India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாட்டின் 78ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, டெல்லி செங்கோட்டையில் PM மோடி இன்று காலை தேசிய கொடி ஏற்றினார். சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் தேசிய கொடி ஏற்றி வைத்து CM ஸ்டாலின் மரியாதை செலுத்த உள்ளார். நாடு முழுவதும் முக்கிய நகரங்கள், எல்லை பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னையில் 9,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ரஷ்யா – உக்ரைன் இடையே அமைதி நிலவ இந்தியா மேற்கொள்ளும் முயற்சி வரவேற்கத்தக்கது என அமெரிக்கா தெரிவித்துள்ளது. பல பிரச்னைகள் குறித்து இந்தியாவுடன் பேசி வருவதாகவும், உக்ரைனின் இறையாண்மையை காப்பதற்கான இந்தியாவின் பங்களிப்பை வரவேற்பதாகவும் அமெரிக்க வெளியுறவுத்துறையின் துணை செய்தி தொடர்பாளர் வேதாந்த் படேல் கூறியுள்ளார். மோடி ஆக. 21 – 23 தேதிகளில் போலந்து, உக்ரைனுக்கு பயணம் மேற்கொள்வார் எனத் தெரிகிறது.
சுதந்திர தினத்தையொட்டி, நாட்டுக்காக பாடுபட்ட வீரர்களை நினைவு கூறுமாறு PM மோடி கேட்டுக்கொண்டார். சுதந்திர தின வாழ்த்து தெரிவித்த அவர், உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு நாடு கடன்பட்டுள்ளதாக கூறினார். 40 கோடி மக்கள் தான் பிரிட்டிஷ் அரசை எதிர்த்ததாகவும், தற்போது நமது மக்கள் தொகை 140 கோடி உள்ள நிலையில், 2047க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
நடிகர் விஜய்யை எப்போது சந்தித்தாலும் ஒரு விதமான பதற்றம் தொற்றிக் கொள்வதாக நடிகை கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த், சிரஞ்சீவியை சந்திக்கும் போது இருக்கும் அதே உணர்வு விஜய்யை சந்திக்கும் போதும் இருப்பதாகவும், அவர் மீதுள்ள மரியாதை எப்போதும் மாறாதது என்றும் அவர் தெரிவித்துள்ளார். ‘பைரவா’ மற்றும் ‘சர்க்கார்’ ஆகிய படங்களில் இருவரும் இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது.
பூமி கண்காணிப்புக்கான EOS-08 செயற்கைக்கோள், SSLV-D3 ராக்கெட் மூலம் நாளை விண்ணில் ஏவப்பட உள்ளது. இந்த EOS-08 ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து நாளை காலை 9:17 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான கவுண்டவுன் இன்று தொடங்கப்பட உள்ளது. இது பூமியில் இருந்து 475 கி.மீ உயரத்திலும் 37.4 டிகிரி சாய்விலும் நிலை நிறுத்தப்பட இருப்பதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
ஆப்பிரிக்கா கண்டத்தில் Mpox தொற்று பரவல் அதிகரித்ததைத் தொடர்ந்து, உலக சுகாதார நிறுவனம் (WHO) அவசரநிலை பிரகடனப்படுத்தியுள்ளது. காங்கோவில் பரவிய தொற்று, அண்டை நாடுகளான கென்யா, உகாண்டா உள்ளிட்ட 13 நாடுகளுக்கும் 13 நாடுகளிலும் பரவி உள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் 2ஆவது முறையாக இத்தொற்று பரவி வருகிறது. இதனால் தற்போது வரை 517 பேர் உயிரிழந்துள்ளனர். காய்ச்சல், சீழ் நிறைந்த புண்கள் இதன் அறிகுறிகளாகும்.
சுதந்திர தினத்தையொட்டி, தமிழகத்தில் உள்ள முக்கிய கோயில்களில் இன்று சமத்துவ விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. அறநிலையத்துறை சார்பில் இன்று சிறப்பு வழிபாடு நடத்தப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து பிற்பகலில் சமத்துவ விருந்தும் வழங்கப்பட உள்ளது. கோயில்களில் நடைபெறும் இந்த சமத்துவ விருந்தில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ‘தங்கலான்’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடித்துள்ள ‘டிமான்ட்டி காலனி 2’ திரைக்கு வந்துள்ளது. கீர்த்தி சுரேஷ் நடிப்பில் மாற்று மொழி கற்பதில் உள்ள சிக்கல்களை பேசும் ‘ரகு தாத்தா’ படமும் வெளியாகியுள்ளது. 3 படங்களில் ரேஸில் எது முந்தப் போகிறது, எதை ரசிகர்கள் கொண்டாடப் போகின்றனர் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கென்யா அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் தோதா கணேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். 2026ம் ஆண்டு டி20 உலகக் கோப்பைக்கு தகுதி பெறும் நோக்கில் புதிய பயிற்சியாளரை கென்ய கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது. 20 அணிகள் டி20 உலகக் கோப்பையில் பங்கேற்க உள்ள நிலையில், இதுவரை இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட 12 அணிகள் விளையாட தகுதி பெற்றுள்ளன.
மும்பை அடல்சேது பாலத்தில் விரிசல் விழுந்துள்ள நிலையில், பாலத்தின் ஒப்பந்ததாரருக்கு ₹1 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மும்பை மற்றும் அருகில் உள்ள நவிமும்பை இணைக்கும் வகையில், கடலில் 22 கி.மீ. தூரத்துக்கு 6 வழி சாலையாக இந்த பாலம் அமைக்கப்பட்டது. ₹17 ஆயிரத்து 843 கோடி செலவில் பிரம்மாண்டமாக உருவான இந்த பாலம், 2016இல் அடிக்கல் நாட்டப்பட்டு கடந்த ஜனவரியில் பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டது.
Sorry, no posts matched your criteria.