India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சர்வதேச மனித உரிமை நிறுவனமான Human Rights Watch வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை தொடர்வதாக கூறப்பட்டுள்ளது. சிறுபான்மையினருக்கு எதிராக நிகழ்ந்த 28 வன்முறை சம்பவங்களில் 12 முஸ்லிம்களும், ஒரு கிறிஸ்தவ பெண் ஒருவரும் பலியாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், மோடியின் 173 தேர்தல் பிரசாரங்களில், 110 முறை முஸ்லிம்களுக்கு எதிராக அவர் பேசியுள்ளதாகவும் கூறியுள்ளது.
ஆடிவெள்ளி, வரலட்சுமி பூஜையையொட்டி, பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. மதுரை, குமரி, நிலக்கோட்டை உள்ளிட்ட அனைத்து மலர் சந்தைகளிலும் விலை உயர்ந்துள்ளது. குறிப்பாக, ஓசூர் மலர் சந்தையில் ₹500-க்கு விற்பனையான மல்லிகைப்பூ ஒருகிலோ ₹1,500க்கும், ₹1,000க்கு விற்பனையான கனகாம்பரம் ₹3,000க்கும், முல்லை, அரளிப்பூ, வாடாமல்லி, ஜாதிமல்லி உள்ளிட்ட பூக்களின் விலையும் உயர்ந்துள்ளது.
பாடநூல் விலை உயர்வுக்கு ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். அவரது X பக்க பதிவில், நடுத்தர குடும்பத்தில் பிறந்து நல்ல நிலைக்கு வர வேண்டும் என்கிற பெற்றோருக்கும் பிள்ளைகளுக்குமான கல்வி கனவில் கூட கல்லை தூக்கி போட்டுள்ளது திமுக அரசு என விமர்சித்துள்ளார். கார்ப்பரேட் அரசுக்கு கார் ரேஸ் நடத்த காசு இருக்கு, ஏழை பிள்ளைகளுக்கு புத்தகத்தை விலை குறைவாக கொடுக்க காசு இல்லை எனவும் அவர் சாடியுள்ளார்.
விஜயகாந்த் நல்ல உடல்நிலையோடு உயிருடன் இருந்திருந்தால், தமிழக அரசியலே திசை மாறி இருக்கும் என திருமாவளவன் தெரிவித்தார். சுதந்திர தினத்தையொட்டி தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் பேசிய அவர், விஜயகாந்த்தை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி மக்கள் நல கூட்டணி போட்டியிட்டதை நினைவு கூர்ந்தார். கல்லூரி படிக்கும்போது, விஜயகாந்த் படங்களை விரும்பி பார்ப்பேன் என்றும் தெரிவித்தார்.
1948 ஜூன் 30 தேதிக்குள் அதிகாரத்தை இந்தியாவிடம் ஒப்படைக்க, மவுண்ட்பேட்டன் பிரபுவுக்கு, பிரிட்டிஷ் பாராளுமன்றம் ஆணையிட்டது. 2ஆம் உலகப்போரில் ஜப்பான் சரணடைந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதியை வெற்றி தினமாக பிரிட்டன் கொண்டாடும் நிலையில், அதே நாளையே இந்திய சுதந்திர நாளாக மவுண்ட்பேட்டன் தேர்ந்தெடுத்தார். இதனையடுத்து, ஜூலை 4. 1947-இல் பிரிட்டிஷ் ஹவுஸ் ஆஃப் காமன்ஸ், இந்திய சுதந்திர மசோதாவை நிறைவேற்றியது.
பணக்காரர் ஆவதற்கு பொருளாதார நிபுணர்கள் சில வழிமுறைகளை பின்பற்ற கோருகின்றனர். *முடிந்த வரையில் சேமிப்பை சிறு வயதிலேயே தொடங்க வேண்டும். *தேவையில்லாத கடன்களை தவிர்க்க வேண்டும். *பல்வேறு வழிகளில் வருவாயை அதிகரிக்க வேண்டும். *செலவுகளை குறைக்க வேண்டும். *சிறந்த முதலீட்டை தேர்வு செய்ய வேண்டும். *பல்வேறு துறைகளில் நீண்ட காலத்திற்கு பிரித்து முதலீடு செய்ய வேண்டும்.
டிராவிட் போல் செயல்பட விரும்புவதாக ஜூனியர் ஹாக்கி அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள ஸ்ரீஜேஷ் கூறியுள்ளார். டிராவிட் ஜூனியர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்த போது திறமையான இளம் வீரர்களை கண்டறிந்து பயிற்சி அளித்து சீனியர் அணிக்கு கொண்டு வந்ததாகவும், அதேபோல தானும் உருவாக்க விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், 2030க்குள் 15-20 வீரர்கள் சீனியர் அணியில் இருப்பார்கள் என்றார்.
முதல்வர் ஸ்டாலின் ஆக.27ல் அமெரிக்கா பயணம் மேற்கொள்ள உள்ளதாக அமைச்சர் டி.ஆர்.பி ராஜா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மிக முக்கியமான பல நிறுவனங்களின் தொழிலதிபர்களை சந்திக்க உள்ளதாக கூறிய அவர், பல்வேறு முதலீடுகளுக்கான ஒப்பந்தங்கள் அங்கு கையெழுத்தாக உள்ளதாகவும் தெரிவித்தார். எத்தனை நாள் பயணம் என்பது குறித்த விரிவான தகவலை முதல்வர் அலுவலகம் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஓலா நிறுவனம் முதன்முறையாக தனது எலக்ட்ரிக் பைக்கை அறிமுகம் செய்துள்ளது. Roadster Pro, Roadster, Roadster X என மொத்தம் 3 மாடல்கள் கொண்ட இந்த பைக்குகள் பல்வேறு வேரியன்ட்டுகளில் கிடைக்கும். Roadster Pro மாடல் 2 வேரியன்ட்களில் ₹1,99,999 முதலும், Roadster மாடல் 3 வேரியன்ட்களில் ₹1,04,999முதலும், Roadster X மாடல் 3 வேரியன்ட்களில் ₹74,999 முதலும் விற்பனைக்கு வந்துள்ளது. உங்களுக்கு பிடித்த மாடல் எது?
அக். 3-20ஆம் தேதி வரை நடைபெற உள்ள மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரை இந்தியாவில் நடத்த ICC பரிந்துரை செய்த நிலையில், BCCI அதை நிராகரித்துள்ளது. இந்தியாவில் அக்டோபர் மாதம் பருவமழை காலம் என்பதாலும், அடுத்த ஆண்டு மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடரை நடத்த இருப்பதாலும் ICC-யின் பரிந்துரையை நிராகரித்ததாக BCCI செயலாளர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார். ஆக.20ஆம் தேதி இது குறித்து ICC இறுதி முடிவு எடுக்க உள்ளது.
Sorry, no posts matched your criteria.