India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் பாதை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டது. ஆனால் அந்த ரூட்டில் மேம்பாலங்கள் அதிகம் இருப்பதால் இத்திட்டத்தில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில், தற்போது குறைந்த உயரத்திலான ரயில் பாலம் மூலமாக இத்திட்டத்தை செயல்படுத்த மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதன் திட்ட அறிக்கை ஒரு வாரத்தில் தயாரிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
சுதந்திர தின உரையில் கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் கொலையை சுட்டிக்காட்டி பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர், நாடே கோபத்தில் கொந்தளித்து கொண்டிருப்பதை அறிவேன். உங்களின் கோபத்தை என்னால் உணர முடிகிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு பயத்தை விதைக்கும் நேரம் இது. பெண்களை சீண்டினால் தூக்கில் தொங்க வேண்டும் என கயவர்களுக்கு தெரிய வேண்டும் என காட்டமாக கூறினார்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ₹1000 திட்டத்தின் இம்மாதத்திற்கான தவணை பயனர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி வங்கிக் கணக்கில் ₹1000 வரவு வைக்கப்படுகிறது. 1 கோடிக்கும் அதிகமான பெண்கள் இத்திட்டத்தால் பயனடைகின்றனர். மேல் முறையீடு செய்தவர்களில் விடுபட்டவர்கள் ஒரு சிலருக்கும் இம்மாதம் பணம் செலுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. உங்கள் கணக்கில் பணம் வந்துவிட்டதா?
ஹர்திக் பாண்டியாவின் செயல்பாடுகளை பார்த்து உத்வேகம் அடைந்ததாக இந்திய ஹாக்கி அணியின் துணை கேப்டன் ஹர்திக் சிங் தெரிவித்துள்ளார். முக்கியமான போட்டிகளில் பாண்டியாவின் சிறப்பான செயல்பாடு தனக்கு ஊக்கம் அளிப்பதாகவும், கடந்த 4-5 ஆண்டுகளாக சிறப்பாக விளையாடி வருவதாகவும் அவர் கூறியுள்ளார். பாரிஸ் ஒலிம்பிக்ஸில் இந்தியா வெண்கலம் வெல்ல ஹர்திக் சிங்கின் பங்களிப்பு முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது.
வரும் பொங்கல் முதல் ‘முதல்வர் மருந்தகம்’ என்ற புதிய திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக CM ஸ்டாலின் அறிவித்தார். பொதுப்பெயர் வகை மருந்துகளும், பிற மருந்துகளும் குறைந்த விலையில் கிடைக்கும் என்றும், முதற்கட்டமாக 1,000 மருந்தகங்கள் அமைக்கப்படும் எனவும் தெரிவித்தார். இதை சிறப்பாக செயல்படுத்த மருந்தாளுநர்கள், கூட்டுறவு அமைப்புகளுக்கு கடன் உதவியோடு, ₹3 லட்சம் மானியம் வழங்கப்படும் என்றும் கூறினார்.
தமிழக ரயில்வே திட்டங்களுக்கு கூடுதல் நிதி வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ள ரயில்வே திட்டங்களை அடுத்த 5 ஆண்டுகளில் செயல்படுத்தி முடிக்கவும், அதற்கான நிதி ஒதுக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளார். மேலும், தமிழக ரயில்வே திட்டங்களுக்கான நிதி ரூ.875 கோடியில் இருந்து ரூ. 246 கோடியாக குறைக்கப்பட்டுள்ளதையும் கண்டித்துள்ளார்.
இந்தியாவில் 2036ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கிவிட்டதாக பிரதமர் மோடி சுதந்திர தின உரையில் தெரிவித்துள்ளார். ஜி20 மாநாட்டை நடத்தியதன் மூலம் பெரிய நிகழ்வுகளை இந்தியாவால் நடத்த முடியும் என்று நிரூபித்துள்ளதாகவும், இந்தியாவின் அடுத்த கனவு 2036 ஒலிம்பிக்ஸ்தான் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், பாரா ஒலிம்பிக்ஸில் பங்கேற்கும் வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
சுதந்திர தினத்தையொட்டி, ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் அரசு சார்பில் CM ஸ்டாலின் பங்கேற்பதாக அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். ஆளுநரின் பொறுப்பிற்கு மதிப்பளிக்கும் வகையில் அவரது அழைப்பை ஏற்று பங்கேற்பதாக அவர் கூறினார். முன்னதாக, கூட்டணி கட்சிகள் இவ்விருந்தை புறக்கணிப்பதாக கூறிய நிலையில், திமுகவும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக நேற்று தெரிவித்திருந்தது.
கவுதம் கம்பீர் பரிந்துரையின் அடிப்படையிலே, இந்திய அணியின் பவுலிங் பயிற்சியாளராக மோர்கல் தேர்வு செய்யப்பட்டதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். லக்ஷ்மிபதி பாலாஜி, R.வினய் குமார் ஆகியோர் பயிற்சியாளருக்கான தேர்வில் இருந்தாலும், மோர்கலையே கம்பீர் பரிந்துரைத்துள்ளார். சென்னையில் செப். 19ல் தொடங்கும் வங்கதேச தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து பவுலிங் பயிற்சியாளராகப் பொறுப்பேற்பார்.
பொது சிவில் சட்டம் காலத்தின் கட்டாயம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுதந்திர தின உரையில் அவர் பேசுகையில், இப்போதைய சிவில் சட்டம் மத ரீதியாகவும், பாரபட்சமாகவும் இருப்பதாக பெரும்பான்மையின மக்கள் கருதுகின்றனர். இதுபற்றி அனைவரும் கருத்து தெரிவிக்க வேண்டும். பெரிய அளவில் விவாதிக்க வேண்டும். பாரபட்சமான சட்டத்தை ரத்து செய்தே ஆக வேண்டும் எனக் கூறினார்.
Sorry, no posts matched your criteria.