இதுதொடர்பாக தாபர் மீது வழக்குப்பதிந்து ₹14 கோடி சொத்தை ஏற்கெனவே ED முடக்கியது.

News August 16, 2024

நயன்தாராவிடம் இவ்வளவு சொத்துக்களா?

image

மும்பையில் ₹100 கோடியில் சொகுசு பங்களா, ஹைதராபாத்தில் தலா ₹30 கோடி மதிப்பில் 2 அப்பார்ட்மெண்ட்களை நயன்தாரா வைத்துள்ளார். ₹50 கோடியில் தனி விமானம், ₹2.76 கோடி மதிப்பில் 2 சொகுசு கார்களும் வைத்துள்ளார். இதுபோக ₹10 கோடியை Lip Balm நிறுவனத்திலும், அரபு நாடுகளில் எண்ணெய் தொழிலில் ₹100 கோடியும் முதலீடு செய்துள்ளார். மேலும், ₹50 கோடியில் ரவுடி பிக்சர்ஸ் என்ற படத் தயாரிப்பு நிறுவனத்தையும் கொண்டுள்ளார்.

News August 16, 2024

10 நாள்களில் ஒரு “டூவீலர்” விபத்து கூட இல்லை

image

சென்னையில் கடந்த சில ஆண்டுகளில் முதல்முறையாக 10 நாள்களில் ஒரு இருசக்கர வாகன விபத்து கூட நடைபெறாதது தெரிய வந்துள்ளது. சுமார் 45 லட்சம் வாகனங்கள் இயக்கப்படும் நிலையில், மொத்த விபத்துகளில் 45% அவையே காரணமாக இருந்தன. இந்நிலையில் போக்குவரத்து கூடுதல் ஆணையர் சுதாகர் மேற்பார்வையில் போக்குவரத்து போலீஸ் எடுத்த விழிப்புணர்வால் விபத்து நடைபெறாதது புள்ளிவிவரம் மூலம் தெரிய வந்துள்ளது.

News August 16, 2024

அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் CBSE உத்தரவு

image

தேசிய கல்வி பாடத் திட்டத்தை (NCERT) 9-12ம் வகுப்பு வரை கட்டாயமாக்கி CBSE பள்ளிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அப்பள்ளிகளுக்கு CBSE அனுப்பியுள்ள உத்தரவில், இந்த கல்வியாண்டு முதல் 9-12 வகுப்புகளில் NCERT குழு உருவாக்கிய புத்தகங்களை பயன்படுத்துவது கட்டாயம் எனக் கூறப்பட்டுள்ளது. 1-7 வகுப்புகள், அந்த நூல்களை பயன்படுத்துவது ஊக்குவிக்கப் படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

News August 16, 2024

₹2.15 கோடி கொடுத்து வீரரை தூக்கிய ‘தமிழ் தலைவாஸ்’

image

புரோ கபடி 11ஆவது சீசனுக்கான ஏலம் நேற்று தொடங்கிய நிலையில், சச்சின் டன்வார் என்ற வீரரை தமிழ் தலைவாஸ் அணி ₹2.15 கொடுத்து வாங்கியுள்ளது. நடப்பு ஏலத்தில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரராக அவர் இருக்கிறார். போன சீசனில் பாட்னா அணிக்காக விளையாடிய அவர் அரையிறுதி வரை கொண்டு சென்றார். அவருக்கு அடுத்ததாக முகமது ரேஸாவை ₹2.07 கோடிக்கு ஹரியானா வாங்கியுள்ளது. மொத்தம் 8 பேர் ₹1 கோடிக்கு மேல் வாங்கப்பட்டனர்.

News August 16, 2024

திமுகவுக்கு சான்றிதழ் அளிக்க தேவையில்லை: ஆர்.எஸ்.பாரதி

image

திமுகவின் தேசிய பற்றுக்கு யாரும் சான்றிதழ் அளிக்க தேவையில்லை என ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளார். திராவிடம் பிடிக்கவில்லை என்று கூறும் ஆளுநர் ஆர்.என்.ரவி, தேசிய கீதத்தில் உள்ள திராவிடத்தை எடுத்துவிட்டு பாடுவாரா என கேள்வி எழுப்பிய அவர், அப்படி செய்தால் ஆளுநர் ஆர்.என்.ரவி சிறைக்கு தான் செல்ல வேண்டும் எனவும் அவர் சாடினார். முன்னதாக, திராவிடம் பிரிவினையை ஆதரிப்பதாக ஆளுநர் விமர்சித்திருந்தார்.

error: Content is protected !!