news

News August 15, 2024

மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டி தரும் வங்கிகள்

image

மூத்த குடிமக்களுக்கு ஃபிக்ஸட் டெபாசிட்களில் அதிக வட்டி வழங்கும் வங்கிகள் குறித்து தெரிந்து கொள்வோம். HDFC 55 மாதங்கள் வரையிலான FDக்கு 7.9% வட்டி வழங்குகிறது. ICICI 15 மாதங்கள் முதல் 18 மாதங்கள் வரையிலான FDக்கு 7.8%, BOB 399 நாள்கள் வரையிலான FDக்கு 7.75%, கனரா வங்கி 444 நாள்கள் வரையிலான FDக்கு 7.75%, PNB 400 நாள்கள் வரையிலான FDக்கு 7.75%, SBI 444 நாள்கள் வரையிலான FDக்கு 7.75% வட்டி வழங்குகின்றன.

News August 15, 2024

நாளை அவசரமாக கூடுகிறது அதிமுக செயற்குழு

image

அதிமுக அவசர செயற்குழுக்கூட்டம், சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நாளை (ஆக.16) காலை நடைபெற உள்ளது. அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என கட்சித்தலைமை கேட்டுக்கொண்டுள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை, போதைப்பொருள் புழக்கம் உள்ளிட்டவை தொடர்பாக தீர்மானங்களை இயற்ற அதிமுக திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

News August 15, 2024

எனது குருவை சந்தித்தேன்.. எஸ்.ஜே. சூர்யா நெகிழ்ச்சி

image

நடிகர் அஜித்குமாரை நீண்ட இடைவெளிக்கு பிறகு எஸ்.ஜே. சூர்யா சந்தித்துள்ளார். விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி திரைப்படங்களில் அஜித் பிஸியாக உள்ளார். இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் அஜித்தும், எஸ்.ஜே. சூர்யாவும் இன்று சந்தித்தனர். தனது ட்விட்டர் பக்கத்தில் அஜித் உடனான புகைப்படத்தை பகிர்ந்த எஸ்.ஜே. சூர்யா, “பல ஆண்டுகளுக்கு பிறகு எனது குருவுடன் இருப்பதில் மகிழ்ச்சி” எனப் பதிவிட்டுள்ளார்.

News August 15, 2024

ஒலிம்பிக் சென்ற அனைவருமே சாம்பியன்தான்: மோடி

image

டெல்லியில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சியில் பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்று திரும்பிய வீரர்கள் கெளரவிக்கப்பட்டனர். அவர்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, “ஒலிம்பிக்கில் கலந்து கொண்ட நீங்கள் அனைவருமே சாம்பியன்தான். விளையாட்டுக்கு இந்திய அரசு தொடர்ந்து ஆதரவு அளிக்கும்” எனக் கூறினார். ஒலிம்பிக்கில் வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்டதற்கு பாஜக அரசு மீது விமர்சனங்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

News August 15, 2024

பள்ளி, கல்லூரி மாணவிகள் மரணம்

image

தாமிரபரணி ஆற்றில் மூழ்கி பள்ளி, கல்லூரி மாணவிகள் உட்பட 3 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுதந்திர தினத்தையொட்டி, இன்று கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி, மாணவிகள் நெல்லை, காரையார் சொரிமுத்து அய்யனார் கோவில் அருகே ஆற்றில் குளித்தபோது, இந்த துயரமான சம்பவம் நடந்துள்ளது. அவர்களின் உடல்களை மீட்புக்குழுவினர் மீட்டுள்ளனர்.

News August 15, 2024

‘வங்கதேசத்தை பாருங்கள்; சுதந்திரத்தின் அருமை தெரியும்’

image

உச்ச நீதிமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சியில், தலைமை நீதிபதி சந்திரசூட் தேசியக் கொடியேற்றினார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: சுதந்திரத்தை இன்று நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்கிறோம். சுதந்திரம் இல்லாதபோதுதான், அதன் அருமை தெரியவரும். வங்கதேசத்தை பாருங்கள். அங்கு தற்போது நடப்பதுதான், சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை நமக்கு நினைவூட்டுகிறது எனக் கூறினார்.

News August 15, 2024

ஆளுநர் மாளிகையில் ஸ்டாலின்

image

சுதந்திர தினத்தையொட்டி, ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற தேநீர் விருந்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சால்வை அணிவித்து, புத்தகம் ஒன்றை முதல்வர் பரிசளித்தார். ஆளுநர் அளித்த தேநீர் விருந்தில் துரைமுருகன், உதயநிதி, ஓபிஎஸ், அண்ணாமலை, பிரேமலதா , ஜி.கே.மணி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் அரசு உயரதிகாரிகள் பங்கேற்றனர்.

News August 15, 2024

சென்னை- தென்மாவட்ட சிறப்பு ரயில்கள் நீட்டிப்பு

image

சென்னையில் இருந்து நெல்லை, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு விரைவு ரயில்கள் நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. எழும்பூர்- நெல்லை சிறப்பு ரயில் வருகிற 22ம் தேதி முதல் செப். 5 வரையும், வேளாங்கண்ணி ரயில் ஆக.23 முதல் செப். 8 வரையும், தாம்பரம்- ராமநாதபுரம் ரயில் ஆக.29 முதல் செப். 14 வரையும் நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே கூறியுள்ளது.

News August 15, 2024

‘G.O.A.T’ ட்ரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

image

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துவரும் ‘G.O.A.T’ படத்தின் ட்ரெய்லர் நாளை மறுநாள் (ஆகஸ்ட் 17) மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. இந்த தகவலை விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர். விஜய், பிரசாந்த், லைலா, சினேகா, மீனாக்ஷி சௌத்ரி நடித்துள்ள இப்படம் செப்.5ஆம் தேதி திரைக்கு வர இருப்பது குறிப்பிடத்தக்கது. யாரெல்லாம் இப்படத்திற்கு வெயிட்டிங்?

News August 15, 2024

மாதா மாதம் ₹149.25 கட்டணம் செலுத்தும் மக்கள்

image

கடந்த நிதியாண்டில் தொலைத்தொடர்புத் துறையின் மொத்த வருவாய் ₹3.36,066 கோடியாக அதிகரித்துள்ளதாக TRAI தெரிவித்துள்ளது. இது அதற்கு முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் 0.71% உயர்ந்துள்ளது. தொலைப்பேசி சந்தாதாரர்களின் எண்ணிக்கை மார்ச் மாதத்தில் 119.92 கோடியாக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டின் 117.23 கோடியுடன் ஒப்பிடுகையில் 2.30% அதிகமாகும். பயனாளர்கள் சராசரியாக ₹149.25/Month கட்டணம் செலுத்துகின்றனர்.

error: Content is protected !!