India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆர்.என் ரவி திராவிடத்தை பற்றி பேச தகுதி இல்லாதவர் என எம்.பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். ஆர்.என்.ரவி ஆளுநராக நீடித்திருப்பது தமிழ்நாட்டுக்கும், இந்திய அரசியல் சாசனத்துக்கும் நல்லதல்ல என விமர்சித்த அவர், தமிழர்களின் பன்முகத்தன்மையை எதிர்த்து கேள்வி கேட்க அவருக்கு எந்த தகுதியும் இல்லை எனவும் விமர்சித்துள்ளார். முன்னதாக, திராவிடம் மக்களை பிளவுப்படுத்தியதாக ஆர்.என.ரவி கூறியிருந்தார்.
மே.வங்க பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், நேரில் ஆஜராக 5 மருத்துவர்களுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. ஆக.9 ஆம் தேதி பலாத்காரம் செய்யப்பட்டு பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை அம்மாநில உயர் நீதிமன்றம் சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது. இந்நிலையில், பெண் மருத்துவர் மரணம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள், அவரின் பெற்றோரிடம் வாக்கு மூலம் பெற்றனர்.
தென்னாப்பிரிக்கா எதிரான டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் ஆட்டநேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 97/7 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் ஹோல்டர் அதிகபட்சமாக 33 ரன்கள் எடுத்தார். SA அணியின் வியன் முல்டர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முன்னதாக முதல் இன்னிங்ஸில் SA அணி 160 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியின் பெடிங்காம் 28, டி பீட் 38 ரன்கள் எடுத்தனர்.
பூமி கண்காணிப்புக்கான இ.ஓ.எஸ்-08 செயற்கைக்கோளை எஸ்.எஸ்.எல்.வி-டி3 ராக்கெட் மூலம் இன்று விண்ணில் ஏவப்பட உள்ளது.
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து காலை 9:17 மணிக்கு இந்த செயற்கை கோள் விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான கவுண்டவுன் நேற்று தொடங்கியது. இந்த செயற்கைக்கோள் பூமியில் இருந்து 475 கி.மீ தூரத்தில் நிலை நிறுத்தப்பட உள்ளதாகவும், இதன் பணிக்காலம் ஓராண்டாகவும் இருக்கும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
சன்னபட்னா இடைத்தேர்தலில் போட்டியிட உள்ளதாக கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். தற்போது கனகபுரா தொகுதி எம்.எல்.ஏவாக இருக்கும் அவர், இடைத்தேர்தலில் வென்று கனகபுரா தொகுதியை தனது சகோதரருக்கு விட்டு கொடுக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அமைச்சராக உள்ள குமாரசாமி, சன்னபட்னா தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2 ஆண்டுகளில் 2ஆவது முறையாக குரங்கு அம்மையை சர்வதேச பொது சுகாதார அவசர நிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. குரங்கம்மை தொற்று இதுவரை 116 நாடுகளில் பரவியதையடுத்து இந்த அறிவிப்பை WHO வெளியிட்டுள்ளது. காங்கோ குடியரசில் பரவத் தொடங்கிய தொற்றால் இந்த ஆண்டு மட்டும் இதுவரை 524 பேர் பலியாகியுள்ளனர். 96% பாதிப்புகள் காங்கோவில் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
▶1991 – இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் இம்பால் அருகே விபத்துக்குள்ளாகியதில், அதில் பயணம் செய்த 69 பேர் உயிரிழந்தனர்.
▶1906 – சிலியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 3,882 பேர் உயிரிழந்தனர்.
▶1962 – பிரபல தமிழ் நடிகை அம்பிகா பிறந்த தினம்
▶1964 – நடிகை மனிஷா கொய்ராலா பிறந்த தினம்
▶1970 – பிரபல பாலிவுட் நடிகர் சைப் அலி கான் பிறந்த தினம்
கெஜ்ரிவால் விடுதலையானதும், அவரது மனைவி சுனிதாவின் அரசியல் பயணம் முடிவுக்கு வரலாம் என மனீஷ் சிசோடியா கூறியுள்ளார். கெஜ்ரிவால் சிறையில் இருந்த நேரத்தில் கட்சியின் வளர்ச்சிக்கு சுனிதா பாலமாக செயல்பட்டதாக தெரிவித்த அவர், சுனிதாவின் பரப்புரை பேச்சுக்களை பார்த்து தான் ஆச்சரியப்பட்டதாகவும் வியப்பு தெரிவித்தார். 17 மாத சிறைவாசத்துக்கு பிறகு கடந்த வாரம் சிசோடியா ஜாமினில் விடுதலையானார்.
ரோஹித், கோலி போன்ற வீரர்களை துலீப் கோப்பையில் விளையாட கட்டாயப்படுத்த முடியாது என ஜெய் ஷா தெரிவித்துள்ளார். சீனியர் வீரர்கள் காயமடைந்தால் அவர்களின் இடத்தை நிரப்புவது எளிதல்ல என்று தெரிவித்த அவர், ஆஸி., இங்கிலாந்து அணியின் முன்னணி வீரர்கள் கூட உள்ளூர் போட்டிகளில் விளையாடுவதில்லை என்று தெரிவித்தார். கோலி, ரோஹித் கடைசியாக 2010 மற்றும் 2016இல் உள்ளூர் போட்டிகளில் விளையாடினர்.
▶குறள் பால்: அறத்துப்பால்
▶இயல்: பாயிரவியல்
▶அதிகாரம்: நீத்தார் பெருமை
▶குறள் எண்: 24
▶குறள்:
உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து.
▶பொருள்: அறிவு என்னும் கருவியினால் ஐம்பொறிகளாகிய யானைகளை அடக்கி காக்க வல்லவன், மேலான வீட்டிற்கு விதை போன்றவன்.
Sorry, no posts matched your criteria.