India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
2026 தேர்தலில் பாமகவுக்கு தலித் அமைப்புகள் ஆதரவளித்தால், அச்சமூகத்தவரை தங்களது கட்சி CM ஆக்கும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். கீழ்சிவிரி கிராமத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்டபின் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், மத்திய அமைச்சரவையில் பாமகவுக்கு முதன்முதலில் இடம் கிடைத்தபோது, பட்டியல் சமூகத்தவர் எழில்மலைக்கே பதவியை பாமக வழங்கியதாக கூறினார்.
இந்தியர்களாகிய நாம் தேச பக்தியை வெவ்வேறு விதங்களில் வெளிப்படுத்துகிறோம். அந்த வகையில், உ.பி.யின் மீரட்டை சேர்ந்த அபிஷேக் கெளதம் என்பவர் கார்கில் போரில் உயிர் நீர்த்த 631 இந்திய ராணுவ வீரர்களின் பெயர்களையும், தேச தலைவர்களின் படங்களையும் தனது முதுகில் பச்சை குத்தி அனைவரையும் நெகிழ செய்துள்ளார். பைக் ரைடரான அவர், லடாக் செல்லும்போது ராணுவ வீரர்களின் அர்ப்பணிப்பை கண்டு வியந்து இவ்வாறு செய்துள்ளார்.
வீட்டில் இருந்தே குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்கலாம். ஹோம் மேட் சாக்லேட்டுக்கு அதிக மவுசு இருப்பதால் அந்த தொழிலை செய்யலாம். அதேபோல் சென்னை போன்ற பெரு நகரங்களில் வீட்டு சாப்பாட்டுக்கு அதிக டிமாண்ட் இருப்பதால், சரியாக மார்கெட்டிங் செய்தால் அதிக லாபம் ஈட்டலாம். இயற்கை முறையில் சோப், ஷாம்பூ தயாரிக்கலாம். மேலும், பேக்கிங் உணவுவகைகள் மற்றும் மெழுகுவர்த்தி தயாரிப்பு ஆகியவையும் நல்ல லாபத்தை தரும்.
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி மேடையில் தேமுதிக தலைவர் பிரேமலதா கண் கலங்கியது காண்போரை கலங்கச் செய்தது. சுதந்திர தினத்தையொட்டி, தனியார் சேனலில் சிறப்பு நிகழ்ச்சியொன்று நடத்தப்பட்டது. இதில் விஜயகாந்த் சேவையை பாராட்டி வழங்கப்பட்ட விருதை பிரேமலதா பெற்று கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய பிரேமலதா, விஜயகாந்த் இல்லாத ஒவ்வொரு நிமிடத்தையும் நினைத்து பெரும் துன்பம் அடைவதாக கூறி கண்கலங்கினார்.
சுதந்திர தினத்தன்று மாநில முதலமைச்சரும், குடியரசு தினத்தன்று மாநில ஆளுநர்களும் தேசிய கொடியை ஏற்றுவர். 1974 முன்னர், ஆளுநர்களே சுதந்திர தினத்தன்றும் கொடியை ஏற்றிவந்தனர். ஆனால், முதல்வர்கள் கொடியேற்றும் உரிமையை பெற்றுத் தந்தவர் கருணாநிதி ஆவார். ஜனநாயக முறையில் தேர்வான முதல்வர்களுக்கு ஏன் அந்த உரிமையை வழங்கக்கூடாது என மத்திய அரசுக்கு கடிதங்கள் மூலம் கேள்வி எழுப்பி, உரிமையை பெற்றுத்தந்தார்.
அசாமில் உள்ள காமாக்யா கோயிலில் நிலத்தடி நீர் வற்றாமல் சுரந்து கொண்டே இருக்கிறது. ஒடிசாவில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் தெய்வ சிலைக்கு நிஜமான முடியும், வியர்வை வடிவதாகவும் கூறப்படுகிறது. பூரி ஜெகன்நாதர் கோயில் கோபுரத்தில் உள்ள கொடி, காற்று வீசும் திசைக்கு எதிராக பறப்பதாக கூறுகின்றனர். மேலும், சூரியன் எந்த திசையில் இருந்தாலும் கோபுரத்தின் நிழல் தரையில் விழாது என்று கூறப்படுகிறது.
தம்பி விஜய் புத்திசாலி, அவர் அரசியலில் சிறப்பாக செயல்பட வேண்டும் என நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு வாழ்த்து தெரிவித்துள்ளார். பாஜக கூட்டணிக்கு விஜய்யை அழைக்க மாட்டேன் என்றும், அவர் ரொம்ப புத்திசாலி, அவருக்கு அறிவுரையே தேவையில்லை எனவும் புகழ்ந்து கூறினார். மேலும், NCW தலைவர் பதவியை ராஜினாமா செய்ததற்கு எந்த அழுத்தமும் காரணம் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
ரிசர்வ் வங்கியால் வங்கிகளுக்கு நிர்ணயிக்கப்படும் கடன் உள்குறிப்பு விகிதமான MCLR-ஐ, SBI வங்கி 10 புள்ளிகள் (0.10) உயர்த்தியுள்ளது. இதனால் அந்த வங்கியில் நுகர்வோர் வாங்கிய வீடு, வாகன கடன்கள் சற்று அதிகரிக்கக்கூடும். இந்த உயர்த்தப்பட்ட விகிதம் இன்று முதல் அமலானது. SBIயின் இணைய தள தகவலின்படி, ஓராண்டுக்கான MCLR 8.85 சதவீதத்தில் இருந்து 8.95 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் பாகத்தில் அனைவரும் இறந்துவிடும் நிலையில், 9 ஆண்டுகளுக்கு பிறகு தரமான ட்விஸ்டுடன் 2ஆம் பாகத்தை இயக்குநர் அஜய் ஞானமுத்து எடுத்துள்ளார். படத்தில் வரும் திகில் காட்சிகள் சீட்டின் நுணிக்கு ரசிகர்களை தள்ளி விடுகிறது. இரண்டு பாகங்களையும் இணைக்கும் காட்சி சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளது. அருள்நிதியும், பிரியா பவானி சங்கரும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். Way 2 News ரேட்டிங் 3/5.
கொல்கத்தா அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக இருந்த இளம்பெண், பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனிடையே, அவரது டைரியை அவரது தந்தை நேற்று போலீஸில் ஒப்படைத்தார். தான் கொலை செய்யப்படுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பாக டைரியில் அவர் ஒரு குறிப்பை எழுதியிருந்தார். தான் எம்.டி. படிப்பில் தங்கப் பதக்கம் பெற வேண்டும் என அவர் எழுதி இருக்கிறார்.
Sorry, no posts matched your criteria.