India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் தனது ஆல் டைம் இந்தியா பிளேயிங் லெவன் அணியை அறிவித்துள்ளார். அதில், ரோஹித் மற்றும் கோலிக்கு இடம் அளித்த நிலையில், தோனியை அவர் தேர்வு செய்யவில்லை. DK அணி: சேவாக், ரோஹித், டிராவிட், சச்சின், கோலி, யுவராஜ், ஜடேஜா, அஷ்வின், கும்ப்ளே, பும்ரா, ஜாகீர் கான், ஹர்பஜன் சிங் (12வது வீரர்).
பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘தங்கலான்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஜி.வி. பிரகாஷின் பின்னணி இசையும், பாடல்களும் திரைப்படத்திற்கு கூடுதல் பலமாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர், “ஓ மை காட். தங்கலானுக்கு கிடைத்திருக்கும் அன்பு திக்குமுக்காட வைக்கிறது. எனது டீமுக்கும், இயக்குநர் பா. ரஞ்சித், விக்ரம் ஆகியோருக்கும் நன்றி” எனக் கூறினார்.
டெல்லியில் இன்று நடைபெற்ற சுதந்தர தின நிகழ்ச்சியில் ஒலிம்பிக் வீரர்களை பிரதமர் மோடி கெளரவித்தார். பின்னர் அவர்களுடன் மோடி கலந்துரையாடினார். அப்போது துப்பாக்கிச் சுடுதலில் 2 வெண்கலப் பதக்கங்களை பெற்ற மனு பாக்கர், தனது பிஸ்டலை பற்றி மோடியிடம் விவரித்தார். வெண்கல பதக்கம் வென்ற ஹாக்கி வீரர்கள், தாங்கள் கையொப்பமிட்ட ஹாக்கி மட்டையை மோடிக்கு பரிசாக வழங்கினர்.
70ஆவது தேசிய திரைப்பட விருதுகள் நாளை அறிவிக்கப்படவுள்ளன. இந்தியாவின் முக்கிய திரைப்பட விருதாக கருதப்படும் இவ்விருதுகளை, குடியரசுத் தலைவர் வழங்குகிறார். மத்திய அரசால் நியமிக்கப்பட்ட தேசியக் குழு விருதுக்கான வெற்றியாளர்களை தேர்வு செய்கிறது. சிறந்த திரைப்படம், இயக்குநர், நடிகர், நடிகை உள்பட பல பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்படவுள்ளன. விருது பெறும் என நீங்கள் நினைக்கும் படத்தை கமெண்ட் செய்யுங்கள்.
மூத்த குடிமக்களுக்கு ஃபிக்ஸட் டெபாசிட்களில் அதிக வட்டி வழங்கும் வங்கிகள் குறித்து தெரிந்து கொள்வோம். HDFC 55 மாதங்கள் வரையிலான FDக்கு 7.9% வட்டி வழங்குகிறது. ICICI 15 மாதங்கள் முதல் 18 மாதங்கள் வரையிலான FDக்கு 7.8%, BOB 399 நாள்கள் வரையிலான FDக்கு 7.75%, கனரா வங்கி 444 நாள்கள் வரையிலான FDக்கு 7.75%, PNB 400 நாள்கள் வரையிலான FDக்கு 7.75%, SBI 444 நாள்கள் வரையிலான FDக்கு 7.75% வட்டி வழங்குகின்றன.
அதிமுக அவசர செயற்குழுக்கூட்டம், சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நாளை (ஆக.16) காலை நடைபெற உள்ளது. அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என கட்சித்தலைமை கேட்டுக்கொண்டுள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை, போதைப்பொருள் புழக்கம் உள்ளிட்டவை தொடர்பாக தீர்மானங்களை இயற்ற அதிமுக திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
நடிகர் அஜித்குமாரை நீண்ட இடைவெளிக்கு பிறகு எஸ்.ஜே. சூர்யா சந்தித்துள்ளார். விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி திரைப்படங்களில் அஜித் பிஸியாக உள்ளார். இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் அஜித்தும், எஸ்.ஜே. சூர்யாவும் இன்று சந்தித்தனர். தனது ட்விட்டர் பக்கத்தில் அஜித் உடனான புகைப்படத்தை பகிர்ந்த எஸ்.ஜே. சூர்யா, “பல ஆண்டுகளுக்கு பிறகு எனது குருவுடன் இருப்பதில் மகிழ்ச்சி” எனப் பதிவிட்டுள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சியில் பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்று திரும்பிய வீரர்கள் கெளரவிக்கப்பட்டனர். அவர்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, “ஒலிம்பிக்கில் கலந்து கொண்ட நீங்கள் அனைவருமே சாம்பியன்தான். விளையாட்டுக்கு இந்திய அரசு தொடர்ந்து ஆதரவு அளிக்கும்” எனக் கூறினார். ஒலிம்பிக்கில் வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்டதற்கு பாஜக அரசு மீது விமர்சனங்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
தாமிரபரணி ஆற்றில் மூழ்கி பள்ளி, கல்லூரி மாணவிகள் உட்பட 3 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுதந்திர தினத்தையொட்டி, இன்று கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி, மாணவிகள் நெல்லை, காரையார் சொரிமுத்து அய்யனார் கோவில் அருகே ஆற்றில் குளித்தபோது, இந்த துயரமான சம்பவம் நடந்துள்ளது. அவர்களின் உடல்களை மீட்புக்குழுவினர் மீட்டுள்ளனர்.
உச்ச நீதிமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சியில், தலைமை நீதிபதி சந்திரசூட் தேசியக் கொடியேற்றினார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: சுதந்திரத்தை இன்று நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்கிறோம். சுதந்திரம் இல்லாதபோதுதான், அதன் அருமை தெரியவரும். வங்கதேசத்தை பாருங்கள். அங்கு தற்போது நடப்பதுதான், சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை நமக்கு நினைவூட்டுகிறது எனக் கூறினார்.
Sorry, no posts matched your criteria.