news

News August 15, 2024

இந்தியாவில் 2036ல் ஒலிம்பிக்ஸ்: பிரதமர்

image

இந்தியாவில் 2036ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கிவிட்டதாக பிரதமர் மோடி சுதந்திர தின உரையில் தெரிவித்துள்ளார். ஜி20 மாநாட்டை நடத்தியதன் மூலம் பெரிய நிகழ்வுகளை இந்தியாவால் நடத்த முடியும் என்று நிரூபித்துள்ளதாகவும், இந்தியாவின் அடுத்த கனவு 2036 ஒலிம்பிக்ஸ்தான் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், பாரா ஒலிம்பிக்ஸில் பங்கேற்கும் வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

News August 15, 2024

ஆளுநரின் தேநீர் விருந்தில் முதல்வர் பங்கேற்பு

image

சுதந்திர தினத்தையொட்டி, ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் அரசு சார்பில் CM ஸ்டாலின் பங்கேற்பதாக அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். ஆளுநரின் பொறுப்பிற்கு மதிப்பளிக்கும் வகையில் அவரது அழைப்பை ஏற்று பங்கேற்பதாக அவர் கூறினார். முன்னதாக, கூட்டணி கட்சிகள் இவ்விருந்தை புறக்கணிப்பதாக கூறிய நிலையில், திமுகவும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக நேற்று தெரிவித்திருந்தது.

News August 15, 2024

கம்பீர் பரிந்துரையில் மோர்கல் தேர்வு

image

கவுதம் கம்பீர் பரிந்துரையின் அடிப்படையிலே, இந்திய அணியின் பவுலிங் பயிற்சியாளராக மோர்கல் தேர்வு செய்யப்பட்டதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். லக்‌ஷ்மிபதி பாலாஜி, R.வினய் குமார் ஆகியோர் பயிற்சியாளருக்கான தேர்வில் இருந்தாலும், மோர்கலையே கம்பீர் பரிந்துரைத்துள்ளார். சென்னையில் செப். 19ல் தொடங்கும் வங்கதேச தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து பவுலிங் பயிற்சியாளராகப் பொறுப்பேற்பார்.

News August 15, 2024

‘பொது சிவில் சட்டம் காலத்தின் கட்டாயம்’

image

பொது சிவில் சட்டம் காலத்தின் கட்டாயம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுதந்திர தின உரையில் அவர் பேசுகையில், இப்போதைய சிவில் சட்டம் மத ரீதியாகவும், பாரபட்சமாகவும் இருப்பதாக பெரும்பான்மையின மக்கள் கருதுகின்றனர். இதுபற்றி அனைவரும் கருத்து தெரிவிக்க வேண்டும். பெரிய அளவில் விவாதிக்க வேண்டும். பாரபட்சமான சட்டத்தை ரத்து செய்தே ஆக வேண்டும் எனக் கூறினார்.

News August 15, 2024

தியாகிகள் பென்சன் ₹21,000ஆக உயர்வு

image

தியாகிகள் பென்சன் ₹21,000ஆக உயர்த்தப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். முன்னதாக, அவர்களுக்கான பென்சன் தொகை ₹20,000ஆக இருந்தது. விடுதலைப் போராட்ட வீரர்களின் குடும்பங்களுக்கான ஓய்வூதியம் 11,000ல் இருந்து ₹11,500ஆக உயர்த்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். நாட்டின் 78ஆவது சுதந்திர தினத்தையொட்டி, கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றிய அவர், பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

News August 15, 2024

தியாகிகளை எந்நாளும் போற்றுவோம்: விஜய்

image

விடுதலைக்காக பாடுபட்ட வீரர்களை, தியாகிகளை நினைவுகூர்ந்து எந்நாளும் போற்றுவோம் என விஜய் சுதந்திர தின வாழ்த்து தெரிவித்துள்ளார். சாதி, மத, இன, மொழி வேறுபாடுகளைக் கடந்து சமூக நல்லிணக்கத்துடன், வேற்றுமையில் ஒற்றுமையோடு வாழ்வோம். எண்ணற்ற உயிர்களைத் தியாகம் செய்து போராடிப் பெற்ற விடுதலையைக் கொண்டாடி மகிழ்வோம் என்று தெரிவித்துள்ளார். நாட்டின் வளர்ச்சிக்காக என்றென்றும் பாடுபடுவோம் எனவும் கூறியுள்ளார்.

News August 15, 2024

சுதந்திர தினம் பற்றி தெரியாத உண்மைகள்

image

முதல் சுதந்திர தின கொண்டாட்டத்தில் மகாத்மா காந்தி பங்கேற்கவில்லை. கல்கத்தாவில் 1906ஆம் ஆண்டு ஆக. 7ஆம் தேதி முதன்முதலாக தேசிய கொடி ஏற்றப்பட்டது. ஆரம்பத்தில் தேசிய கொடியில் மதக் குறியீடுகள், 8 ரோஜா பூக்கள் மற்றும் ‘வந்தே மாதரம்’ என்ற வசனம் எழுதப்பட்டிருந்தது. முதல் சுதந்திர தினத்தின் போது, நமது தேசிய கீதம் எழுதப்படவில்லை. 1950ல் தான் ரவீந்திரநாத் தாகூர் எழுதிய தேசிய கீதம் அரசால் ஏற்று கொள்ளப்பட்டது.

News August 15, 2024

75,000 புதிய மருத்துவ இடங்கள்: PM உறுதி

image

பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில், அடுத்த 5 ஆண்டுகளில் புதிதாக 75,000 மருத்துவ இடங்கள் உருவாக்கப்படும் என உறுதியளித்துள்ளார். மாணவர்கள் வெளிநாடுகளுக்கு உயர்கல்வி படிக்க செல்வதைக் கட்டுப்படுத்தும் வகையில் கல்வி துறையில் அரசு மாற்றம் ஏற்படுத்த முயல்வதாகவும், பெண்களுக்கு மரியாதை அளிப்பதுடன் நிறுத்தி விடாமல், அவர்களின் உள்ளார்ந்த தேவைகளை அரசு பூர்த்தி செய்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

News August 15, 2024

பதவியை ராஜினாமா செய்தது ஏன்? குஷ்பு விளக்கம்

image

மீண்டும் தீவிர அரசியலுக்கு திரும்புவதாக குஷ்பு தெரிவித்துள்ளார். தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தது குறித்து விளக்கமளித்த அவர், NCW பதவி கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டதாகவும், அந்த பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்துவிட்டதால், தற்போது சுதந்திரமாக செயல்பட முடியும் என்றும் கூறியுள்ளார். முன்னதாக, மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தராததால் அவர் அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டது.

News August 15, 2024

ஐநாவுக்கான இந்திய தூதராக பி.ஹரிஷ் நியமனம்

image

ஐக்கிய நாடுகள் சபையின் இந்திய தூதராக பி.ஹரிஷ் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய தூதராக பதவி வகித்து வந்த ருசிரா காம்போஜ் கடந்த ஜூன் மாதம் ஓய்வு பெற்றார். இதைத்தொடர்ந்து அந்த பதவி காலியாக இருந்து வந்தது. பி.ஹரிஷ் தற்போது ஜெர்மனிக்கான இந்திய தூதராக பதவி வகித்து வருகிறார். இவர் விரைவில் ஐநாவுக்கான இந்திய தூதராக பொறுப்பேற்க உள்ளார். இவர், 1990 வருட பேட்ஜை சேர்ந்த IRS அதிகாரி ஆவார்.

error: Content is protected !!