news

News August 15, 2024

ராகுலுக்கு பின் வரிசையில் சீட் கொடுத்தது ஏன்?

image

டெல்லியில் நடந்த சுதந்திர தின நிகழ்ச்சியில் ராகுல் காந்திக்கு பின் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. சுதந்திர தின நிகழ்ச்சிகளை பாதுகாப்புத் துறை அமைச்சகமே ஒருங்கிணைத்து வருகிறது. இந்நிலையில், இந்த சர்ச்சை குறித்து விளக்கம் அளித்த பாதுகாப்புத் துறை, ஒலிம்பிக் வீரர்களுக்கு முன்வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டதால், ராகுலுக்கு இடமளிக்க முடியவில்லை எனக் கூறியுள்ளது.

News August 15, 2024

தோனி ரசிகர்கள் கண்கலங்கிய நாள்

image

இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் தோனி கடந்த 2020ல் இதே நாளில் தான் (ஆக.15) சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார். 2019 உலக கோப்பையில் இந்தியா அரையிறுதியில் தோல்வியடைந்தபின் ODI போட்டிகளில் விளையாடாமல் இருந்த அவர், 2020ல் ஓய்வை அறிவித்தார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் IPL தொடரில் விளையாடிக்கொண்டு தான் வருகிறார். தோனி என்றதும் உங்கள் நினைவுக்கு வருவது என்ன?

News August 15, 2024

இசைப்புயல் அறிமுகமான நாள்

image

மணிரத்னம் இயக்கிய ‘ரோஜா’ படம் மூலம் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்படம் தமிழில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக இப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்தது. இந்தப்படம் வெளியாகி இன்றுடன் 32 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதையடுத்து #32YearsOfARRahman என்ற ஹேஸ்டேக் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

News August 15, 2024

இந்திய தேசிய கொடியின் கதை தெரியுமா?

image

இந்திய தேசிய கொடியை வடிவமைத்தவர் பிங்காலி வெங்கையா. 1921-இல் விஜயவாடாவில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில், வெங்கையா கொடியின் பல வடிவமைப்புகளை தந்தார். அதில் ஒன்றுக்கு காந்தி ஒப்புதல் அளித்தார். வெங்கையா வழங்கிய பதிப்பில் 2 கோடுகள் (சிவப்பு மற்றும் பச்சை), நடுவில் கதர் ராட்டை சக்கரம் இருந்தது. காந்தியின் ஆலோசனை படி, கொடியில் ஒரு வெள்ளைப் பட்டையை வெங்கையா சேர்த்தார். மூவர்ண கொடியாக மாறியது.

News August 15, 2024

முஸ்லிம்களுக்கு எதிராக 110 முறை பேசிய மோடி

image

சர்வதேச மனித உரிமை நிறுவனமான Human Rights Watch வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை தொடர்வதாக கூறப்பட்டுள்ளது. சிறுபான்மையினருக்கு எதிராக நிகழ்ந்த 28 வன்முறை சம்பவங்களில் 12 முஸ்லிம்களும், ஒரு கிறிஸ்தவ பெண் ஒருவரும் பலியாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், மோடியின் 173 தேர்தல் பிரசாரங்களில், 110 முறை முஸ்லிம்களுக்கு எதிராக அவர் பேசியுள்ளதாகவும் கூறியுள்ளது.

News August 15, 2024

பூக்களின் விலை உயர்வு

image

ஆடிவெள்ளி, வரலட்சுமி பூஜையையொட்டி, பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. மதுரை, குமரி, நிலக்கோட்டை உள்ளிட்ட அனைத்து மலர் சந்தைகளிலும் விலை உயர்ந்துள்ளது. குறிப்பாக, ஓசூர் மலர் சந்தையில் ₹500-க்கு விற்பனையான மல்லிகைப்பூ ஒருகிலோ ₹1,500க்கும், ₹1,000க்கு விற்பனையான கனகாம்பரம் ₹3,000க்கும், முல்லை, அரளிப்பூ, வாடாமல்லி, ஜாதிமல்லி உள்ளிட்ட பூக்களின் விலையும் உயர்ந்துள்ளது.

News August 15, 2024

கார் ரேஸூக்கு பணமிருக்கு, புத்தகத்திற்கு காசு இல்லை: DJ

image

பாடநூல் விலை உயர்வுக்கு ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். அவரது X பக்க பதிவில், நடுத்தர குடும்பத்தில் பிறந்து நல்ல நிலைக்கு வர வேண்டும் என்கிற பெற்றோருக்கும் பிள்ளைகளுக்குமான கல்வி கனவில் கூட கல்லை தூக்கி போட்டுள்ளது திமுக அரசு என விமர்சித்துள்ளார். கார்ப்பரேட் அரசுக்கு கார் ரேஸ் நடத்த காசு இருக்கு, ஏழை பிள்ளைகளுக்கு புத்தகத்தை விலை குறைவாக கொடுக்க காசு இல்லை எனவும் அவர் சாடியுள்ளார்.

News August 15, 2024

விஜயகாந்த் இருந்திருந்தால்.. திருமா பரபரப்பு பேச்சு

image

விஜயகாந்த் நல்ல உடல்நிலையோடு உயிருடன் இருந்திருந்தால், தமிழக அரசியலே திசை மாறி இருக்கும் என திருமாவளவன் தெரிவித்தார். சுதந்திர தினத்தையொட்டி தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் பேசிய அவர், விஜயகாந்த்தை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி மக்கள் நல கூட்டணி போட்டியிட்டதை நினைவு கூர்ந்தார். கல்லூரி படிக்கும்போது, விஜயகாந்த் படங்களை விரும்பி பார்ப்பேன் என்றும் தெரிவித்தார்.

News August 15, 2024

ஆகஸ்ட் 15, இந்திய சுதந்திர தினமாக தேர்வானது எப்படி?

image

1948 ஜூன் 30 தேதிக்குள் அதிகாரத்தை இந்தியாவிடம் ஒப்படைக்க, மவுண்ட்பேட்டன் பிரபுவுக்கு, பிரிட்டிஷ் பாராளுமன்றம் ஆணையிட்டது. 2ஆம் உலகப்போரில் ஜப்பான் சரணடைந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதியை வெற்றி தினமாக பிரிட்டன் கொண்டாடும் நிலையில், அதே நாளையே இந்திய சுதந்திர நாளாக மவுண்ட்பேட்டன் தேர்ந்தெடுத்தார். இதனையடுத்து, ஜூலை 4. 1947-இல் பிரிட்டிஷ் ஹவுஸ் ஆஃப் காமன்ஸ், இந்திய சுதந்திர மசோதாவை நிறைவேற்றியது.

News August 15, 2024

பணக்காரர் ஆவதற்கான சில வழிமுறைகள்

image

பணக்காரர் ஆவதற்கு பொருளாதார நிபுணர்கள் சில வழிமுறைகளை பின்பற்ற கோருகின்றனர். *முடிந்த வரையில் சேமிப்பை சிறு வயதிலேயே தொடங்க வேண்டும். *தேவையில்லாத கடன்களை தவிர்க்க வேண்டும். *பல்வேறு வழிகளில் வருவாயை அதிகரிக்க வேண்டும். *செலவுகளை குறைக்க வேண்டும். *சிறந்த முதலீட்டை தேர்வு செய்ய வேண்டும். *பல்வேறு துறைகளில் நீண்ட காலத்திற்கு பிரித்து முதலீடு செய்ய வேண்டும்.

error: Content is protected !!