India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அசாமில் உள்ள காமாக்யா கோயிலில் நிலத்தடி நீர் வற்றாமல் சுரந்து கொண்டே இருக்கிறது. ஒடிசாவில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் தெய்வ சிலைக்கு நிஜமான முடியும், வியர்வை வடிவதாகவும் கூறப்படுகிறது. பூரி ஜெகன்நாதர் கோயில் கோபுரத்தில் உள்ள கொடி, காற்று வீசும் திசைக்கு எதிராக பறப்பதாக கூறுகின்றனர். மேலும், சூரியன் எந்த திசையில் இருந்தாலும் கோபுரத்தின் நிழல் தரையில் விழாது என்று கூறப்படுகிறது.
தம்பி விஜய் புத்திசாலி, அவர் அரசியலில் சிறப்பாக செயல்பட வேண்டும் என நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு வாழ்த்து தெரிவித்துள்ளார். பாஜக கூட்டணிக்கு விஜய்யை அழைக்க மாட்டேன் என்றும், அவர் ரொம்ப புத்திசாலி, அவருக்கு அறிவுரையே தேவையில்லை எனவும் புகழ்ந்து கூறினார். மேலும், NCW தலைவர் பதவியை ராஜினாமா செய்ததற்கு எந்த அழுத்தமும் காரணம் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
ரிசர்வ் வங்கியால் வங்கிகளுக்கு நிர்ணயிக்கப்படும் கடன் உள்குறிப்பு விகிதமான MCLR-ஐ, SBI வங்கி 10 புள்ளிகள் (0.10) உயர்த்தியுள்ளது. இதனால் அந்த வங்கியில் நுகர்வோர் வாங்கிய வீடு, வாகன கடன்கள் சற்று அதிகரிக்கக்கூடும். இந்த உயர்த்தப்பட்ட விகிதம் இன்று முதல் அமலானது. SBIயின் இணைய தள தகவலின்படி, ஓராண்டுக்கான MCLR 8.85 சதவீதத்தில் இருந்து 8.95 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் பாகத்தில் அனைவரும் இறந்துவிடும் நிலையில், 9 ஆண்டுகளுக்கு பிறகு தரமான ட்விஸ்டுடன் 2ஆம் பாகத்தை இயக்குநர் அஜய் ஞானமுத்து எடுத்துள்ளார். படத்தில் வரும் திகில் காட்சிகள் சீட்டின் நுணிக்கு ரசிகர்களை தள்ளி விடுகிறது. இரண்டு பாகங்களையும் இணைக்கும் காட்சி சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளது. அருள்நிதியும், பிரியா பவானி சங்கரும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். Way 2 News ரேட்டிங் 3/5.
கொல்கத்தா அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக இருந்த இளம்பெண், பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனிடையே, அவரது டைரியை அவரது தந்தை நேற்று போலீஸில் ஒப்படைத்தார். தான் கொலை செய்யப்படுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பாக டைரியில் அவர் ஒரு குறிப்பை எழுதியிருந்தார். தான் எம்.டி. படிப்பில் தங்கப் பதக்கம் பெற வேண்டும் என அவர் எழுதி இருக்கிறார்.
இயக்குநரும், நடிகருமான சேரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாள்களுக்கு முன்பு கடலூர் – புதுச்சேரி சாலையில் தொடர்ந்து ஹாரன் அடித்ததாக கூறி தனியார் பேருந்து ஓட்டுநரிடம் சேரன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். பேருந்தில் பொருத்தப்பட்ட சிசிடிவி காட்சியில் பதிவான வீடியோ சாட்சிகளுடன் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர தின உரை நேரத்தில், பிரதமர் மோடியே, அவரது சாதனையை முறியடித்துள்ளார். 2016 ஆம் ஆண்டு மோடி 96 நிமிடங்கள் உரையாற்றியதே இதுவரை சாதனையாக இருந்தது. இந்நிலையில், இன்று 98 நிமிடங்கள் உரையாற்றி, அவரது சாதனையை, அவரே கடந்துள்ளார். தொடர்ச்சியாக 11 முறை மோடி சுதந்திர தின உரையாற்றியுள்ள நிலையில், அவரது சராசரி உரை நேரம் 82 நிமிடங்கள் ஆகும். வேறு எந்த இந்திய பிரதமரும் இவ்வளவு நேரம் உரையாற்றியதில்லை.
குறைந்த நேரம் சுதந்திர தின உரையாற்றிய இந்திய பிரதமர்கள் பற்றி பார்க்கலாம். ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி ஆகியோர், சுருக்கமாக சுதந்திர தின உரையாற்றிய பிரதமர்கள் ஆவர். 1954 ஆம் ஆண்டு நேரு 14 நிமிடங்கள் மட்டுமே உரையாற்றிய நிலையில், 1966 ஆம் ஆண்டு இந்திரா காந்தியும் வெறும் 14 நிமிடங்களே உரை நிகழ்த்தியுள்ளார். நேருவின் அதிகபட்ச சுதந்திர தின உரை நேரம் 72 நிமிடங்கள் ஆகும்.
தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என IMD எச்சரித்துள்ளது. குமரி, நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திமலை, ராணிப்பேட்டையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டுள்ளது. நாளையும் 12 மாவட்டங்களில் கனமழையும், நீலகிரி, கோவையில் மிக கனமழையும் பெய்யக்கூடும் என்று கூறியுள்ளது.
விமான நிலையத்தில் உச்சரிக்க கூடாத வார்த்தைகள் சில உள்ளன. அதை மீறி உச்சரித்தால் சட்ட நடவடிக்கைகள் பாயும். பயங்கரவாதி, வெடிகுண்டு, ஏவுகணை, துப்பாக்கி அல்லது ஆயுதங்கள், தீ, கடத்தல் உள்ளிட்ட வார்த்தைகளை பேசக்கூடாது. பாதுகாப்பு சோதனையின் போது, கோபத்தில் பையில் வெடிகுண்டா இருக்கிறது என பேசியதற்காக டெல்லி மற்றும் கொச்சி விமான நிலையத்தில் இரண்டு பயணிகள் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.