India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
டெல்லியில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சியில் பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்று திரும்பிய வீரர்கள் கெளரவிக்கப்பட்டனர். அவர்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, “ஒலிம்பிக்கில் கலந்து கொண்ட நீங்கள் அனைவருமே சாம்பியன்தான். விளையாட்டுக்கு இந்திய அரசு தொடர்ந்து ஆதரவு அளிக்கும்” எனக் கூறினார். ஒலிம்பிக்கில் வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்டதற்கு பாஜக அரசு மீது விமர்சனங்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
தாமிரபரணி ஆற்றில் மூழ்கி பள்ளி, கல்லூரி மாணவிகள் உட்பட 3 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுதந்திர தினத்தையொட்டி, இன்று கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி, மாணவிகள் நெல்லை, காரையார் சொரிமுத்து அய்யனார் கோவில் அருகே ஆற்றில் குளித்தபோது, இந்த துயரமான சம்பவம் நடந்துள்ளது. அவர்களின் உடல்களை மீட்புக்குழுவினர் மீட்டுள்ளனர்.
உச்ச நீதிமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சியில், தலைமை நீதிபதி சந்திரசூட் தேசியக் கொடியேற்றினார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: சுதந்திரத்தை இன்று நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்கிறோம். சுதந்திரம் இல்லாதபோதுதான், அதன் அருமை தெரியவரும். வங்கதேசத்தை பாருங்கள். அங்கு தற்போது நடப்பதுதான், சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை நமக்கு நினைவூட்டுகிறது எனக் கூறினார்.
சுதந்திர தினத்தையொட்டி, ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற தேநீர் விருந்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சால்வை அணிவித்து, புத்தகம் ஒன்றை முதல்வர் பரிசளித்தார். ஆளுநர் அளித்த தேநீர் விருந்தில் துரைமுருகன், உதயநிதி, ஓபிஎஸ், அண்ணாமலை, பிரேமலதா , ஜி.கே.மணி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் அரசு உயரதிகாரிகள் பங்கேற்றனர்.
சென்னையில் இருந்து நெல்லை, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு விரைவு ரயில்கள் நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. எழும்பூர்- நெல்லை சிறப்பு ரயில் வருகிற 22ம் தேதி முதல் செப். 5 வரையும், வேளாங்கண்ணி ரயில் ஆக.23 முதல் செப். 8 வரையும், தாம்பரம்- ராமநாதபுரம் ரயில் ஆக.29 முதல் செப். 14 வரையும் நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே கூறியுள்ளது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துவரும் ‘G.O.A.T’ படத்தின் ட்ரெய்லர் நாளை மறுநாள் (ஆகஸ்ட் 17) மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. இந்த தகவலை விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர். விஜய், பிரசாந்த், லைலா, சினேகா, மீனாக்ஷி சௌத்ரி நடித்துள்ள இப்படம் செப்.5ஆம் தேதி திரைக்கு வர இருப்பது குறிப்பிடத்தக்கது. யாரெல்லாம் இப்படத்திற்கு வெயிட்டிங்?
கடந்த நிதியாண்டில் தொலைத்தொடர்புத் துறையின் மொத்த வருவாய் ₹3.36,066 கோடியாக அதிகரித்துள்ளதாக TRAI தெரிவித்துள்ளது. இது அதற்கு முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் 0.71% உயர்ந்துள்ளது. தொலைப்பேசி சந்தாதாரர்களின் எண்ணிக்கை மார்ச் மாதத்தில் 119.92 கோடியாக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டின் 117.23 கோடியுடன் ஒப்பிடுகையில் 2.30% அதிகமாகும். பயனாளர்கள் சராசரியாக ₹149.25/Month கட்டணம் செலுத்துகின்றனர்.
அலோபதி மருந்துகளை உட்கொள்வதால் ஆண்டுதோறும் கோடிக்கணக்கான மக்கள் உயிரிழப்பதாக பதஞ்சலி இணை நிறுவனர் பாபா ராம்தேவ் குற்றஞ்சாட்டியுள்ளார். மருத்துவ சுயசார்பு என்பது இன்னும் கனவாகவே உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். முன்னதாக, அலோபதி மருத்துவம் குறித்து தவறான விளம்பரங்களை வெளியிட்டதாக உச்சநீதிமன்றத்தில் ராம்தேவ் பகிரங்க மன்னிப்பு கேட்டார். இந்த வழக்கு கடந்த ஆக. 13ஆம் தேதி முடித்து வைக்கப்பட்டது.
மத்திய ரிசர்வ் வங்கியில் (RBI) காலியாக உள்ள 94 அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை (ஆக.16) கடைசி நாளாகும். கல்வி: இளநிலை பட்டம் முடித்திருக்க வேண்டும். முதல் கட்ட தேர்வு, முதன்மை தேர்வு, நேர்முகத் தேர்வு என்ற அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். நாளை மலை 6 மணி வரை இதற்கு விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு <
ஜெர்மன் வங்கி நிதி உதவியுடன் போக்குவரத்து கழகத்திற்கு பேருந்துகள் வாங்க உள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். மக்கள் மீது சுமையை ஏற்றக்கூடாது என்பதற்காகவே பேருந்து கட்டணத்தை உயர்த்தவில்லை என்ற அவர், நாட்டிலேயே தமிழகத்தில் தான் குறைந்த கட்டணத்தில் போக்குவரத்து வசதி உள்ளதாக தெரிவித்தார். மேலும், பேருந்துகளை இயக்க முடியாத குறுகிய சாலைகளில் மினி பஸ் இயக்க வேண்டிய சூழல் உள்ளதாகவும் கூறியுள்ளார்
Sorry, no posts matched your criteria.